Published:Updated:

வெஸ்டர்ன் டிரெஸ் போட வாய்ப்பு கொடுங்க!

- காக்கா முட்டை ஐஸ்வர்யா

வெஸ்டர்ன் டிரெஸ் போட வாய்ப்பு கொடுங்க!

- காக்கா முட்டை ஐஸ்வர்யா

Published:Updated:

மீபத்தில் வெளியாகி பரவலான பாராட்டுகள் பெற்றிருக்கும் ‘காக்கா முட்டை’ படத்தில் தன் நடிப்பின் மூலம் ‘பச்சக்’ என தமிழ் மனங்களில் பதிந்திருக்கிறார், ஐஸ்வர்யா. ‘அவர்களும் இவர்களும்’, ‘அட்டக்கத்தி’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் இந்தப் பெண்ணுக்கு, பேச்சில் படுநிதானம்!

வெஸ்டர்ன் டிரெஸ் போட வாய்ப்பு கொடுங்க!

‘‘நான் பக்கா சென்னை பொண்ணுங்க. நிறையப் படங்களில் நடிச்சுட்டாலும், ‘காக்கா முட்டை’ படத்துக்கு பிறகு, ‘பார்றா இந்தப் பொண்ணை!’னு நிறைய பாராட்டு கிடைச்சிருக்கு. எல்லாத்தையும்விட, சின்ன காக்கா முட்டை ரமேஷோட அம்மா, எங்கிட்ட அரை மணி நேரம் பேசினாங்க. ‘படத்தில் நீங்க நடிச்சது, நடிச்ச மாதிரியே தெரியல. அப்படியே என்னைப் பார்க்கிற மாதிரிதான் இருந்துச்சு. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேனோ அதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கீங்க!’னு சொல்லி அழுதாங்க. இதைப் பெரிய பாராட்டாவே நினைக்கிறேன்’’ என்ற ஐஸ்வர்யா, படத்தின் களமான சேரிப் பகுதியில் தன் அனுபவம் பற்றிப் பேசினார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சென்னைதான் பூர்விகம்னாலும், சேரி பத்தி எதுவும் தெரியாது. ஷூட்டிங்குக்காக அங்க கிட்டதட்ட 55 நாட்கள் இருந்தேன். ஒரு பொண்ணு வயசுக்கு வந்த உடனே கல்யாணம் பண்ணிடுறாங்க. 17, 18 வயசுல எல்லாம் ரெண்டு குழந்தைகளோட இருக்காங்க பொண்ணுங்க. வெளியில் பார்க்கத்தான் அசுத்தமா இருக்கு. அந்த மக்களோட சின்னச் சின்ன வீடுகளுக்குள்ள போய்ப் பார்த்தா, அவ்ளோ சுத்தமா, மங்களகரமா வெச்சிருக்காங்க. இருக்கறதை வெச்சு சந்தோஷமா வாழ்ற அவங்களோட மனசு, என்னை அசந்துபோக வெச்சது!’’ - திரையுலக அனுபவங்களும் சொல்ல நிறைய இருக்கிறது ஐஸ்வர்யாவுக்கு.

‘‘பாலா சாரோட ‘பரதேசி’ பட ஆடிஷனுக்கு நான் போயிருந்தேன். தேர்வாகலை. இப்போ ‘காக்கா முட்டை’ பார்த்துட்டு, என் நடிப்பை பத்து நிமிஷம் பெருசா பாலா சார் பாராட்டினதா, டைரக்டர் மணிகண்டன் சார் சொன்னார். நான் ‘மானாட மயிலாட’ டைட்டில் வின்னர். ஆனா, எந்த இயக்குநரும் என்னை டான்ஸ் ஆட விடமாட்டேங்கிறாங்க. வெஸ்டர்ன் டிரெஸ் போடும் வாய்ப்பும் கிடைக்கல. டைரக்டர்ஸ்... இதை கொஞ்சம் பரிசீலனை பண்ணுங்களேன்!’’

- குறும்பாகச் சொல்கிறார், ஐஸ்வர்யா!

கே.அபிநயா  படம்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism