Published:Updated:

திருச்சி... ராணிகள் தர்பார்!

திருச்சி... ராணிகள் தர்பார்!

திருச்சி... ராணிகள் தர்பார்!

திருச்சி... ராணிகள் தர்பார்!

Published:Updated:

வள் விகடன் நடத்திய ‘ஜாலி டே’ திருவிழா, இம்முறை மலைக்கோட்டை நகரில்! திருச்சியில் ஜூன் 21-ம் தேதி நடந்த விழாவில் அவள் விகடனுடன், திருச்சி சாரதாஸ், ஜி.ஆர்.டி. தங்கமாளிகை, வனேசா  சானிட்டரி நாப்கின்ஸ் மற்றும் கோல்டு வின்னர் ஆகிய நிறுவனங்கள் கைகோக்க, தாஜ் திருமண மண்டபத்தில் உற்சாகமாக நடந்தது நிகழ்ச்சி!

திருச்சி... ராணிகள் தர்பார்!

ஜூன் 20-ம் தேதி வாசவி பள்ளியில் நடந்த மெஹந்தி, பாட்டுக்குப் பாட்டு, உல்டா புல்டா நடனம், குழு நடனம், அடுப்பில்லா சமையல், ரங்கோலி, வினாடி வினா, ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் முன்தேர்வுப் போட்டிகளில் தோழிகள் திறமையைக் காட்டி இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்க... மறுநாள் தாஜ் மண்டபத்தில் கோலாகலமாகத் தொடங்கியது விழா! நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுபாஷினி மேடையில் என்ட்ரி ஆனதும் அரங்கமே ஹேப்பியாக, அந்த உற்சாகத்தை நாள் முழுக்க தன் கலகலப்பான பேச்சால் கட்டிப்போட்டார் சுபாஷினி.  பாட்டுக்கு பாட்டு, உல்டா புல்டா நடனம், குழு நடனம் என மேடையில் ஆடிய போட்டியாளர்களுக்கு இணையாக, சேலையை இழுத்துக்கட்டி ஆடினார்கள் பார்வையாளர்களும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறப்பு விருந்தினர், சன் டிவி ‘சின்னப் பாப்பா பெரிய பாப்பா’ தொடர் நடிகை சித்ரா வருகையால் அரங்கம் எக்ஸ்ட்ரா குஷியானது. தோழிகளுக்கு ஆனந்த அதிர்ச்சி தரும் திடீர் போட்டிகளில் ஸ்ட்ராக்களை தலையில் செருகுவது, கண்களைக் கட்டிக்கொண்டு இணைக்கு மேக்கப் போடுவது என... ஒரே என்ஜாய்மென்ட்தான்! ஸ்பீக்கரில் பிளே செய்த பாட்டுக்கு வாசகிகளை ஆடவைத்த சித்ரா, பாட்டு நின்ற நொடியில் அவர்களை ‘ஸ்டேச்சூ’ சொல்லி அசையாமல் சிலையாக நிற்கவைத்து, பின் சிரிக்கவைத்து அவுட் ஆக்கி என... அவர் செய்த ஸ்வீட் சேட்டையில் ஜில்லென நனைந்தனர் தோழிகள்!

திருச்சி... ராணிகள் தர்பார்!

உலக யோகா தினமான அன்று, யோகாவை ஏற்கெனவே கற்றுத்தேர்ந்த ராஜேஷ்வரி, சில யோகாசனங்கள், குறிப்பாக கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கும் ஆசனங்களைச் செய்து காட்டினார். தொடர்ந்த அவள் விகடன் மற்றும் அவள் கிச்சன் வினாடி - வினா போட்டியில் பதில் அளித்து அசத்தினர் தோழிகள். ஜி.ஆர்.டி தங்கமாளிகை நடத்திய குலுக்கல் போட்டியில் வென்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சர்கள் வழங்கப்பட்டன. கோல்டு வின்னர் நடத்திய போட்டியில் வென்றவர்களுக்கு முகத்தில் 1,000 வாட்ஸ் பல்பு பிரகாசம். வனேசா சானிட்டரி நாப்கின்ஸ் நடத்திய போட்டியில் பரிசு வென்ற திருச்சி வாசகி ஸ்டெல்லா மேரி, ‘‘அம்மா ஊர் திருவிழாவுக்குப் போன மாதிரி இருக்கு!’’ என்று ‘ஜாலி டே’வுக்கு நன்றி சொன்னார்.

ரங்கம் சுதா பாலகிருஷ்ணன், ‘‘என்னோட கிராஃப்ட் வொர்க் அவள் விகடனில் பிரசுரமாகத் தேர்வு பெற்றது. ஆனா, அந்நேரம் என் கணவருக்கு உடம்பு முடியாமல் போனது. எனக்காக 15 நாள் அவகாசம் தந்து என் கிராஃப்ட்டை அவள் விகடனில் பிரசுரிச்சாங்க. அந்த அறிமுகம் மூலமா இப்போ நான் பலருக்கும் கிராஃப்ட் வகுப்புகள் எடுக்கிறேன். ‘அவள்’ மூலமா வாழ்வில் ஒளிபெற்ற பெண்களில் நானும் ஒருத்தி!’’ என்றார் நெகிழ்வுடன்.

திருச்சி... ராணிகள் தர்பார்!

நிகழ்ச்சியின் இறுதியாக, பம்பர் பரிசு ஃப்ரிட்ஜுக்கான கூப்பனைத் தேர்ந்தெடுக்க, குளித்தலையைச் சேர்ந்த இந்திராணி ராமலிங்கத்துக்கு அடித்தது லக்.

‘‘ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் போட்டியில் கலந்துக்கிட்டேன். பரிசு கிடைக்கல. ஆனா, இப்போ பம்பர் பரிசே கிடைச்சிருச்சு! நான் கும்பிடுற பாபாவும், முருகனும்தான் இந்த அதிர்ஷ்டத்தை கையில் கொடுத்திருக்காங்க!’’ என்றபோது, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்!

அடுத்த இன்னிங்ஸுக்கு வாசகிகள் இப்போதே தயார்!

மு.கோதாஶ்ரீ, இரா.த.சசிபிரியா   படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித், தி.கௌதீஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism