Published:Updated:

ஆடிட்டர் ஆகலாம் வாங்க!

வாய்ப்புகள் பல தரும் வணிகப் படிப்பு

ஆடிட்டர் ஆகலாம் வாங்க!

வாய்ப்புகள் பல தரும் வணிகப் படிப்பு

Published:Updated:

பொறியியல் படிப்புகள் மீதான கவர்ச்சி குறைய ஆரம்பித்திருக்கும் இன்றைய சூழலில், பதினோராம் வகுப்பில் காமர்ஸ் குரூப்பிலும், கல்லூரியில் வணிகம் தொடர்பான கோர்ஸ்களிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆடிட்டர் ஆகலாம் வாங்க!

‘‘இது நல்ல மாற்றம்!’’ என்று வரவேற்கும் கல்வி ஆர்வலர் `ஆயிஷா’ நடராஜன், வணிகப் படிப்புகள் பற்றியும் அவை தரும் வளமான வாய்ப்புகள் பற்றியும் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடிட்டர் ஆகலாம் வாங்க!

‘‘காமர்ஸ் குரூப் எடுத்துப் படித்தவர்கள் கல்லூரியில் பி.காம், எம்.காம் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இன்றில்லை. பி.பி.ஏ, கம்பெனி செக்ரட்டரிஷிப் படிக்கலாம். பி.காம், ஃபினான்ஸ் மேனேஜ்மென்ட் படிக்கலாம். மேலும் பி.காம், கரஸில் படித்துக்கொண்டே, ஐசிஏஐ (ICAI - The Institute of Cost Accountants of India) நடத்தக் கூடிய போட்டித் தேர்வுகள் எழுதலாம். இதற்கு ப்ளஸ் டூ-வுக்குப் பின் பிரத்யேக கோச்சிங் கிளாஸ் சென்று படிக்கலாம். தேர்வாகிறவர்களுக்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் அக்கவுன்ட்ஸ், ஆடிட்டிங் துறைகளில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. மேலும், சி.ஏ எனப்படும் சாட்டர்டு அக்கவுன்டன்ட் படிக்கலாம். அரசு, தனியார் நிறுவனங்கள், தொழில்துறைகள் இவையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு பெருகுகிறதோ அங்கெல்லாம் நிதி நிர்வாகத் துறையில் கண்டிப்பாக ஆடிட்டர்களின் தேவை இருக்கிறது.

வளர்ந்து வரும் பங்குச் சந்தையின் முக்கியத்துவம், பங்கு வர்த்தக நிபுணர்களின் தேவையை அதிகரித்துள்ளது. பி.காம், ஸ்டாக் மார்க்கெட்டிங் போன்ற பங்குச் சந்தை தொடர்பான கோர்ஸ்களை முடித்தவர்கள், பங்கு வர்த்தகத் துறை பணிவாய்ப்புகளை வசமாக்கிக் கொள்ளலாம். அந்நிய செலாவணி, ஏற்றுமதி இறக்குமதி, இந்திய ரூபாய்க்கு ஈடான மற்ற நாடுகளின் பண மதிப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களும், பெரும்பாலும் காமர்ஸ் பட்டதாரிகள்தான்’’ என்றவர், ``பத்தாம் வகுப்பில் டாப் மதிப்பெண் எடுத்த மாணவர்களில் 40 சதவிகிதம் பேர் இன்று காமர்ஸ் குரூப்பையே தேர்வு செய்கிறார்கள்’’ என்ற தகவலைத் தந்து தொடர்ந்தார்.

‘‘ஐ.ஐ.டி-யின் எம்.ஏ முதுகலை படித்துவிட்டு, இந்திய திட்ட கமிஷனில் நேரடியாகவே நுழைவுத் தேர்வு எழுதி வேலைக்குச் செல்ல முடியும். பி.காம் படித்தவர்களுக்கு, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இண்டியன் ஃபினான்ஸ் சர்வீஸ் (ஐ.எஃப்.எஸ்) தேர்வு எழுதுவது சுலபமாக இருக்கும். எம்.காம்., எம்.ஃபில் முடித்து நெட் (NET) தேர்வெழுதி கல்லூரிப் பேராசிரியர் ஆகலாம், அல்லது எம்.காம்., பி.எட் முடித்து டெட் (TET) தேர்வெழுதி பள்ளி ஆசிரியர் ஆகலாம்’’ என்ற நடராஜன்,

‘‘ஆக, காமர்ஸ் படிப்புக்கான பணிவாய்ப்புகள் படர்ந்து கிடக்கின்றன, பயன்படுத்திக்கொள்ளுங்கள்!’’ என்று ஊக்கம் தந்தார்!

கே.அபிநயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism