Published:Updated:

வியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி!

வியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி!

வியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி!

வியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி!

Published:Updated:

கர வாழ்க்கையிலும் பயிர் செய்யும் ஆர்வத்தையும், வழிகளையும் மக்களுக்குக் கொடுக்கும் நோக்கத்துடன் அவள் விகடனும், பசுமை விகடனும் இணைந்து ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ நிகழ்ச்சியை தமிழகம் முழுக்க நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் மே 30-ம் தேதி, விழுப்புரத்தில் உள்ள ஜெயசக்தி திருமண மண்டபத்தில், விழுப்புரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

வியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி!

வாழ்த்துரை வழங்கிய முன்னாள் வேளாண்மைத்துறை அதிகாரி ராமமூர்த்தி, ‘‘நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டின் மொட்டை மாடி முழுக்கவே காய்கறிச் செடிகள், பூச்செடிகளால் நிரம்பி பசுமையாக இருந்தது. நண்பரின் மனைவியிடம், ‘இதை எப்படிப் பராமரிக்கிறீங்க?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘பி.பி, சுகர் இருக்கறவங்க பலர் தினம், காலையிலும், மாலையிலும், வேகமா கையை வீசிட்டு நடக்கறாங்க. எங்க வீட்டுல அதுக்குப் பதிலா மொட்டை மாடியில தோட்டம் போட்டிருக்கோம். தினம் காலையில நானும் என்னோட கணவரும் மொட்டை மாடிக்குப் போய், என்ன பூ பூத்திருக்கு, என்ன காய் காய்ச்சிருக்குன்னு பார்ப்போம். அப்படியே பராமரிப்பு வேலைகளையும் செய்வோம். எங்க பையன் செடி களுக்குத் தண்ணீர் விட, பொண்ணு பூக்கள், காய்களைப் பறிச்சு எடுத்துட்டு வருவா. வீட்டுத் தேவைக்கு போக மிச்சத்தை பக்கத்துல இருக்கும் வீடுகளுக்கு விற்பனை செய்யறேன். அந்த வருமானத்தை சின்னச் சின்னச் செலவுக்குப் பயன்படுத்திக்கிறேன்!’ என்று சொன்னபோது, சந்தோஷமாக இருந்தது. இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளும் எல்லோரும், உங்க வீட்டிலும் அப்படி ஓர் அனுபவம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்!’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘வீட்டுத்தோட்டத்தில் காய்கறி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் இல்லங்களில் கழிவுநீர் மேலாண்மை’ என்ற தலைப்பில் பேசிய அனிதா கிறிஸ்டினா, தன் வீட்டுக் கழிவுகளை முழுமையாக மறுசுழற்சி செய்பவர்.

‘‘கழிவு தண்ணீரையே முறையா சுத்தம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலமா தண்ணீர் பிரச்னை இருக்கிற சென்னை மாதிரியான இடங்கள்லயும் காய்கறி வளர்க்கலாம். முதல் தவணையா ஐந்து தொட்டிகளை வாங்கி விதைகளை நட்டு வளர்த்துப் பார்த்துட்டு, அடுத்து, ரெண்டு ரெண்டா தொட்டிகளோட எண்ணிக்கையை அதிகப்படுத்தணும். சிமென்ட் தொட்டினு இல்லாம வீட்டுல இருக்கிற பழைய பிளாஸ்டிக் வாளி, குடம் மாதிரியான பொருட்களையும் பயன்படுத்தலாம்.

தொட்டிகள்ல முழுக்க மண்ணை நிரப்பினா எடை அதிகமாகிடும்; செடிகளோட வளர்ச்சியும் சரியான முறையில இருக்காது. தொட்டியை நாலு பாகமா பிரிச்சு, அடிப்பாகத்தில் தேங்காய் நார்க் கழிவு, அதற்கு மேல் இருக்கும் ரெண்டு பாகத்திலும் செம்மண், மண்புழு உரம் அல்லது எரு, வண்டல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து நிரப்பணும். மேல் பாகம் காலியா இருக்கணும்; அப்போதான் தண்ணீர் ஊற்றும்போது, மண் வெளியில் செல்லாது. இப்போ விதையை நடவு செய்யலாம். அடிப்பாகத்தில் தேங்காய் நார் இருப்பதால தண்ணீரை பிடித்து வெச்சுக்கும்.

வியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி!

அவரை, வெண்டை, முள்ளங்கி, பீர்க்கங்காய் தக்காளி, பாகற்காய், கத்திரிக்காய், முள்ளங்கி மாதிரியான காய்கறிகளை எல்லா நேரங்களிலும் விதைக்கலாம். முட்டைகோஸ், காலிஃப்ளவர் மாதிரியான ஆங்கிலக் காய்கறிகளை நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் விதைக்கலாம். காய்கறிச் செடிகளை அதிகமான வெப்பம் தாக்காமல் தடுக்கவும், அணில் மாதிரியான விலங்குகளிடம் இருந்து காய்கறிகளை பாதுகாப்பதற்கும் நிழல் வலைகள் (ஷேட் நெட்) அமைக்கணும். பூச்சித்தாக்குதலுக்கு, வீட்டிலேயே பூச்சிவிரட்டி தயாரித்துப் பயன்படுத்தலாம்.

காய்கறிச் செடி வளர்க்கறவங்க கண்டிப்பா கவனிக்க வேண்டியது... பயிர் சுழற்சி. வெண்டைக்காய் போட்டா அடுத்த முறை அந்தத் தொட்டியில பாகற்காய் போடணும். அவரைக்காய் போட்ட தொட்டியில முள்ளங்கி போடணும். இப்படி மாற்றி மாற்றி சாகுபடி செய்யணும்!”

- தகவல்கள் தந்து அசத்தினார் ‘ராசாத்தி’யாக!

நிகழ்ச்சியில், ‘செலவு குறைந்த க்ரீன் பில்டிங் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ராஜராமன் மற்றும் லார்ஸும், ‘பணம் கொட்டும் காளான் வளர்ப்பு நுட்பங்கள்’ என்ற தலைப்பில் சேகரனும், ‘வீட்டுத்தோட்டத்துக்கு ஏற்ற இடுபொருள் தயாரிப்பு’ என்ற தலைப்பில் பாண்டியனும் பயிற்சி கொடுக்க, நிகழ்ச்சி பற்றிப் பேசிய விழுப்புரத்தைச் சேர்ந்த வாசகி சுமதி, ‘‘எங்க வீட்டுல இருக்குற மாடியில முன்னாடி தோட்டம் அமைச்சோம். அது சரியான முறையில வரல. அதனால மாடித்தோட்டம் கஷ்டமான வேலைனு நினைச்சேன். இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்ட பிறகு நான் மாடித்தோட்டத்துல செய்த தவறுகள் என்னன்னு புரிஞ்சது. ரொம்ப நன்றி!” என்றார் மனநிறைவுடன்.

காசி.வேம்பையன்  படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism