Published:Updated:

"என் வீடு... கிச்சன்... உரிமை!"

செஃப்' மனைவிகள் `கலகல' 

"என் வீடு... கிச்சன்... உரிமை!"

செஃப்' மனைவிகள் `கலகல' 

Published:Updated:

ணவகங்களில் நமக்கு ருசியாகச் சமைத்துத் தரும் செஃப்களின் இல்லங்களில் சொக்கநாதர் சமையலா, மீனாட்சி சமையலா?! அவர்கள் வீடுகளின் சமையலறை கலகலப்புகளை அறிய, ஒரு ரவுண்ட் அடித்தோம்!

"என் வீடு... கிச்சன்... உரிமை!"

கீதா - ‘செஃப்’ பழனிமுருகன் 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நான் டிப்ளோமா இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சப்போ, இவர் வேலை பார்த்த ஹோட்டல்லதான் டிரெயினியா போனேன். எங்களோடது காதல் திருமணம். அவர் சுத்த சைவம்; நான் சுத்த அசைவம்! அசைவம் சமைச்சா அவர் வீட்டிலேயே இருக்க மாட்டார். சாப்பிட்டு முடிச்சு, வீட்டையெல்லாம் சுத்தம் செய்ததுக்கு அப்புறம்தான் உள்ளேயே வருவார். ஆனா, ரொம்ப அபூர்வமா எனக்கும், எங்க இரட்டைக் குழந்தைகளுக்கும்  இவர் அசைவம் சமைச்சுக் கொடுப்பார். குறிப்பா, இவர் செய்யும் சிக்கன் புலாவுக்கு நான் அடிமை! எல்லோரும் கேட்பாங்க... ‘வீட்டுலயும் அவர் சமையல்தானா?!’னு. நோ நோ! அவர் பெரிய செஃப் என்பதெல்லாம் வீட்டுக்கு வெளியதான்! இது என் வீடு, என் கிச்சன், என் உரிமை! இருந்தாலும், வீட்டில் அப்பப்போ சமைப்பார். அப்போ கிச்சன்ல ஒரே கலாட்டாதான். ‘ஏய் அல்லக்கை... அதை எடுத்துக்கொடு’, ‘இந்த மசாலாவை அரை’னு ட்ரில் வாங்கிடுவார். அவர் எனக்கு எப்பவும் சொல்ற சமையல் குறிப்பு... ‘என்ன சமைச்சாலும் அதை லவ் பண்ணி செய். ருசியும், பிரசன்டேஷனும் அட்டகாசமா வரும்!’ அது, 100% உண்மை!’’

"என் வீடு... கிச்சன்... உரிமை!"

கல்பனா - ‘செஃப்’ பாலகிருஷ்ணன்

“இவர் என் மாமா பையன்தான். கல்யாணத்துக்கு முன்னயே இவர் சமையலை ருசி பார்த்திருக்கேன். ரொம்பப் பிடிக்கும். கல்யாணம் முடிஞ்சு மூணாவது நாள் எனக்காக மட்டன் பிரியாணி செஞ்சாரு பாருங்க... இன்னிக்கு வரைக்கும் அந்த டேஸ்ட் நாக்குல இருக்கு. அதேமாதிரி, கல்யாணத்துக்கு அப்பறம் வந்த என்னோட முதல் பிறந்தநாளுக்கு எனக்குப் பிடிச்ச ஃபிஷ் ஃப்ரை செய்து கொடுத்ததும் மறக்க முடியாதது.

எனக்கு சமைக்கவே தெரியாது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அண்ணிகிட்ட கத்துக்கிட்டு, சமைப்பேன். இவர் முகம் சுளிக்காம சாப்பிடுவார். ஆனா, நான் காரக்குழம்பு வெச்சா மட்டும், ‘என்னம்மா... இப்படிப் பண்றியேம்மா!’னு நொந்துடுவார். அது என்னனே தெரியல... இன்னிவரைக்கும் காரக்குழம்பை மட்டும் கரெக்டா சொதப்பிடுறேன். எங்களுக்கு டிவின்ஸ். பசங்களுக்கு அவர் செய்யும் சிக்கன் ரொம்பப் பிடிக்கும். அவர் வீட்டில் இருந்தா, பெரும்பாலும் சேர்ந்துதான் சமைப்போம். ஜாலியா, ரசிச்சு சமைப்பார்!’’

"என் வீடு... கிச்சன்... உரிமை!"

ரம்யா - ‘செஃப்’ திவாகர் ரத்தினம்

‘‘ஒன்பது வருஷம் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். என் அத்தை பையன் இவர். கல்யாணத்துக்கு முன்ன, ‘வீட்டுல நாம சமைக்கவே வேண்டாம், அவரே பார்த்துப்பார்!’னுதான் நானும் நினைச்சேன். ஆனா, அப்படியே உல்டா ஆயிருச்சு. அவர் வீட்டுல இருக்கறதே ரொம்பக் குறைவான நேரம்தான். ரெஸ்ட் எடுக்கட்டும்னு, நானே கரண்டியை எடுத்துட்டேன்.

அவர் இத்தாலியன் ஃபுட்ல எக்ஸ்பெர்ட். என்னிக்காச்சும் ஜாலி மூடுல இருந்தார்னா, அந்த வெரைட்டி எல்லாம் செய்து கொடுப்பார். ஆனா, அவருக்குப் பிடிச்சது சௌத் இண்டியன் ஃபுட்தான். அதில் அவரைவிட நான்தான் கிச்சன் கில்லாடி. பொதுவா, ஒரு `செஃப்'பை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நமக்கு நிறைய செஃப் ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. ஹோட்டல் போனா, செஃப் மனைவினு சூப்பரா கவனிப்பாங்க. எந்த ரெஸ்டாரன்ட் போனாலும் இவர் ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. சில நேரம், சர்ப்ரைஸா அவங்களே பில் கொடுத்துருவாங்க. டிஸ்கவுன்ட்கூட கிடைக்கும். ஆனா என்ன... போகத்தான் நேரம் கிடைக்கவே கிடைக்காது!’’

"என் வீடு... கிச்சன்... உரிமை!"

வனிதா - ‘செஃப்’ சுந்தரம்

‘‘இவரு என் தாய்மாமாதான். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடி பேசிக்கிட்டதுகூட கிடையாது. கல்யாணத்துக்கு அப்புறம் முதல் தடவை நான் சமைச்சப்போ, அவர் சாப்பிட்டு என்ன சொல்வாரோன்னு ஒரே பதற்றம். ‘சூப்பர்!’னு சொன்னப்போ, எனக்கு அந்த ஒரு நிமிஷம் சினிமால வர்ற மாதிரி, கடல் அலைகள் நின்னுருச்சு, மரம் ஆடுறது நின்னுருச்சு, பறவைகள் பறக்குறது எல்லாம் நின்னுருச்சு! அப்போ மட்டுமில்ல... இன்னிக்கு வரைக்கும் ‘சமையல் எப்படிங்க?’னு கேட்டா, செஃப் ‘சூப்பர்!’னுதான் சொல்வார்.

அவர் முதல் முதலில் வீட்டில் எனக்காக செஞ்சு கொடுத்தது, கேரட் அல்வா. என்னிக்காச்சும், நேரம் கிடைச்சாதான் சமைப்பார். அவர் சமைக்கும்போது, எக்ஸ்பிரஸ் வேகத்துல வேலை பார்ப்பார். அவருக்கு உதவ நான் ஒரு பொருளை எடுத்துக்கொடுக்க நினைக்கிறதுக்குள்ள, அதை வெச்சு சமைக்கவே ஆரம்பிச்சிடுவார். சமையல் சிம்பிளா இருந்தாலும், அவருக்கு வீடு சுத்தமா இருக்கணும். குறிப்பா, சமையலறை!’’

கே.அபிநயா  படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism