Published:Updated:

துபாயில் `தூள்’ கலெக்‌ஷன்!

துபாயில் `தூள்’ கலெக்‌ஷன்!

துபாயில் `தூள்’ கலெக்‌ஷன்!

துபாயில் `தூள்’ கலெக்‌ஷன்!

Published:Updated:

1964-ம் ஆண்டு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு திறக்கப்பட்ட ஜி.ஆர்.டி நகை மாளிகை, சமீபத்தில் தன்னுடைய 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடியிருக்கிறது. இதன் ஓர் அங்கமாக, கடல் கடந்து போய் தன்னுடைய 31-வது கிளையை துபாயின் அல் கர்மா எனும் இடத்தில் திறந்திருக்கிறது இந்நிறுவனம்.

துபாயில் `தூள்’ கலெக்‌ஷன்!

6,500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மாகத் திறக்கப்பட்டிருக்கும் இந்த நகைக் கடையில் கண்கவரும் வண்ணங்களில், பிரத்யேக டிசைன்களில் எக்கச்சக்க கலெக்‌ஷன்
களைக் குவித்து வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை பரவசமாக்கும் வகையில் இந்தக் கிளையின் விற்பனையாளர்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சிகளும் அளித்திருக்கிறார்களாம். இங்கே தங்கம் மட்டுமின்றி... வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் அபூர்வமான கற்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுடைய நகைகள் கிடைக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திறப்புவிழா சலுகையாக துபாய் கிளையில் நகைகள் வாங்குபவர்களுக்கு விமானப் பயணம் வரை பரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

துபாயைத் தொடர்ந்து மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் புதிய கிளைகளைத் துவங்கும் திட்டத்தில் இருக்கும் இந்நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அனந்த பத்மநாபன், ‘`துபாயில் எங்கள் நிறுவனத்தின் கிளை திறக்கப்படுவதில் பெருமிதம் அடைகிறோம்’’ என்று நெகிழ்கிறார்!

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism