Published:Updated:

கனடா மாப்பிள்ளை... தமிழ்ப் பொண்ணு...

கலர்ஃபுல் கலாசார திருமணம்!

கனடா மாப்பிள்ளை... தமிழ்ப் பொண்ணு...

கலர்ஃபுல் கலாசார திருமணம்!

Published:Updated:

சென்னையில் அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது தமிழ் பிராமணப் பெண்ணான மதுமிதாவுக்கும், கனடா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான பாவ்லோவுக்குமான கலர்ஃபுல் திருமணம்! இருவரும் லண்டனில் படிக்கும்போது அறி முகமாகி, நண்பர்கள் ஆனவர்கள். மதுமிதாவின் தமிழ்க் கலாசாரத்தால் வெகுவாக ஈர்க்கப்பட்டார் பாவ்லோ. நட்பு, காதலானது. இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த கல்யாணத்தில், கனடாவிலிருந்து பெற்றோர், சுற்றம், நட்புடன் வந்து பாவ்லோ அமர்க்களப்படுத்த... இப்போது அவர் நம்ம ஊரு மாப்பிள்ளை!

கனடா மாப்பிள்ளை... தமிழ்ப் பொண்ணு...

பாவ்லோவுக்கு கனடாவில் பணி. மதுமிதா துபாயில் வேலை பார்க்கிறார். திருமணம் முடிந்து பாவ்லோ கனடா சென்றுவிட, துபாயில் தன் பெற்றோருடன் இருக்கும் மதுமிதா, கனடா விசாவுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கிறார். புதுப்பெண்ணுக்கு குரலில் வெட்கம்... ‘‘சொந்த ஊர் சென்னைனாலும், அப்பாவின் வேலைக்காக  துபாயில் செட்டில் ஆயிட்டோம். நான் சென்னையில்தான் படிச்சேன். சித்ரா விஸ்வேஸ்வரன் அம்மாவிடம் நடனம் கத்துக்கிட்டேன். பி.இ முடிச்சுட்டு, ஃபாரன்சிக் சயின்ஸ்ல மாஸ்டர்ஸ் பண்றதுக்காக லண்டன் கிங்ஸ் காலேஜ்ல சேர்ந்தேன். அங்கேதான் பாவ்லோவைச் சந்திச்சேன். அவர் பயோ பார்மசூட்டிகல்ஸில் பி.ஜி பண்றதுக்காக, கனடாவிலிருந்து வந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாவ்லோவுக்கு இந்தியக் கலாசாரம், புராணங்கள், தமிழ்ப் பாரம்பரியம் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிறதில் எக்கச்சக்க ஆர்வம். பிள்ளையார், கிருஷ்ணர், ராமாயணம், மகாபார
தம் பத்தியெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுப்பார். நம்ம பண்டிகைகளின் அர்த்தம், நம்ம பழக்க வழக்கங்களின் பின்னணினு ரொம்ப சுவாரஸ்யமா கேட்பார். கல்யாணம் பண்ணிக்
கலாம்னு முடிவெடுத்தப்போ, அவர் பெற்றோருடன் நான் ‘ஸ்கைப்’லதான் பேசினேன். அவரும் எங்க அப்பா, அம்மாகிட்டே ‘ஸ்கைப்’ல பேசினார். படிப்பு முடிஞ்சதும், துபாய்க்கு நேரில் வந்து, பொண்ணு கேட்டார். எங்க அப்பா, அம்மாவுக்கும் அவரை ரொம்பப் பிடிச்சுப் ்போச்சு’’ என்று மது சிரிக்க, அம்மா மீனா பாலசுப்ரமணியனுக்கோ அதைவிடப் பரவசம்.

‘‘எங்க வீட்டில் தங்கியிருந்தப்போ, நாங்க ஹோட்டலில் வாங்கித் தர்றோம்னு சொல்லியும் அசைவத்தை மறுத்துட்டார் மாப்பிள்ளை. நம்ம சாப்பாடு சுத்தமா பழக்கம் இல்லாதபோதும், நான் ஒரு துவையல் அரைச்சாகூட, ரசிச்சு சாப்பிட்ட அந்த அன்பும் அந்நியோன்யமும்... ஏதோ பூர்வஜென்மத்தில் எங்க குடும்பத்துல பிறந்த பிள்ளையா இருப்பார் போல! கல்யாணத்தன்னிக்குக் கையில் கட்டின சரடைக்கூட, கனடா போயும் அவிழ்க்காம இருக்காராம். ஏன்னா, அந்தச் சரடு சந்தோஷத்தின் அடையாளம்னு எங்க வீட்டுப் பெரியவங்க யாரோ சொன்னாங்களாம். அதேபோல, பாவ்லோவின் வீட்டினரும், ஹோமம் வளர்த்தது, மாப்பிள்ளைக்கு குங்குமம் வெச்சது, பஞ்சகச்சம், நலங்கு, ஊஞ்சல், காசி யாத்திரைனு கல்யாணச் சடங்குகள் எல்லாத்தையும் முகம் மாறாம ரசிச்சாங்க!’’

- மீனாவின் குரலில் பெருமை.

கனடா மாப்பிள்ளை... தமிழ்ப் பொண்ணு...

பாவ்லோவையும் அவர் பெற்றோரையும் இ-மெயிலில் பிடித்தோம். ‘‘நான் அதிகமா பிரமிக்கிற ஒரு கலாசாரத்தின்படி, அந்த சாஸ்திர சம்பிரதாயங்களின்படி என் கல்யாணம் நடந்தது, கனவு மாதிரி இருக்கு!’’ என்று பாவ்லோ பரவசமாக, ‘‘எங்க பையன் திருமணத்துக்காக ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி, பறந்து வந்தது விவரிக்க முடியாத உணர்வு. இவ்வளவு பிரமாண்ட திருமணத்தை நாங்க பார்த்ததே இல்லை. அவங்க சம்பிரதாயப்படி நடத்தினாலும், எங்களுக்கு சின்னதா எந்த அசௌகரிய
மும் வந்திடாம பார்த்துப் பார்த்து செய்த அக்கறையில் அசந்துட்டோம். மது, கனடாவுக்கு வரும் நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கோம்!’’

- இ-மெயில் முழுக்க நிரம்பியிருந்தது பிரமிப்பும் பாசமும்!

மறுவீட்டுக்கு வாங்க பாவ்லோ!

 பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism