Published:Updated:

மணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்!

மணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்!

மணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்!

மணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்!

Published:Updated:

டைகள் முதல் அலங்காரம் வரை, திருமணம் தொடர்பாக மணமகள் தேடும் அனைத்து அம்சங்களையும் தொகுத்துக் கொடுக்கிறது, ‘மேரிகோல்டு டேல்ஸ்’ வெப்சைட். இதை ஆரம்பித்தவர்கள், லாவண்யா மற்றும் விருபா. தோழிக்குத் தோழி என்ற வகையில் அறிமுகமான இவர்கள், இன்று தமிழ் மணப்பெண்கள் பலருக்கும் தோழியாக ஆலோசனைகள் சொல்லும் ‘மேரிகோல்டு டேல்ஸ்’ஸை ‘ஹாபி’யாக இயக்கிக்கொண்டிருக் கிறார்கள்! 

மணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்!

‘‘எங்கள் இருவருக்குமே உடைகள், மேக்கப், ஃபேஷன் டிரெண்டில் ஆர்வம். அந்தப் புள்ளியில்தான் இருவரும் இணைந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன் எனக்குத் திருமணம் முடிந்தது. சமீபத்தில்தான் விருபாவின் திருமணம் முடிந்தது. திருமணம் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடிய எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டோம். பெரும்பாலும் வட இந்தியத் திருமணங்கள் குறித்த தகவல்கள்தான் நிறைந்து கிடக்கிறது என்ற எங்களின் ஏமாற்றத்தைப் பகிர்ந்துகொண்டோம். ‘சீரும் சிறப்புமாக நடைபெறும் தமிழ்த் திருமணங்கள் பற்றிய தகவல்கள், வழிகாட்டல்களுக்கு நாமே ஒரு வெப்சைட் ஆரம்பிப்போம்!’ என்று ஆரம்பித்ததுதான் மேரிகோல்டு டேல்ஸ்!’’ என்று அறிமுகக் கதை சொன்னார் லாவண்யா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஒரு மணமகள் அறிந்துகொள்ள விரும்பும் தகவல்கள் அனைத்தும் இதில் கிடைக்கும். யார் யாருக்கு எந்த மாதிரியான மேக்கப் பொருந்தும், எந்தப் பட்டுக்கு எந்த மாடல் ஆபரணம் சூட் ஆகும், `டிசைனர் வேர்’-ல் இரவு நிகழ்ச்சிக்கு ஏற்றது எது, பகல் நிகழ்ச்சிக்கு ஏற்றது எது, இன்றைய வெடிங் டிரெண்ட் என்ன, முகூர்த்தப்புடவைக்கு புதுமையாக எப்படி பிளவுஸ் மேட்ச் செய்வது, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் தொடர்பு எண்கள் என... தேவையான அனைத்து டிப்ஸ்களையும் வழங்குகிறோம். மணப்பெண்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் செஷன்களும் உண்டு!’’ என்று படபடவெனப் பேசும் விருபா, ஒரு ஆர்க்கிடெக்ட். லாவண்யா, சார்டர்ட் அக்கவுன்ட்டன்ட்.

‘‘திருமணம் தொடர்புடைய வேலையில் இருக்கும் நண்பர்கள் தருகிற தகவல்கள், ஐடியாக்கள், டிப்ஸ், மேலும் பல புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து திரட்டிய தகவல்கள்தான் இங்கு நிறைந்திருக்கின்றன. எங்கள் தளத்தின் மூலம் பயன்பெற்றவர்கள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இதில் எங்களுக்கு சன்மானம். மற்றபடி இது பிசினஸ் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. இது எங்களுக்கு ‘ஹாபி’!’’ - மணப்பெண் ஜிமிக்கியை பதிவேற்றும் வேலையில் பிஸியாகிறார்கள் தோழிகள்!

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism