Published:Updated:

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

Published:Updated:

பச்சைக் குத்துற அளவுக்கு ஃபேன்!

கேபிள் கலாட்டா

ம்.கே டி.வி `விஜே' சரண்யா, ‘மகளிர் மட்டும்’ நிகழ்ச்சியில் நம்மைச் சந்திக்கும் குறும்புப் பொண்ணு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நான் படுபயங்கரமான நயன்தாரா ஃபேன். பாருங்க... உதட்டுக்கு நடுவுல அவங்கள மாதிரியே மச்சத்தை டாட்டூ குத்தி சுத்திட்டு இருக்கேன். நான் திருச்சி பொண்ணு. காவேரி காலேஜ்ல பி.எஸ்ஸி., மைக்ரோபயாலஜி படிச்சுட்டு, எம்என்சி கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும், ‘பார்க்க நல்லாயிருக்க... சேனல்களில் டிரை பண்ணு’ன்னு சொன்னாங்க. நான் கொஞ்சம் கலர் கம்மிங்கிறதால, போன இடத்துல எல்லாம் ‘ரிஜெக்டட்’. அரும்பாடுபட்டு எம்.கே டி.வி-யில என்ட்ரி டிக்கெட் வாங்கியிருக்கேன். எப்படியாவது சில்வர் ஸ்க்ரீன்ல ஒரு லீட் ரோல் பண்ணணும். ஏன்னா, என் டார்லிங் நயன்தாராவை, ஒரு ரசிகையா இல்லாம, ‘நடிகை’ங்கிற அடையாளத்தோட நான் சந்திக்கணும்! அதுக்காகத்தான்... அதுக்காக மட்டும்தான்!’’

இதுவல்லவோ லட்சியம்!

எனக்கு வயசு 29

கேபிள் கலாட்டா

மிழ்நாட்டுப் பசங்களுக்குப் பிடித்த ‘பப்ளி லுக்’ பொண்ணு, ஷைலஜா. `7எஸ் மியூசிக்'கின் ‘சூப்பர் ஹவுஸ்ஃபுல் ஷோ’வில் ஷங்கர், கௌதம் மேனன், சூர்யா, விக்ரம் என்று வளைய வளைய பேட்டி எடுக்கும் பிஸி ஆங்கர்! 

‘‘ஸ்டெல்லா மாரிஸ்ல எம்.பி.ஏ படிச்சேன். என்.டி.டி.வி-யில புரோகிராம் புரொட்யூசராதான் சேர்ந்தேன். அவங்க கண்ணுக்கு நான் அழகா தெரிஞ்சிருப்பேன் போல. ‘வொய் நாட் விஜே?’னு கேட்டாங்க. ‘ஓ யெஸ்!’னு தலையாட்டிட்டேன். நான் பேட்டி எடுக்காத செலிப்ரிட்டியை விரல் விட்டு எண்ணிடலாம்ங்கிற அளவுக்கு... வித்யா பாலன், கங்குலி, அபிஷேக் பச்சன்னு எல்லார்கூடவும் கை குலுக்கியாச்சு. பெரிய ஜர்னலிஸ்ட் ஆகணுங்கிறதுதான் கனவு. எப்பவுமே டென்ஷன் இல்லாம சிரிச்சுட்டே இருக்குறதுதான் என் எனர்ஜியோட ஸ்பெஷல். எனக்கு வயசு 29-னு சொன்னா நம்பணும்!’’

வாவ்!

பஞ்சாயத்துக்கே பஞ்சாயத்து!

கேபிள் கலாட்டா

மீர்கானின் ஹிட் நிகழ்ச்சி ‘சத்யமேவ ஜெயதே’யில் பல சமூகப் பிரச்னைகள், பாலியல் பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசப்படுவது நாமறிந்ததே. இந்தியா முழுக்கப் பிரபலமான இந்நிகழ்ச்சியின் சமீபத்திய `எபிசோட்'டின் ஒரு காட்சியில், இந்திய அரசின் முத்திரையை தகுந்த அனுமதி இன்றி பயன்படுத்திவிட்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் தொடங்கி, அமீர்கான் வரை சட்டம் பாய்ந்துள்ளது!

இந்த அக்கறையையும் வேகத்தை யும் கொஞ்சம் டி.வி-க்கான சென்சாரிலும் காட்டலாமே?!

‘‘செம ஹஸ்பண்ட்!’’

கேபிள் கலாட்டா

ன் மியூசிக்கின் நாட்டி ஷோவான ‘மாமீஸ் டே அவுட்’டில் இப்போது வைஷ்ணவி.

‘‘ப்ளஸ் டூவி-ல், டி.ஏ.வி. பப்ளிக் பள்ளியில ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கின பொண்ணு நான். காமர்ஸ் படிக்க ஆசைப்பட்டவளை மிரட்டி, எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படிக்க வெச்சுட்டாங்க. நாலு வருஷமும் முனங்கிக்கிட்டே படிப்பை முடிச்சப்போ, ‘எங்கே... இன்ஃபோசிஸ்ல சேரு பார்ப்போம்!’னு வீட்ல அடுத்த பெட். அதையும் முடிச்சு, அமெரிக்காவுல எம்.எஸ் படிக்கணும்னு நின்னப்போ, `எங்க வெள்ளைக்காரன் யாரையாச்சும் இந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிடுமோ'னு பயந்து, ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. செம ஹஸ்பண்ட், நிகில்!

‘நல்ல பேசுறியேம்மா... டி.வி பக்கம் போகலாமே?!’னு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சொல்ல, ஐ.டி வேலை பார்த்துட்டே பெப்பர் டி.வி-யில களமிறங்கி, சன் மியூசிக் வந்தேன். ‘காபி, டீ ஏரியா’ நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தவளை, ‘கொஞ்ச நாளா நிறுத்தி வெச்சிருக்கிற மாமீஸ் டே அவுட்’ நிகழ்ச்சியை இனி நீதான் பண்றே!’னு கூப்பிட்டுச் சொல்ல, ஒரே சந்தோஷம்! நன்னா கேட்டுக்கோங்கோ... கல்யாணம் ஆயிட்டா பொம்மனாட்டிக்கு எல்லாம் முடிஞ்சு போயிடுறதில்ல. நமக்கும் ஆயிரம் கனவு இருக்கும். அது நனவாகுற வரை போராடிண்டே இருங்கோ!’’

க்யூட் மாமி!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

பாடம் சொன்ன `பலே' குரங்கு!

‘‘அது ஒரு விளம்பரம்தான். ஆனால், வாழ்க்கைப் பாடமாக அமைந்திருந்தது. ஒரு வாழைப்பழத்தை மரத்தில் அமர்ந்திருக்கும் குரங்குக்குக் கொடுத்து, அதை எப்படி உரித்துச் சாப்பிட வேண்டும் என்பதை சாப்பிட்டுக் காட்டும் ஒருவன், தோலைக் கீழே வீசுகிறான். அவனைப் போலவே பழத்தை உரித்துச் சாப்பிடும் அந்தக் குரங்கு, தோலைக் கீழே போடாமல், அவன் வீசியெறிந்த தோலையும் சேர்த்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறது. அவன் வெட்கித்தலை குனிகிறான். இதுபோன்ற விளம்பரங்கள், தவறு செய்பவர்களின் மனதில் சிறு தாக்கத்தையாவது நிச்சயம் உண்டாக்கும்’’ என்று மெய்சிலிர்க்கிறார் சென்னை, புதுப்பெருங்களத்தூரில் இருந்து சங்கரி வெங்கட்.

வைணவ நெறி பிறழாமல்..!

‘‘கலைஞர் டி.வி-யில் ஓளிபரப்பாகும்   `ஶ்ரீ இராமானுஜர்' நெடுந்தொடர் ஆரம்பம் முதலே வைணவ நெறி பிறழாது, விறுவிறுப்பாக இருக் கிறது. மேலும் தன்னம்பிக்கை, துணிவுடன் குட்டி பத்மினி ஒரு சாதனைப் பெண்ணாக உச்சம் தொடுவார் என்று நினைக்க வைக்கிறது. கலைஞரின் கைவண்ணம், அவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட சிறந்த பண்பாளர் என்பதை உணரச் செய்கிறது'' என்று புகழ்கிறார் கோயம்புத்தூரில் இருந்து எஸ்.மதுரவல்லி.

மனம் சிலிர்த்தது! 

‘‘வேந்தர் டி.வி-யில் ‘மூன்றாவது கண்’ என்ற அருமையான நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கொல்லிமலையின் இயற்கை எழிலை அழகுறக் காட்டினார்கள். மேலும் கோரக்கர், பாம்பாட்டி சித்தர் போன்றோர் வசித்த குகைகளைக் காட்டினார்கள். இதைப் பார்த்ததும் மனம் உண்மையிலேயே சிலிர்த்தது. பிற டி.வி-க்களும் இதுபோன்ற பயனுள்ள, புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார் கிருஷ்ணகிரியில் இருந்து ஜெயலட்சுமி வசந்தராசன்.

ரிமோட் ரீட்டா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism