Published:Updated:

`சார்லி சார்லி’...இணையத்தைக் கலக்கும் பேய் விளையாட்டு!

`சார்லி சார்லி’...இணையத்தைக் கலக்கும் பேய் விளையாட்டு!

`சார்லி சார்லி’...இணையத்தைக் கலக்கும் பேய் விளையாட்டு!

`சார்லி சார்லி’...இணையத்தைக் கலக்கும் பேய் விளையாட்டு!

Published:Updated:

ற்போதைய இணைய வைரல், ஒரு திகில் விளையாட்டு. கடந்த ஏப்ரல் மாதத்தில் தனியார் டி.வி-யொன்று பள்ளிகளில் விளையாடும் பேய் விளையாட்டு குறித்து ஒரு தொகுப்பு வெளியிட, அதிலிருந்து உயிர்பெற்ற ‘சார்லி சார்லி’ கேம்தான் அது!

`சார்லி சார்லி’...இணையத்தைக் கலக்கும் பேய் விளையாட்டு!

ஜியார்ஜியாவைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியொருவர் இந்த கேமை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் #charliecharliechallenge ஹேஷ்டேக்வுடன் பதிவிட, ஆரம்பித்தது வைரல் வைபவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஷயம் இதுதான். ஒரு வெள்ளைத் தாளில் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு பென்சில்களை சிலுவையைப் போல வைக்க வேண்டும். நான்கு பக்கத்திலும் படத்தில் உள்ளதுபோல யெஸ்/நோ என்று எழுதி வைத்துக்கொண்டு, ‘சார்லி சார்லி... நாம் விளையாடலாமா?’ என்று அழைத்து, அவரவர் தங்களுக்குத் தோன்றும் கேள்வியைக் கேட்க, சில நொடிகளில் மேலிருக்கும் பென்சில் திரும்பி பதிலளித்து, திகிலூட்டுகிறது.

`சார்லி சார்லி’...இணையத்தைக் கலக்கும் பேய் விளையாட்டு!

ஆர்வக்கோளாறில் இதனைச் செய்து பார்க்கத் துணிந்த சிலர் பயத்தில் கதறும் களேபர வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் இணையத்தில் பதிவேற்றப்பட, இதுவரை அதனை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இந்த சேலஞ்ச் வைரலாக துவங்கிய இரண்டே தினங்களில், டிவிட்டர் பக்கத்தில் 2 மில்லியன் மக்கள் வரை  #charliecharliechallenge என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிப் பதிவிட்டு உள்ளனர். ஒவ்வொருவரும் அதுகுறித்த தங்களின் அனுபவங்களைப் பகிர, சிலரோ ‘இது ஒரு பித்தலாட்ட வேலை, பென்சில் பேலன்ஸ் இல்லாமல் நகர்வதை பேய் என்று பதறுகின்றனர்’ என்று விளக்கம் சொல்ல, சேலஞ்ச் கேமை ஆர்வமாக விளையாடுகிறார்கள் பலர். பதிவிட்டவர்கள் பெரும்பாலும் மெக்ஸிகன் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இது மெக்ஸிகன் நாட்டில்தான் துவங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது.

‘யாரந்த சார்லி?’ என்ற கேள்விக்கு ‘தற்கொலை செய்து கொண்ட ஒரு குழந்தை’, ‘இல்லை இல்லை... கார் விபத்தில் சார்லி பலியாகியிருக்கலாம்’ என்று காரணக் கதைகளும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கிறது.

சார்லியை அழைத்தவர்களின் அனுபவ வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=pDyyMkrJ6FU

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism