Published:Updated:

இலக்கு ஒரு கோடி!

`பயோ கேஸ்' தயாரிப்பில் அசத்தும் தம்பதி!

இலக்கு ஒரு கோடி!

`பயோ கேஸ்' தயாரிப்பில் அசத்தும் தம்பதி!

Published:Updated:

‘‘வீட்டுல பயோ கேஸ் பிளான்ட் இருந்தா, கிச்சன் கழிவுகளில் இருந்தே வீட்டுக்குத் தேவையான பாதியளவு சமையல் எரிவாயுவை நாமே தயாரிக்க முடியும். பெரிய நிறுவனம், வீடுகள்னு பயோ கேஸ் பிளான்ட் அமைச்சுக் கொடுக்கிறதுதான் எங்க தொழில்!’’

இலக்கு ஒரு கோடி!

- சிறு அறிமுகத்துடன் ஆரம்பித்தார்கள், ‘கிரீன் கனெக்ட்’ பயோ கேஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஹரிணி - சைதன்யன் தம்பதி! இயற்கை ஆர்வலர்கள் என்ற புள்ளியில், கல்லூரி காலத்தில் ஒன்றிணைந்த இந்தக் காதல் ஜோடி, இன்று வெற்றிநடை போடுகிறார்கள்... வாழ்க்கையிலும், தொழிலிலும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் தங்கள் காதல் கதையைக் கல கலப்பாகக் கூறினார், சைதன்யன். ‘‘நான் பி.இ., மெக்கானிக்கல் படிச்சப்போ, கல்லூரி யில் ‘சோஷியல் ஆக்டிவிட்டீஸ் கிளப்’ ஆரம்பிச்சேன். அப்போ முதல் வருஷம் பி.டெக் படிச்ச ஹரிணியும் அதில் சேர்ந்தாங்க. ரெண்டு பேரும் ரொம்பவே பொறுப்பா வேலை செய்தோம். சேலம் குப்பைமேடு ஏரியாவுல, நகரத்தோட எல்லா குப்பைகளையும் கொட்டுவாங்க. அங்கே குடிநீர், காற்று மாசு பட்டு மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஆவணப் படம் எடுத்தோம். நல்ல வரவேற்பு கிடைச்சு, பிரச்னைக்குத் தீர்வும் கிடைச்சது. இப்படி நல்ல காரியங்களுக்காக மலர்ந்த எங்க நட்பு, காதலாச்சு.

நான், ஃபைனல் இயர் முடிச்சதும், ஹரிணி கொடுத்த ஐடியாவில்தான் பயோ கேஸ் பிசினஸில் இறங்கினேன். அப்போ இறுதியாண்டு படிச்சிட்டு இருந்த ஹரிணி, விடுமுறை நாட்களில் என் அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொடுப்பாங்க. எங்க காதலை வீட்டில் சொன்னப்போ, ஜாதியைச் சொல்லி பயங்கர எதிர்ப்பு. ‘குப்பைத் தொட்டியை வெச்சு பிசினஸ் பண்றவனா?’னு ஹரிணி வீட்டிலயும் என்னை ஏத்துக்கல. ‘ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணிப்போம். ஆனா, வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்தபிறகே கல்யாணம் பண்ணிப்போம்’னு சொல்லிட்டு, எங்களோட வேலையைப் பார்த்தோம்.

ஹரிணி, சென்னையில ஒரு நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தபடியே, எனக்குத் தொழிலில் ஆலோசனைகளும் ஊக்கமும் தந்தாங்க. அதனால, ரெண்டே வருஷத்துல எளிதா என்னால வெற்றியடைய முடிஞ்சது. சாதிச்ச சந்தோஷத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். குப்பைத்தொட்டி பிசினஸ்னு கிண்டல் பண்ணின ஹரிணி அப்பா வீட்டுல, இப்போ ஒரு பயோ கேஸ் பிளான்ட் வெச்சிக் கொடுத்திருக்கேன்!’’
 
- கலகலவெனச் சிரிக்கிறார் சைதன்யன்.

``பயோ கேஸ் பிளான்ட் பராமரிப்புக்கு ஒரு நாளைக்கு 15 நிமிடம் செலவழிச்சாலே போதும். இந்த பிளான்ட் 20 ஆண்டுகள் நல்ல பலன் கொடுக்கும். முதல் ஒரு வருஷத்துக்கு வரும் லாபம், முதலீட்டுக்கு சரியாகிடும். அடுத்த 19 ஆண்டுகளுக்கும் லாபம்தான்!’’ என்று சொல்லும் சைதன்யன், 11 ஆயிரம் ரூபாய் தொடங்கி, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120-க்கும் மேற்பட்ட பிளான்ட்டுகளை இதுவரை அமைத்திருக்கிறார்.

தொடர்ந்த ஹரிணி, ‘‘ஒரு பிளான்ட்டுக்கு 10 முதல் 15 பர்சன்ட் லாபம் கிடைக்கும். அதையே அடுத்த பிளான்ட்டுக்கு முதலீடாக்கிடுவோம். இதனால கடனே வாங்காமல், சொந்த பணத்திலேயே தொழிலை முன்னெடுத்துச் செல்றோம். நாலு வருஷத்துக்கு முன்ன இந்தத் தொழிலில் இறங்கினோம். முதல் ஆண்டு 4.5 லட்சமும், போன வருஷம் 25 லட்சமும் டர்ன் ஓவர் பண்ணினோம். இந்த வருஷம் எங்களோட இலக்கு, ஒரு கோடி!’’
 
- நிமிர்ந்து பார்க்க வைக்கிறது இந்த ஜோடி!

இலக்கு ஒரு கோடி!

எரிவாயு கலன்... இப்படித்தான்!

நான்கு பேர் வசிக்கும் குடும்பத்துக்கு, 2 - 3 கிலோ அளவிலான பயோ கேஸ் பிளான்ட் போதுமானது. தேவை அடிப்படையில் கூடுதலாக பிளான்ட் அமைக்கலாம். தேவையில்லாத உணவுப் பொருட்களை  சேமித்து, மிக்ஸியில் கூழ் மாதிரி அரைத்து, இருமடங்கு தண்ணீர் விட்டு, பிளான்ட் ‘இன்லெட்’ வழியாக ஊற்ற வேண்டும். 24 மணி நேரத்தில், உணவுப் பொருள் மக்கியதும் பயோ கேஸ் தயாராகி, பிளான்ட் மேல் பகுதியில் உள்ள டேங்கில் எரிவாயு (மீத்தேன் வாயு) சேகரமாகிவிடும்.

நான்கு பேர் இருக்கும் வீட்டுக்கு, ஒரு நாளைக்கு 300 கிராம் எரிவாயு தேவைப் படும். பயோ கேஸ் பிளான்ட் மூலமாக, ஒரு கிலோ உணவுக் கழிவிலிருந்து, 100 கிராம் எரிவாயு கிடைக்கும். இதனால் 50 நிமிடம் வரை அடுப்பு எரியும். மார்க்கெட் உணவுக் கழிவுகள், டீக்கடை கழிவுகளை பயன்படுத்தினால், சிலிண்டரே வாங்கத் தேவையில்லை! பேப்பர் கப், பேப்பர் குப்பை, தோட்டக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், இறைச்சி, பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்து எல்லாவற்றையும் பயன்படுத் தலாம். எரிவாயு தயாரான பிறகு எஞ்சும் கழிவு, இயற்கை உரமாக பயன்படும்.

கு.ஆனந்தராஜ்  படங்கள்: அ.நவின்ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism