Published:Updated:

கேட்டரிங் பண்ணுங்கள்... கைநிறைய சம்பாதியுங்கள்!

கேட்டரிங் பண்ணுங்கள்... கைநிறைய சம்பாதியுங்கள்!

கேட்டரிங் பண்ணுங்கள்... கைநிறைய சம்பாதியுங்கள்!

கேட்டரிங் பண்ணுங்கள்... கைநிறைய சம்பாதியுங்கள்!

Published:Updated:

``வணக்கம்! நான் லலிதா சிவசுப்ரமணியன். சென்னை, கொளத்தூரில் உள்ள ‘கமலாம்பாள் கேட்டரிங் சர்வீசஸ்’ நிறுவனத்தின் நிறுவனர்.

கேட்டரிங் பண்ணுங்கள்... கைநிறைய சம்பாதியுங்கள்!

எனக்கான முதல் ஆர்டர், ஒரு துக்க வீட்டில்தான் கிடைச்சது. சாஸ்திரம், சம்பிரதாயமெல்லாம் பார்க்காம, கிடைச்ச வாய்ப்பை திருப்தியா செய்தேன். அந்த வீட்டில் இருந்துதான் என்னோட ஆர்டர்கள் விரிஞ்சது. நமக்கான வாய்ப்பு எங்க கிடைச்சாலும், அது வாய்ப்புதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்க வீட்டுல நல்லாவே சமைப்பாங்க. ஆனா, எனக்கு நல்லா சாப்பிடத் தெரியுமே தவிர, சமைக்கவெல்லாம் தெரியாது. புகுந்த வீட்டிலும் மாமியாரின் கைப்பக்குவம் மணக்கும்கிறதால, சமைக்கறதுக்கான சூழலே எனக்கு அமையல.

கேட்டரிங் பண்ணுங்கள்... கைநிறைய சம்பாதியுங்கள்!

பி.ஏ., எக்கனாமிக்ஸ் படிச்சிருந்த நான், பங்குச்சந்தை நிறுவனத்துல 17 வருஷம் வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் வேலையை விடவேண்டிய கட்டாயம். அடுத்து என்னனு யோசிச்சப்போ, வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த இ.பி ஆபீஸ் கண்ணில் பட்டது. அந்த அலுவலக ஊழியர்கள், எங்க மாமியார்கிட்ட, தங்களுக்கு டீ, காபி சப்ளை பண்ண முடியுமானு கேட்க, ‘நம்ம கிச்சன்ல செஞ்சு, அடுத்த கட்டடத்துல இருக்கிறவங்களுக்கு கொடுக்கப் போறோம். தாராளமா செய்யலாமே!’னு சம்மதிச்ச என் மாமியாரும், ‘இன்னிக்கு 5 டீ வித்தேன், 10 காபி வித்தேன்’னு சொல்லும்போது, அவங்களோட சுயசம்பாத்திய சந்தோஷம், என்கிட்டயும் பத்திக்கிச்சு.

`கமலாம்பாள் கேட்டரிங் சர்வீசஸ்’னு மாமியார் பேர்லயே நிறுவனத்தை ஆரம்பிச்சு 19 வருஷம் ஆகிடுச்சு. மாசம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் பார்க்கற அளவுக்கு வளர்ந்திருக்கேன். எங்கிட்ட 15 பேர் வேலை பார்க்கறாங்க. இந்த அனுபவத்திலிருந்தே கேட்டரிங் தொழிலில் ஜெயிப்பதற்கான வழிகள் நிறைய சொல்றேன்.

ஜூன் 30 முதல் ஜூலை 6 வரை 044-66802912* என்ற எண்ணை டயல் பண்ணுங்க; எதிர்காலத்தை சிறப்பா அமைச்சுக்கறதுக்கான வழியைத் தெரிஞ்சுக்கோங்க.’’

அன்புடன்,
லலிதா சிவசுப்ரமணியன்

சந்திப்பு: வே.கிருஷ்ணவேணி  படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism