Published:Updated:

பச்சைப் பால்... நீலப் பால்... யார் யாருக்கு என்ன கலர் பால்?

பச்சைப் பால்... நீலப் பால்... யார் யாருக்கு என்ன கலர் பால்?

பச்சைப் பால்... நீலப் பால்... யார் யாருக்கு என்ன கலர் பால்?

பச்சைப் பால்... நீலப் பால்... யார் யாருக்கு என்ன கலர் பால்?

Published:Updated:
பச்சைப் பால்... நீலப் பால்... யார் யாருக்கு என்ன கலர் பால்?

ன்று, கிராமங்களில்கூட மிகப் பெரும்பான்மையான வீடுகளில் பாக்கெட் பால் தான் வாங்கப்படுகிறது. ஆனால், இப்படி வாங்கப்படும் பாக்கெட் பால் எப்படி தயாராகிறது... அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக் கின்றன... எந்த வகை பாலை யார் யார் பருகலாம் என்கிற சங்கதியெல் லாம் உங்களுக்குத் தெரியுமா? இதைப் பற்றிச் சொல்கிறார் சென்னை ஆவின் நிறுவனத்தின் பி.ஆர்.ஓ வாசுதேவன்.

 “மாடு வளர்ப்போரிடமிருந்து கிராமங்களில் உள்ள ‘தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்' மூலம் பெறப்படும் பால், மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் குளிரூட்டும் நிலையங்களில் குளிர்விக்கப்பட்டு, மாவட்ட அளவிலான பண்ணைகளுக்கு வந்து சேரும். அங்கே, பாக்கெட் செய்யப் பட்டு, மக்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பச்சைப் பால்... நீலப் பால்... யார் யாருக்கு என்ன கலர் பால்?

சென்னையைப் பொறுத்தவரை பால் உற்பத்தி கிடையாது என்பதால், திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் உள்ளூர் தேவை போக, சென்னைக்கு தினமும் பால் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால், தினமும் சென்னை ஆவின் நிறுவனத்துக்கு வருகிறது.

இப்படி வரும் பாலில், பசும்பால் மற்றும் எருமைப்பால் இரண்டுமே கலந்துதான் இருக்கும். எனினும், பசும்பால் அதிக சதவிகிதத்தில் கலந்திருக்கும். இந்தப் பாலை, மிக்ஸ்டு மில்க் (mixed milk) என்பார்கள். இந்தப் பால் தான், சமன்படுத்திய பால் (toned milk),  நிலைப் படுத்திய பால் (standardized milk), நிறை கொழுப்புப் பால் (Full cream milk), இருமுறை சமன்படுத்திய பால் (double toned milk) என நான்கு வகைகளாகப் பிரித்துத் தயாரிக்கப்படுகிறது. க்ரீம் மற்றும் பால் பவுடர் சேர்க்கப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு சமச்சீராகுதல் என்கிற வகையில் இந்த நான்கு வகையான பால்கள் உருவாக்கப் படுகின்றன. இது ஒரு யுனிவர்சல் முறை. 75 டிகிரி சூட்டில் 15 விநாடி வைத்து, 4 டிகிரி குளிர்ந்த நிலைக்கு கொண்டு வரப்படுவதால், பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். இதனால், தொற்று நோய் தவிர்க்கப் படுகிறது.

பச்சைப் பால்... நீலப் பால்... யார் யாருக்கு என்ன கலர் பால்?

காய்ச்சத் தேவையில்லை!

• இப்படி சூடுபடுத்தி, குளிர்விக்கப்பட்டு, பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டு என பலவித தயாரிப்பு முறைகளைக் கடந்துதான் உங்களுடைய கைக்கு வருகிறது ஆவின் பாக்கெட் பால். இதனைக் காய்ச்சத் தேவையில்லை. சூடுபடுத்தினாலே போதுமானது''  என்று சொன்ன வாசுதேவன், சில டிப்ஸ்களும் தந்தார்.

• நீங்கள் வாங்கும் பால் பாக்கெட்டில் பதப்படுத்தப்பட்டது என்பதற்கு அடையாளமாக பேஸ்டரைஸ்டு (Pasteurized) என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்று செக் செய்து கொள்வதுடன், அன்றைய தேதி மற்றும் ஐ.எஸ்.ஓ முத்திரையையும் கவனிப்பது முக்கியம்.
  

• சமச்சீராகுதல் முறைப்படி, பாலில் இருக்கும் கொழுப்பு சத்துகள் நொறுக்கப்பட்டு, சமமாக ஆக்கப்படுகிறது. இதனால்தான் பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை பாக்கெட் பால் எளிதில் செரித்துவிடுகிறது.

• அதேசமயம், பாலை கறந்து நேரடியாக வாங்கும் போது, அந்த பால் பதப்படுத்தப்படாமல் இருக்கும் காரணத்தினால் நன்றாக காய்ச்சுவது அவசியம். நன்றாக காய்ச்சவில்லை என்றால், மாட்டுக்கு ஏதாவது நோய் இருந்தால், கிருமிகள் அழியாமல், அந்தப் பாலைக் குடிப்பவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும்... ஜாக்கிரதை!

கே.அபிநயா, படங்கள்: இரா.யோகேஷ்வரன், தி.கௌதீஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism