Published:Updated:

சிறுதானிய ஸ்நாக்ஸ்... சிறப்பான வருமானம்!

சிறுதானிய ஸ்நாக்ஸ்... சிறப்பான வருமானம்!

சிறுதானிய ஸ்நாக்ஸ்... சிறப்பான வருமானம்!

சிறுதானிய ஸ்நாக்ஸ்... சிறப்பான வருமானம்!

Published:Updated:

சிறுதானிய ஸ்நாக்ஸ்... புது ரூட் பிடித்து ஜெயித்துக்கொண்டிருக்கிறார், மதுரையைச் சேர்ந்த நாகலட்சுமி!

‘‘மதுரை, மடீட்ஸியாவுல (MADITSSIA - Madurai District Tiny and Small Scale Industries Association) விவசாயக் கல்லூரி சார்பா சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் அதில் முறுக்கு, மிக்ஸ் வகைகள், ஹெல்த் டிரிங்க் தயாரிப்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தாங்க. கத்துக்கிட்டதோட இன்னும் பல வகைகளை புதுசா செய்து, விவசாயக் கல்லூரியின் ஹோம்சயின்ஸ் துறைத்தலைவர் பார்வதி மேடம்கிட்ட காட்டினேன். அவங்கதான், ‘சூப்பர்! இதையே பிசினஸா பண்ணுங்க!’னு பாதை காட்டினாங்க.

சிறுதானிய ஸ்நாக்ஸ்... சிறப்பான வருமானம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெண்டு வருஷத்துக்கு முன்ன, வீட்டில் இருந்தே சிறுதானிய ஸ்நாக்ஸ் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன். சிறுதானியம் பத்தின விழிப்பு உணர்வு கூடியிருக்கும் இந்த வேளையில, இன்னொரு பக்கம் மக்களுக்கு அதைச் சமைக்கத் தெரியல. சமைச்சாலும், அதன் சுவை பிடிக்கல. அதனால, சிறுதானியங்களை ஸ்நாக்ஸ் ஆகக் கொடுக்குற இந்த ஐடியாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கு.

கம்பு, சோளம், ராகி, வரகரிசி, குதிரைவாலி, தினை போன்றவற்றிலிருந்து பிஸ்கட், முறுக்கு, சேவு, லட்டு, ஓமப்பொடி எல்லாம் செய்றேன். குழந்தைகள் விரும்பும் வகையில், சாக்கோ, முந்திரி எல்லாம் சேர்த்தும், பலவித வடிவங்களிலும் ஸ்நாக்ஸ் தயாரிக்கிறதால, விரும்பி சாப்பிடுறாங்க’’ எனும் நாகலட்சுமி, இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டில் தன் தொழிலுக்கான அங்கீகார லைசென்ஸும் பெற்றிருக்கிறார்.

``ஆரம்பத்தில் மருத்துவமனைகள், பள்ளிகள், பொருட்காட்சினு கடை போட்டு பிக் அப் பண்ணினேன். இதுவரைக்கும் ரெண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருப்பேன். மூலப்பொருட்கள், அரைக்கக் கூலி, வேலையாட்கள் கூலி, மின்சாரம், பேக்கிங் டப்பாக்கள்னு செலவு எல்லாம் போக, மாசம் 15 ஆயிரம் கிடைக்குது!

தொழில் ஆரம்பிச்ச முதல் வருஷம் டல்லாதான் இருந்தது. கலவை, பதம், ருசினு தொழிலை தெளிவா கத்துக்கிட்டு, ரெண்டாவது வருஷத்துல இருந்து லாபம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இப்போ அலுவலகம் திறந்திருக்கேன். வெளியூர்களில் சிலர் டீலர்ஷிப் கேட்டு வாங்கியிருக்காங்க. ஒரு நாளைக்கு 30 கிலோ ஸ்நாக்ஸ் தயாரிக்கிறேன்; ஓஹோனு போகுது தொழில்!’’

- பெரிய புன்னகையுடன், நாம் ருசி பார்க்க கேப்பை பிஸ்கட் கொடுக்கிறார் நாகலட்சுமி!

ந.ஆஷிகா  படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism