Published:Updated:

`டூத் பேஸ்ட்டில் உப்பு... டூத் பிரஷ்ஷில் கரி...'

தொலைத்ததைத் தேடுகிறோம்!

`டூத் பேஸ்ட்டில் உப்பு... டூத் பிரஷ்ஷில் கரி...'

தொலைத்ததைத் தேடுகிறோம்!

Published:Updated:
`டூத் பேஸ்ட்டில் உப்பு... டூத் பிரஷ்ஷில் கரி...'

‘‘வாசற்கால்களுக்கு மஞ்சள் தடவி, குங்குமம் வைத்தனர் முன்னோர். இன்று, மஞ்சள் நிற பெயின்ட் அடித்து கடந்து போகிறார்கள் அடுத்த தலைமுறையினர். வீட்டுக்குள் நுழையும் நுண்கிருமிகளை அணுகவிடாமல் தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு என்பதை இவர்கள் அறிவதில்லை.

முன்பு உப்பு போட்டு பல் துலக்கினோம், கரித்தூள் கொண்டு பல் தேய்த்தோம். ஆனால், டூத்பேஸ்ட் வரவால் உப்பை மறந்தோம். இப்போது, ‘உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா? உங்க டூத் பிரஷ்ல கரித்தூளின் சக்தி இருக்கா?’ என்றெல்லாம் கேட்கிறார்கள். எதைத் தொலைத்தோமோ அதையேதான் தேடிக்கொண்டிருக்கிறோம்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`டூத் பேஸ்ட்டில் உப்பு... டூத் பிரஷ்ஷில் கரி...'

- அழுத்தம் திருத்தமாக பேசுகிறார் சென்னை, புதுக்கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், மண்புழு விஞ்ஞானியுமான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்.
‘‘பசுவின் பின் பகுதியை பூஜை போட்டு வணங்குவது எதற்கு? பால், கோமியம், சாணம் இவையெல்லாம் இயற்கைக்கு உதவுகிற காரணத்தால்தான். ஆனால், காலம் இயற்கை உரமான கோமியத்தையும் சாணத்தையும் மறக்கச் செய்து, ரசாயன உரங்களை நாடவைத்துவிட்டது. இன்று சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு பலரிடத்தில் வந்திருந்தாலும்... இவையெல்லாம் நோய் வந்த பிறகு சாப்பிட வேண்டும் என்கிற தவறான கண்ணோட்டமும் மக்களிடம் இருக்கிறது. சிறுதானியங்களை வாங்கிச் செல்லும் பலருக்கு, அவற்றை எப்படி சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பது தெரிவதில்லை. மனிதன் செரிமானத்துக்குத் தகுந்தவாறு சாப்பிட வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ‘மலத்தை எளிதாக்கும் உணவை எடு; நாக்கின் ருசி கூட்டும் உணவைத் தவிர்.'

உணவுப்பழக்கம், தலைமுறை மாற்றம், வீட்டுத் தோட்டம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இனி என்ன தேவை... இப்படி இன்னும் இன்னும் நான் உங்களிடம் பேச நிறையவே இருக்கிறது. அடிப்படையில் எதுவும் மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை!’’

- நல்விதை ஊன்ற காத்திருக்கிறார் இஸ்மாயில்.

ஆம்... சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில், பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து, ஜூன் 27-ம் தேதியன்று நடத்தும் ‘நல் உணவு சிறுதானிய விருந்து’ நிகழ்ச்சியில் இஸ்மாயில் சொல்லவிருக்கும் செறிவான கருத்துக்களைப் பெற வாருங்கள். செவிக்கும் வயிற்றுக்கும் நிறைந்த உணவை உறுதி செய்யுங்கள்!

பொன்.விமலா  படம்: கே.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism