Published:Updated:

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

Published:Updated:
'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

`உள்ளங்கையில் உலகம்’... ஆம், ஒரு மொபைல் போன் இருந்தால் போதும், உலகத்தையே ஒரு பார்வை பார்த்துவிடலாம். இப்படி வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைதளங்களில் சக்கைப்போடு போடும் வீடியோக்களில் பெரும் கவனத்தைப் பெற்ற வீடியோக்கள் சில இங்கே! மொபைல் எடுங்க, இங்க இருக்கிற லிங்க் அல்லது க்யூஆர் கோடை க்ளிக் பண்ணுங்க. இல்லாட்டி அவள் ஃபேஸ்புக் பக்கத்தை க்ளிக் பண்ணுங்க... வீடியோக்களைப் பார்த்து ஷேர் பண்ணுங்க!

அலர்ட் திரில்லர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

டூவீலரில் போகும்போது எல்லோருமே கண்டிப்பா ஹெல்மெட் அணியணும்னு உயர் நீதிமன்றமே உத்தரவு போட்டாச்சு. ஜூலை ஒண்ணாம் தேதியில இருந்து கட்டாயம் கடைப்பிடிச்சாகணும். இதைச் சொன்னதும், `தலைமுடி கொட்டுமே... பூ வைக்க முடியாதே’னு ஆயிரம் காரணம் சொல்வோம். ஆனா, இந்த வீடியோவை பார்த்த பிறகு இந்தக் காரணங்களையெல்லாம் சொல்லமாட்டீங்க.

வேகமா போற ஒரு வாகனம், டூ-வீலர்ல போற ஒருத்தரை இடிக்க... தடுமாறி விழறார். நல்லவேளையா அவர் போட்டிருந்த ஹெல்மெட்டால அசம்பாவிதம் ஏதும் நடக்கல.

`லொள்' விக்கெட் கீப்பர்!

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

ங்க வீட்டு நாய், நீங்க என்ன சொன்னாலும் கேட்கும், மோப்பம் பிடிக்கும், குரைக்கும், தாவும், விளையாடும். ஆனா, உங்ககூட கிரிக்கெட் ஆடுமா? இந்த வீடியோவுல இருக்கும் நாய், விக்கெட் கீப்பர் வேலை பார்க்கிற அதிசயத்தை நீங்களே பாருங்களேன்!

`தூக்கி அடிச்சிட்டேன் பாத்துக்க!’

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

க்கத்துல உட்கார்ந்துட்டு யாராவது சம்பந்தமே இல்லாம தொணதொணன்னு பேசிட்டு இருந்தா, கோபம் வரும்தானே...? பொது இடத்துல உட்கார்ந்துட்டு, `ஹாஹ்ஹா ஹாஹ்ஹா’னு ராட்சத சிரிப்பை ஒரு பெண்மணி எடுத்துவிட... பக்கத்துல இருந்த பெண்மணி, ஒரு கட்டத்துல பொறுமை இழந்து, `தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’னு விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்லாம, செய்தே காண்பிக்கிறாங்க. போனைப் பிடுங்கி தரையில சுழற்றி அடிக்கிற வீடியோவைப் பாத்தா, சிரிப்பை நிறுத்த கொஞ்ச நேரம் பிடிக்கும்.

நோ ஸ்மைலி!

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

`ஹேப்பி பர்த்டே டூ யூ’னு கடைகள்ல விக்கற ஆர்டிஃபீஷியல் நுரை தெளிப்பான்களை வாங்கி பனிப்பொழிவு பொழியுற மாதிரி தெளிச்சு ஆர்ப்பரிக்கற வங்களுக்கு எச்சரிக்கை.

கேக்குக்கு மேல மெழுகுவத்தி எரிய... பர்த்டே பொண்ணு மேல பார்ட்டிக்கு வந்த ஃப்ரெண்ட்ஸ் பனிப்பொழிவைக் கொட்ட, மெழுகுவத்தியில அது பட்டதும் பர்த்டே பொண்ணு மேல பத்திகிச்சு நெருப்பு. அவ்ளோதான்... அந்த ஸ்மைலி ஃபங்ஷன், வெரி சேட் ஃபங்ஷனா மாறியாச்சு.

இனிமே யாராச்சும் நெருப்போட விளையாடுவீங்க...?

ஓவர்டேக் செம ஈஸி!

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

பெரும்பாலும் வாகன விபத்துகள், ஓவர்டேக் பண்ற சமயத்துலதான் ஏற்படுதுனு ஆய்வு ஒண்ணு சொல்லுது. இதை மனசுல வெச்சுக்கிட்டு சாம்சங் நிறுவனம் ஒரு ஏற்பாட்டை பண்ணியிருக்காங்க. அதாவது தங்களோட நிறுவன டிரக்குகளுக்கு பின்பக்கம் ஒரு பெரிய திரையைப் பொருத்தி, முன்பக்கம் எதிரில் வர்ற வாகனங்கள் திரையில தெரியற மாதிரி வடிவமைச்சிருக்காங்க. டிரக்குக்கு பின்னால வர்ற வாகனங்கள் எதிரில் வர்ற வாகனங்களை இந்தத் திரை மூலமாவே தெரிஞ்சிகிட்டு, பொறுமையா வாகனம் ஓட்ட முடியுது.

`வாவ்... சூப்பர்’தானே!

'க்ளிக்' குங்க... 'லைக்' குங்க!

ப்படி வைரல் வீடியோஸ் நிறைய இருக்கு. உங்ககிட்டயும் லைக்ஸ் வாங்கின வீடியோஸ் நிறைய இருக்கும். அதை எங்களுக்கு நீங்க ஷேர் பண்ணுங்க.

இந்த வீடியோக்களை நீங்கள் பார்க்கவும், உங்கள் வீடியோக்களை இன்பாக்ஸில் பகிரவும் நீங்க க்ளிக் பண்ண வேண்டிய இடம்...

பொன்.விமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism