Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
குருப்பெயர்ச்சி பலன்கள்

ன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி (5.7.2015) ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி, மேல்நோக்குக்கொண்ட அவிட்டம் நட்சத்திரம், ப்ரீதி நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த மந்த யோகத்தில், பஞ்ச பட்சியில் மயில் பலவீனமாக உள்ள நேரத்தில் உத்ராயணப் புண்ய காலம் கிரிஷ்மருதுவில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இரவு மணி 11.04-க்கு பெயர்ச்சி ஆகிறார் குருபகவான். 5.7.2015 முதல் 1.8.2016 வரை இங்கமர்ந்து தன் அதிகாரத்தை செலுத்துவார்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேஷம்

கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் பிரச்னைகளில் சிக்கவைத்து வேடிக்கை பார்த்த குருபகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால், இனி தொட்ட காரியம் துலங்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி பிறக்கும். கணவன் - மனைவி இனி நகமும், சதையுமாக அந்நியோன்யமாவீர்கள். அழகு, இளமை கூடும். புதிய யோசனைகள் உதயமாகும்.

இந்த குரு மாற்றம், வசதி, வாய்ப்புகளால் உயர வைக்கும்!

பரிகாரம்: பிரதோஷ நாளில் அருகிலிருக்கும் சிவாலயத்தில் நெய் தீபமேற்றுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தந்துகொண்டிருந்த குருபகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், சின்னச் சின்ன தடைகள் நீங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தோழிகள், உறவினர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. கௌரவப் பதவிகள் தேடி வரும்.

இந்த குரு மாற்றம், பலவிதங்களில் அலைக்கழித்தாலும், இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஏகாதசியில் ஆலயம் சென்று நரசிம்மரை துளசி மாலை சமர்ப்பித்து வணங்குங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம்


கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதியையும், அந்தஸ்தையும் கொடுத்து வந்த குருபகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்களின் மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பார். இந்தக் காலகட்டத்தில் திட்டமிடாமல் எதையும் செய்ய வேண்டாம். பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி திடீர் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல சூழ்நிலை உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

இந்த குரு மாற்றம், தொலைநோக்குச் சிந்தனை மற்றும் சகிப்புத்தன்மையால் வளர்ச்சியடைய வைக்கும்.

பரிகாரம்: சஷ்டி நாளில் முருகன் ஆலயத்தில் முல்லை மலர் மாலை அணிவியுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

கடகம்

கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள் அமர்ந்து கொண்டு ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, குடும்பத் திலும் நிம்மதியை குலைத்து, உங்களை அலைக்கழித்த குரு பகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை உள்ள காலக் கட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் இல்லம் களைகட்டும். பிள்ளை களின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

இந்த குரு மாற்றம் உங்களுக்கு மனநிறைவுடன் அதிரடி யோகத்தையும் அள்ளித் தரும்.

பரிகாரம்: பௌர்ணமி நாளில் அம்மன் ஆலயத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம்

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண் செலவுகளை யும், அலைச்சலையும் தந்த குரு பகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக தொடர இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கப்படலாம். முக்கிய விஷயங்களில் இடைத்தரகர்களை நம்பாமல், நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது. குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிட்டும். ஜென்ம குருவால் கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வரும்; அதேசமயம் அன்பு குறையாது. சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

இந்த குரு மாற்றம் வருமானத்தைக் குறைத்தாலும், சிக்கனத்தால் கொஞ்சம் முன்னேற்றத்தை தருவதாக அமையும்.

பரிகாரம்: அமாவாசை நாளில் சிவாலயத்தில் வில்வார்ச்சனை செய்யுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி

கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பணவரவையும், செல்வாக்கையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அள்ளிக் கொடுத்த குருபகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை ராசிக்கு 12-வது வீட்டில் நுழைவதால், பயணங்கள் அதிகமாகும். செலவினங்களும் கூடிக்கொண்டே போகும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். தாயாரின் உடல்நிலை சீரடையும். மறைமுக எதிரிகளை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

இந்த குரு பெயர்ச்சி உங்களை மாற்றுப்பாதையில் சென்று முன்னேற்ற வைக்கும்.

பரிகாரம்: பௌர்ணமி நாளில் பெருமாள் சந்நிதியில் வழிபடுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

துலாம்

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஏகப்பட்ட மன உளைச்சலையும், அவமானங்களையும் ஏற்படுத்திய குருபகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் அமர்வதால், இனி உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

இந்த குரு மாற்றம் குடத்திலிட்ட விளக்காக இருந்த உங்களை, குன்றின் மேல் ஒளிர வைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் அம்மன் ஆலயத்தில் குங்குமார்ச்சனை செய்யுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்

கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து ஏழரைச் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி, ஓரளவு பணவரவையும் தந்து கொண் டிருந்த குருபகவான், இப்போது 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். `10-ம் இடம் பதவியை கெடுக்குமே, அந்தஸ்தை குறைக் குமே’ என்றெல்லாம் பெரிதாக கவலைப்பட வேண்டாம். எடுத்த வேலைகளை கொஞ்சம் அலைச்சலின் பேரில் முடிக்க வேண்டி வரும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதையும் சாமர்த்தியமாக பேசி சாதிப்பீர்கள். உடல்நலக் கோளாறு சரியாகும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.

இந்த குருமாற்றம் சகிப்புத்தன்மை இருந்தால் சாதிக்கலாம் என்பதை உணர வைக்கும்.

பரிகாரம்: கிருத்திகை நாளில் முருகன் ஆலயத்தில் நெய் தீபமேற்றுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்து செலவுகளை இரட்டிப் பாக்கி, குடும்பத்தில் சலசலப்பு களை ஏற்படுத்திய குருபகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்களின் பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், இனி எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவு உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள், வலிய வந்து பேசுவார்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். உடன்பிறந்த வர்கள் பாசமழை பொழிவார்கள். பிள்ளைகள் நல்ல வழியில் செல்வார்கள்.

இந்த குரு மாற்றம் நீண்ட நாள் ஆசைகளை நிறை வேற்றித் தரும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் னிவாச பெருமாள் சந்நிதியில் வழிபடுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

மகரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் திறமைக்கு பரிசு, பாராட்டை தந்த குருபகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை 8-ம் வீட்டில் மறை வதால், எவ்வளவு பணம் வந்தா லும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். தவிர்க்க முடியாத பயணங்களும் அதிகரிக்கும். ஆனாலும் அவற்றை எல்லாம் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும். புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

இந்த குரு மாற்றம் சலிப்பையும், அலைச்சலையும் தந்தாலும் தொலைநோக்குச் சிந்தனையால் முன்னேற வைக்கும்.

பரிகாரம்: கார்த்திகை அல்லது பூசம் நட்சத்திர நாளில் முருகன் ஆலயத்தில் விபூதி அபிஷேகம் செய்யுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

கும்பம்

கடந்த ஓராண்டு காலமாக ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பகடைக்காயாக உருட்டிய குருபகவான் 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து, உங்களைப் பார்க்கவிருப்பதால்... சோர்வு நீங்கி, உற்சாகமாக செயல் படுவீர்கள். அரைகுறையாக  நின்ற வேலைகள் முடிவடை யும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உங்களின் புகழ், கௌரவம் உயரும். ஷேர் மூலம் பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஆரோக்கியம் கூடும். குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள்.

இந்த குரு மாற்றம் உங்களுக்கு முழு பலத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் சிவலாயத்தில் பாலாபிஷேகம் செய்யுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

மீனம்

இதுவரை ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் புது முயற்சி களில் வெற்றியை தந்த குரு பகவான், 5.7.2015 முதல் 1.8.2016 வரை 6-ம் வீட்டில் மறைவதால், சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படும். சகட குருவாக இருப்பதால், குடும்பத்தில் சில சமயங்களில் காரசாரமான விவாதம் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். உறவினர்களுடன் உரசல் போக்கு வந்து நீங்கும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பழைய தோழிகள் உங்களுக்கு உதவுவார்கள். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

இந்த குரு மாற்றம் பணப்பற்றாக்குறையை தந்தாலும், திட்டமிடுதலால் நெருக்கடியிலிருந்து விடுவிக்கும். 

பரிகாரம்: சஷ்டி நாளில் செந்தில் ஆண்டவர் ஆலயத்துக்கு சென்று வணங்குங்கள்.

`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism