Published:Updated:

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

Published:Updated:
கேபிள் கலாட்டா

‘‘ப்ரியாதான் வில்லி... நிஷா நல்ல பொண்ணு!’’

‘தெய்வம் தந்த வீடு’ சீரியல் ‘ப்ரியா’ கேரக்டரில் லூஸ் ஹேர், எப்போதும் டெரர் லுக், ஸ்டைலிஷ் காஸ்ட்யூம் என்று மாடர்ன் வில்லியாக வரும் நிஷாவிடம் ஒரு சிட் சாட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஜெயா டி.வி-தான் முதல் அறிமுகம் தந்தாங்க. அப்படியே சன் மியூசிக் `விஜே', சில குறும்படங்கள், ‘மிரட்டல்’ அப்புறம், ‘பூஜை’ படத்தில் ஸ்ருதிஹாசன் ஃப்ரெண்ட்னு சினிமா வாய்ப்புகள் பார்த்துட்டு, இப்போ சீரியலுக்கு வந்தாச்சு. இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, மீடியாதான் விருப்பம்னு சொன்னப்போ, வீட்டுக்கு ஒரே பொண்ணுங்
கிறதால, விருப்பத்துக்குப் பச்சைக்கொடி காட்டிட்டாங்க. கேரளாதான் சொந்த ஊரு. சென்னைக்கு வந்து 10 வருஷம் ஆச்சு. ‘தெய்வம் தந்த வீடு’ சீரியல்தான் பக்கா பிளாட்ஃபார்ம் கொடுத்திருக்கு. உண்மையில் ரொம்ப சாஃப்ட் கேரக்டர். ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், ‘ஏய்... எங்க வீட்டுல அம்மா, அக்காகிட்ட எல்லாம் ‘நிஷா ரொம்ப நல்ல பொண்ணு’னு சத்தியம் பண்ணினாலும் நம்ப மாட்டேங்கிறாங்க. அந்தளவுக்கு நடிப்பில் கலக்குறடி!’னு சொல்லும்போது, சந்தோஷமா இருக்கு!’’

சக்சஸ்!

கேபிள் கலாட்டா

சூப்பர் சீனா!

‘இனிமே நடிகர்கள் டி.வி நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது’ - இப்படி ஒரு சட்டம் போட்டால் எப்படி இருக்கும்?! ‘பப்ளிசிட்டி பரபரப்பு குறைஞ்சு, தரமான ஆங்கர்கள் கைக்கு நிகழ்ச்சிகள் கிடைக்கும்!’ என்று சில மைண்ட் வாய்ஸ்கள் கேட்கின்றன. சீன தொலைக்காட்சி சங்கத்தினர், நிஜமாகவே இப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள். ‘நிகழ்ச்சியோட ஐடியா நல்லா இருந்தும், அதை பப்ளிசிட்டிக்காக ஸ்டார்ஸ் கையில கொடுக்கும்போது, சொதப்பிடுறாங்க. ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகரை, இன்னொரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிடும்போது, அந்த கவர்ச்சியும் காலி ஆயிடுது. மேலும், நல்ல ஆங்கர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமப் போயிடுது. அதனால இனி திரை நட்சத்திரங்கள் டி.வி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கக் கூடாது!’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள். 

அட்றாசக்கை!

கேபிள் கலாட்டா

கோயம்புத்தூர் பொண்ணுங்கோ!

ன் மியூசிக் ‘கால் மேல காசு’ நிகழ்ச்சியில், தினமும் மாலை ஏழு மணிக்கு பிஸியாகிவிடுகிறார் தியா... யூத் பசங்களின் சாய்ஸ் லிஸ்ட்டில் இருக்கும் ஸ்வீட் கேர்ள்!

‘‘கேரளா கலந்த கோயம்புத்தூர் பொண்ணு நான். ஸ்கூலிங், ஊட்டி. இன்டர்நேஷனல் பிசினஸ் மேனேஜ்மென்ட்ல பி.ஜி, எம்.பி.ஏ எல்லாம் முடிச்சிருக்கேன். பெரிய பிசினஸ் மேக்னட் ஆகணும் என்பதுதான் குறிக்கோள். மீடியா... ஆசை. குழந்தை நட்சத்திரமா நிறைய விளம்பரங்கள்ல நடிச்ச எனக்கு, மாடலிங் இன்னொரு புரொஃபஷன். ஷாப்பிங்னாலே எனக்கு அலர்ஜி. ஃபேஷன் டிசைனரான அக்காதான் என் காஸ்ட்யூம் முதல் மேக்கப் வரை முடிவு பண்ணுவாங்க. எனக்கு எங்க அக்கா குடும்பம்தான் உலகம். அப்புறம்... தங்க நகைகள் பிடிக்கவே பிடிக்காது!’’ 

அப்போ... வருங்கால கணவர் ரொம்ப லக்கி!

கேபிள் கலாட்டா

முடியை வெட்டினதுக்கு இவ்வளவு அலப்பறையா?!

மிலியா க்ளார்க்... 2 கோடி பார்வையாளர்களை பகிரங்கமாகக் கட்டிப் போட்டு வெச்சிருக்கும், HBO சேனலின் ‘கேம் ஆஃப் த்ரான்ஸ்’ சீரியலின் நாயகி! எமிலியாவின் வெள்ளை முடி, க்ளாமர் லுக்... இதற்காகவே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கோடி. ஆனால், இவரின் ஒரிஜினல் முடி என்னவோ கறுப்புதான். அதை சமீபத்தில் வெட்டி, ஷார்ட் ஆக்கிக்கொண்டார். இதற்கு ஒரு மிகப்பெரிய கலவரமே ஆன்லைனில் நடந்து முடிந்திருக்கிறது. ‘என்னது... உலகம் அழியப் போகிறதா?’ என்கிற ரேஞ்சுக்கு, ‘எமி முடியை வெட்டியதை அறிந்து மிகவும் அதிர்ந்தேன், வருந்தினேன்...!’ என்றெல்லாம் ரசிகர்கள் சோக கீதம் பாடி வருகிறார்கள். அட, அந்த சீரியலிலேயே எமிலியாவின் ஒரிஜினல் முடி கிடையாதே... விக்தானே?! இதற்கு ஏன் இவ்வளவு அலப்பறை?!

கேபிள் கலாட்டா

"நான் ஒரு பாடகி!’’

‘கோலங்கள்’ தொடங்கி ‘தெய்வமகள்’ வரை, கலக்கியபடியே இருக்கிறார் சுஹாசினி. ‘தெய்வமகள்’ சீரியலில், காமெடி வில்லி ‘விநோதினி’யாக சிரிக்க வைப்பவர் அணிந்து வரும் நைட்டிகள், சீரியல் நடிகைகளின் ‘டாக்’ ஆகும் அளவுக்கு கவனிக்கப்படுகின்றன. ‘‘சீரியல்களில் என்னோட காஸ்ட்யூமுக்காக நிறைய மெனக்கெடுவேன். அப்படித்தான் ‘தெய்வமக'ளுக்காகவே ஸ்பெஷலா நைட்டீஸ் ஷாப் பண்றேன். பொதுவாவே நான் ஷாப்பிங் பைத்தியம். நான் கொஞ்சம் ஓபன் டைப். அதனாலேயே எனக்கு ஃப்ரெண்ட்ஸ் குறைவு. கடன் கொடுக்கறது, வாங்குறது பிடிக்காது. காலையில் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வேன். பக்கா சென்னைப் பொண்ணு. சூப்பரா பாடுவேன். லைட் மியூசிக்கில் பாடுறது பிடிச்ச விஷயம். எல்லாத்துக்கும் மேல, பிரியாணின்னா உலகத்தையே மறந்துடுவேன்!’’

யம்மீ!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

நெகிழ வைத்த நேசம்!

``நகைக்கடை விளம்பரம் அது. திருமணத்தையொட்டி மணப்பெண்ணுக்குத் தேர்வு செய்த நகைக்கான தொகையை பையனின் தந்தை தர முன் வருகிறார். அப்போது பெண்ணின் தந்தை, `அது என் மகளுக்காக வாங்கிய நகை; நான் பணம் தருவதுதான் முறை’ என்கிறார். ஆனால், மணமகனின் தந்தையோ, `ஆறாம் தேதி (திருமண நாள்) முதல் அவள் என் மகள்’ எனக் கூறுவது நெஞ்சை நெகிழ வைக்கிறது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் புகுந்த வீட்டார் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விளம்பரம்'' என்று அக்கறையுடன் சொல்கிறார் மதுரையில் இருந்து பி.எஸ்.லட்சுமி.

`கலக்குங்க பாஸ்'!

`‘ஆதித்யா’ நகைச்சுவை சேனலில் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சினிமாவில் இடம் பெறும் நகைச்சுவைக் காட்சிகளை சிறியவர் முதல் பெரியவர் வரை பேசச் சொல்வது ரசிக்கும்படி உள்ளது. அவர்கள் பேசும்போது வசனங்களை மறந்து, சிரித்து, திக்கித்திணறுவது சிரிப்பை உண்டாக்குகிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவர்களின் வசனத்துக்கேற்ப தன் முகபாவத்தை மாற்றி கலகலப் பூட்டுகிறார். டென்ஷனைக் குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்யும் நிகழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து கலக்குங்க பாஸ்’' என்று மெய் சிலிர்க்கிறார் சேலத்தில் இருந்து பி.லாவண்யா.

ரிமோட் ரீட்டா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism