Published:Updated:

புதுமை... பியூட்டி... பிரத்யேகம்!

மேகலாவின் வெடிங் கார்டு ஃபார்முலா

புதுமை... பியூட்டி... பிரத்யேகம்!

மேகலாவின் வெடிங் கார்டு ஃபார்முலா

Published:Updated:

பிரத்யேக திருமண அழைப்பு அட்டைகளை உருவாக்கித் தரும் ‘கஸ்டமைஸ்டு அண்ட் பெர்சனலைஸ்டு வெடிங் கார்டு டிசைனிங்’ தொழிலில் கலக்கிக்கொண்டிருக்கிறார், மேகலா முரளி. ‘பத்ரிகா’ என்று பெயரிடப்பட்டுள்ள தன் டிசைனிங்கை மேகலா செய்வது, வெளிநாட்டிலிருந்து!

புதுமை... பியூட்டி... பிரத்யேகம்!
புதுமை... பியூட்டி... பிரத்யேகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கல்லூரியில் எம்.ஏ. கிராபிக் டிசைனிங் படிக்கும்போதிலிருந்தே, ஓவியத்தில், குறிப்பாக, இந்தியன் ஃபோக் ஆர்ட் மீது நிறைய விருப்பம் எனக்கு. படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடங்கள் டிசைனராக வேலை பார்த்தேன். திருமணத்துக்குப் பின் வெளிநாடு (ஈக்வடார்) சென்றதால் பணியைத் தொடர முடியவில்லை. உறவினர்கள், நண்பர்களின் விசேஷங்களுக்கு வீட்டிலேயே பொழுதுபோக்காக இன்விடேஷன் டிசைன் செய்து கொடுத்தேன். அதற்கு குவிந்த பாராட்டுகள் நிறைய! கூடவே, ‘எங்களுக்கும் செய்து தாருங்களேன்’ என்று நண்பர்களின் நண்பர்களும், உறவினர்களின் உறவினர்களும் கேட்க, ‘இதையே நீ பிசினஸா செய்!’ என்று ஊக்குவித்தார் என் கணவர். மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தாகிவிட்டது என் ‘பத்ரிகா’!’’

- தொடர்ந்து, தன் பிசினஸ் பற்றிக் கூறினார் மேகலா...

புதுமை... பியூட்டி... பிரத்யேகம்!

‘‘நான் ஒரு கிளையன்ட்டுக்கு டிசைன் செய்யும் வெடிங் கார்டு மாடலை இன்னொரு கிளையன்ட்டுக்கு பயன்படுத்த மாட்டேன். அந்த பிரத்யேக தன்மைதான் இதில் ஸ்பெஷல். வாடிக்கையாளர்கள் சிலர், டெம்பிளேட் போல, ‘உங்ககிட்ட இருக்குற கார்டு டிசைன்களை எல்லாம் காட்டுங்க, அதுல நாங்க ஒண்ணை செலக்ட் செய்றோம்’ என்பார்கள். அவர்களிடம், ‘நான் ஏற்கெனவே ஒரு கிளையன்ட்டுக்கு டிசைன் பண்ணின கார்டை வேற யாருக்கும் பண்றது கிடையாது; இப்போ உங்களுக்கு டிசைன் பண்ணப் போற கார்டை இனி யாருக்கும் ரிப்பீட் செய்யப் போவது கிடையாது’ என்று ‘பத்ரிகா’வின் ஸ்பஷாலிட்டி பற்றிச் சொல்லிப் புரிய வைப்பேன். 

புதுமை... பியூட்டி... பிரத்யேகம்!

வாடிக்கையாளர்களிடம் அது காதல் திருமணமா, பெற்றோர் முடிவு செய்த திருமணமா, மணமக்கள் புகைப்படங்கள், படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி என்று எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதையெல்லாம் கார்டில் வெளிப்படுத்துவேன். விவரங்களின் அடிப்படையில், கார்ட்டூன் கேரக்டர்ஸ் வைக்கலாமா அல்லது ஸ்டோரி போர்டு போல செய்யலாமா என்று முடிவெடுப்பேன். நிறைய கேரிகேச்சர்ஸ், கார்ட்டூன்ஸ் வரைவேன். வாடிக்கையாளர்களுக்கு தங்களின் கார்ட்டூன் உருவத்தை கார்டில் பார்க்க வித்தியாசமாவும், சந்தோஷமாகவும் இருக்கும். இதுவரை பார்த்திராத வகையில் புதுமையாகவும் அழகாகவும் இருக்கும் என்பதால், என் கிளையன்ட்டுகளுக்கு ஒருபோதும் நான் ஏமாற்றம் தந்ததே இல்லை.

புதுமை... பியூட்டி... பிரத்யேகம்!
புதுமை... பியூட்டி... பிரத்யேகம்!

நான் வெளிநாட்டில் இருப்பதால் ஸ்கைப், மெயில் வழியாகத்தான் ஆர்டரும், கார்டுக்கான விவரங்களையும் பெறுவேன். கார்டை ரெடி செய்து, `பிடிஎஃப்’ ஃபார்மில் மெயில் செய்துவிடுவேன், அவர்கள் அங்கே பிரின்ட் செய்துகொள்வார்கள்.. இங்கு இரவு, இந்தியாவில் பகல் என்பதால், க்ளையன்ட்ஸ் எல்லோரும் இரவு நேரத்தில்தான் போன் பண்ணுவாங்க. அதனால், இரவும் பகலாகிவிட்டது எனக்கு!’’

- சந்தோஷமாகச் சொல்கிறார் மேகலா!

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism