Published:Updated:

செல்லமான கியூட்டி!

செல்லமான கியூட்டி!

செல்லமான கியூட்டி!

செல்லமான கியூட்டி!

Published:Updated:

சீரியல் பிரியர்களோட செல்லமான கியூட்டி, ராஜ் டிவி டப்பிங் சீரியலான ‘மண்வாசனை'யில் இடம்பெறும் `ஆனந்தி’. இந்த இந்திப் பொண்ணு சமூக வலைதளங்கள்ல செம ஃபேமஸ். சுருள் முடி, சேர்ந்த புருவம்னு பாலிவுட் நடிகை கஜோலோட மினியேச்சர் மாதிரியே தோற்றம் என பலராலும் புகழப்படுற பொண்ணு. ஒரிஜினல் பேரு அவிகா கோர்.

செல்லமான கியூட்டி!

இந்த 18 வயசுப் புயல் இப்போ படிப்புல பிஸியா இருந்தாலும், கனவு பாலிவுட். ராஜ் டி.வி-யில் ‘மண் வாசனை’ (இந்தியில் ‘பாலிகா வது’), பாலிமர் டி.வி.யில் ‘மூன்று முடிச்சு (இந்தியில் ‘சாசுரல் சிமர் கா’) என நம்ம தமிழ்க் குடும்பங்களில் இடம் பிடிச்சிருக்கிற அவிகா, ‘மண்வாசனை’ சீரியலுக்காக மட்டும் மூன்று முறை இந்திய தொலைக்காட்சி அகாடமியின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வாங்கியிருக்காங்க. ஜூரி விருது, ராஜீவ் காந்தி விருது, வியட்நாம்ல ‘மண்வாசனை’ சீரியலுக்காக ‘ஃபேஸ் ஆஃப் த இயர்’ அவார்டுனு வாங்கி குவிச்சிருக்காங்க. இந்தி, தெலுங்கு, கன்னடம்னு இதுவரை ஆறு படங்களில் நடிச்சிருக்காங்க. தெலுங்குல ரெண்டு படம் நடிச்சிட்டு இருக்காங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் சினிமா டைரக்டர்ஸ்... கொஞ்சம் இங்கயும் அழைச்சுட்டு வாங்கப்பா!

`நான் ரொம்ப பிஸி!’

புதுப் புது நிகழ்ச்சிகள், கலர்ஃபுல் ஃபில்லர்கள், `சன் மியூசிக் ரேஞ்சே வேறப்பா’னு சொல்ற மாதிரி பல சேஞ்சுகள். அதுல காலைல வாழ்த்துகள் மற்றும் பாக்ஸ் ஆபீஸ்... இது இல்லாம `இங்க என்ன சொல்லுது’ ஃபில்லர்ஸ்னு அங்கங்க நல்ல புள்ள லுக்ல திரியற ஹரி, உங்ககிட்ட பேசறார்...

உங்களைப் பத்தி..?

சொந்த ஊரு கேரளா, ஆனா, பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னைதான். ராஜலக்ஷ்மி இன்ஜினீயரிங் காலேஜ்ல மெக்கானிக்கல் படிச்சேன். அதை முடிச்சுட்டு டி.சி.எஸ். மும்பைல ரெண்டு வருஷம் வேலைல இருந்தேன். இருந்தாலும் மீடியா மோகம் விடல. `ட்ரை பண்ணுவோம்... ட்ரை பண்ணாம எதாவது ஒரு பாயின்ட்ல லைஃப்ல ஃபீல் பண்ணக் கூடாது’னு ஆரம்பிச்சேன். வீட்ல ரொம்ப கம்பல் பண்ணினேன். `மீடியாவா முடியவே முடியாது’ன்னு கொஞ்சம் திட்டினாங்க. அப்புறம் அடம்பிடிச்சு ஒருவழியா எம்.பி.ஏ படிக்கணும்னு வேலைய விட்டுட்டு, அண்ணா யுனிவர்சிட்டியில சேர்ந்தேன், அப்படியே மீடியா கிளாஸ்.

டி.வி சான்ஸ் எப்படி கிடைச்சது?

பல பேர் சொல்ற டயலாக்தான். ஏறாத ஆபீஸ் இல்ல, போகாத கம்பெனி இல்ல... ரொம்பவே அலைஞ்சேன். சன் டி.வி, ஜீ தமிழ், ஜெயா... இங்கல்லாம் போட்டோ குடுத்தேன். முதல் ஷோ ஜீ தமிழ்ல. அப்பறம் சன் டி.வி-ல `நீங்க செலக்ட் ஆகிட்டீங்க’னு சொன்னாங்க. `ஆத்தா நான் பாஸாயிட்டேன்!’னு உள்ளுக்குள்ள சந்தோஷம். ஆனாலும் பயம். என்னோட ஃப்ரெண்ட்தான், `என்கிட்ட பேசுற மாதிரி பேசு போதும்’னு சொன்னாரு. அதையே செஞ்சேன். இப்போ பாக்ஸ் ஆபீஸ், காலைல வாழ்த்துகள், `இங்க என்ன சொல்லுது’ ஃபில்லர்ஸ்னு போயிகிட்டு இருக்கு.

செல்லமான கியூட்டி!

`வி.ஜே’ மட்டும்தான் ஃபுல்டைமா?

எம்.பி.ஏ படிச்சாச்சு... அப்பறம் சும்மா இருக்க முடியுமா? `வி.ஜே’ என்னோட ஆசை. ஆனா... அப்பா, அம்மா, லைஃப் இதெல்லாம் இருக்கே! ஐ.டி கம்பெனியில வேலை செய்யறேன். காலைல 6 மணிக்கு கிளம்பணும், அப்படியே ஷோ முடிச்சுட்டு 9 மணிக்கு வேலை, காலைல லேட் ஆனா அப்படியே சாயங்காலம் டைம் மெயின்டய்ன் பண்ணி வேலை செய்வேன். வீடு அம்பத்தூர். சென்னை டிராஃபிக் வேற. வீட்டுக்குப் போக ராத்திரி 11 மணி ஆகிடும்.

ஶ்ரீஹரியோட பலம், பலவீனம்..?

பலம் நம்பிக்கை, பலவீனம் மொழி. எனக்கு அடிக்கடி நாக்கு ரோல் ஆகும், சில உச்சரிப்பு சரியா பண்ணாம ரீ-டேக் வாங்குவேன். ஆனாலும் நம்பிக்கைய வெச்சு நாலு டேக்லயாவது `ஓ.கே’ பண்ணிடுவேன்.

ஊருக்கே வாழ்த்துகள் சொல்ற ஶ்ரீஹரிக்கு வாழ்த்துகள்!

செல்லமான கியூட்டி!

இதான் விளம்பரமா? இல்ல...     இதுதான் உங்க விளம்பரமா?

டி.வி ரிமோட் கூட சண்டை போட்டுகிட்டு இருந்தப்ப `எம் டி.வி’யில கலர்ஃபுல்லா ஒரு விளம்பரம். பாலிவுட் சல்மான்கான் வேற... சொல்லவா வேணும், கண்கொட்டாம பார்த்துகிட்டு இருந்தேன். ஸ்லோ மோஷன்ல சல்மான், ஒரு சூப்பர் டூப்பர் மாடல்... எக்குத்தப்பான டிரெஸ் வேற! ஒரு பெரிய டேபிள் மேல இருக்கற செஸ் போர்டு. காயின்ஸ நகர்த்தி, அப்புறம் காயின்ஸ தள்ளிவிட்டு... இப்படி `என்னய்யா சொல்ல வரீங்க?’ ரேஞ்சுக்கு, ஏதோ புது கேம் ஷோனு பாத்தா செம அவுட்டு. கட்டக் கடைசியா ஸ்ப்ளாஷ் ஃபேஷன்னு எண்ட் கார்டு விழுந்துச்சு. `அடக்கடவுளே! டிரெஸ் விளம்பரமா?’னு மண்டைக்கு மேல நாலு குருவி சுத்த ஆரம்பிச்சிடுச்சு. ஒரு விளம்பரத்தைப் புரிய வைக்க, அதுவும் இவ்ளோ பெரிய ஸ்டாரை வெச்சுக்கிட்டு எதுக்கு இம்புட்டு மெனகெடுறீங்க..! கோட் சூட்டோட நாலு ஸ்டெப் நடந்தாலே போதுமே! நல்லவேளை... `தம்ப்ஸ் அப்’ விஷால் மாதிரி ட்ரக் மேல வரலைனு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டு திரும்ப ரிமோட் சண்டைய ஆரம்பிச்சேன்.

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 150

அணுகுமுறை மாற்றம்... அவசியம்!

``மக்கள் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நொடிக்கு நொடி’ அதிரடி நிகழ்ச்சியில் வரும் ஆண் தொகுப்பாளர், தவறான பதில் சொல்பவர்களைக் கேலி, கிண்டலாகப் பேசுவது மிகுந்த எரிச்சலைத் தருகிறது. மேலும், பதில் தெரியாதவர்களை கலாய்ப்பதும் சரியாக பதில் சொல்பவர்களை `இல்லத்தரசி ஆனாலும் சரியாகச் சொல்லிவிட்டீர்களே...’ என இளப்பமாகப் பேசுவதும் வேதனையாக உள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் எனும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்’’ என்று அறிவுறுத்துகிறார் விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியில் இருந்து ம.ஜெயமேரி.

ஆஹா... அற்புதம்!

``விஜய் டி.வி-யில் சமீபத்தில் ஒளிபரப்பான ‘நீயா... நானா?’ நிகழ்ச்சியில் மேஜிக் கலைஞர்கள் விதவிதமான மேஜிக், மாயாஜாலங்களை செய்து அசத்தினர். இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரையும் ரசிக்க வைத்தது. தற்போது கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை குதூகலிக்க வைத்த பயனுள்ள நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. கண்கட்டு வித்தையாக ஒவ்வொரு கலைஞரும் செய்த மேஜிக்‌ ஷோ மிகவும் அற்புதம்!’’ என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் சென்னை, பெரம்பூரில் இருந்து பி.சந்திரகலா.

ஏற்றிவிடும் ஏணியாகுங்கள்!

``அனைத்து சேனல்களிலும் பலவகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் பங்கு பெறுபவர்கள் சின்னத்திரை, வெள்ளித்திரை சார்ந்த பிரபலங்களாகவே உள்ளனர். இதில் என்ன பெருமை இருக்கிறது? இவர்களைத் தவிர்த்து திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, அவர்களை ஏற்றிவிடும் ஏணியாக டி.வி சேனல்கள் ஏன் இருக்கக்கூடாது?’’ என்று கோரிக்கை வைக்கிறார் சேலத்தில் இருந்து பி.லதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism