Published:Updated:

பணம், உங்கள் பலம்!

டேர்ம் இன்ஷூரன்ஸ்... குறைவான பிரீமியத்தில் நிறைவான பாலிசி!

பணம், உங்கள் பலம்!

டேர்ம் இன்ஷூரன்ஸ்... குறைவான பிரீமியத்தில் நிறைவான பாலிசி!

Published:Updated:

‘கடந்த இதழில் ‘முதலீடு வேறு, காப்பீடு வேறு’ என அருமையான உதாரணத்துடன் விளக்கி இருந்தீர்கள். அதில், நீங்கள் குறிப்பிட்டிருந்த `டேர்ம் பிளான்' எடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அப்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வரும் இதழில் விளக்கினால் வழிகாட்டலாக  இருக்கும்..!’ என தொலைபேசி, கடிதம், இ-மெயில் மூலம் சில தோழிகள் கேட்டிருந்தனர்.

பணம், உங்கள் பலம்!

நம்மில் பலரும் இந்த டேர்ம் பிளானை எடுக்கத் தயக்கம் காட்ட முக்கியக் காரணம், பாலிசி காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே குடும்பத்துக்கு இழப்பீடு கிடைக்கும்; மற்றபடி பாலிசி முடிவில் முதிர்வுத் தொகை எதுவும் கிடைக்காது என்பதாக இருப்பதுதான். ஏஜென்ட்டுகள் இந்த பாலிசியைப் பரிந்துரைக்காத காரணம், இதில் பிரீமியம் குறைவு; அவர்களுக்கும் கமிஷன் குறைவு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக, பணிக்குச் செல்லும் பெண், அவரின் ஆண்டுச் சம்பளத்தைப் போல் குறைந்தபட்சம் 10 - 12 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நலம். உதாரணத்துக்கு, மாதம் 20,800 ரூபாய் சம்பளம் வாங்குபவர், குறைந்தது 25 லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுக்க வேண்டும். இந்தத் தொகைக்கு 30 வயதுள்ள பெண், 30 ஆண்டுக்கான பாரம்பர்ய (எண்டோவ் மென்ட்) பாலிசி எடுத்தால், ஆண்டுக்கு 1.15 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் கட்ட வேண்டி வரும். இதுவே 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், ஆண்டுக்கு 6,500 ரூபாய் மட்டுமே பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும்.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் செய்பவர்கள் என வருமானம் ஈட்டக் கூடியவர்கள் டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடியும். அதாவது, வருமானச் சான்றிதழ் கொடுக்கும் பட்சத்தில்தான் டேர்ம் பிளான் தருவார்கள். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏஜென்ட் மூலமாகவோ அல்லது ஆன்லைனிலோ எடுக்கலாம். ஏஜென்ட் மூலம் எடுப்பதைவிட, ஆன்லைனில் எடுக்கும்போது, டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் சுமார் 30% குறையும். மேலே கூறப்பட்ட உதாரணத்தில் 25 லட்சம் ரூபாய் பாலிசியை ஏஜென்ட் மூலம் எடுத்தால் ஆண்டு பிரீமியம் 6,500 ரூபாய் கட்ட வேண்டும் எனப் பார்த்தோம். இந்த பாலிசியை ஆன்லைன் மூலம் எடுக்கும்பட்சத்தில் பிரீமியம் 4,400 ரூபாய்தான்.  

டேர்ம் பிளான் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்...

• டேர்ம் பிளானில் இழப்பீடு என்பது சில சோதனைகளுக்குப் பிறகே வழங்கப்படுகிறது என்பதால் பாலிசி எடுக்கும்போது சரியான விவரங்களைக் கொடுப்பது அவசியம். அந்த வகையில் பாலிசி எடுப்பவருக்கு  நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏதாவது உடல் பிரச்னைகள் இருந்தால் அதை மறைக்காமல் வெளிப்படையாகத் தெரிவிப்பது அவசியம்.

• ஆன்லைனில் டேர்ம் பாலிசி எடுக்கும்போது பிரீமியத்தை செலுத்திய பின், மருத்துவப் பரி
சோதனை நடத்தப்படும். அதில், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் பிரீமியம் 25% - 60% வரை அதிகரிக்க வாய்ப் பிருக்கிறது.

• டேர்ம் பிளான் எடுக்கும் முன் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பின்னணி மற்றும் காப்பீடு துறையில் அது எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது என்பதை கவனிப்பது கட்டாயம்.

• டேர்ம் பிளானில் பிரீமியத் தொகை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். குறைவாக இருந்தால் அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். அதே நேரத்தில், பிரீமியத் தொகை அதிகமாக இருக்கும் நிறுவனத்தின் பாலிசியில் ஏதாவது கூடுதல் வசதி/சலுகை உள்ளதா என்பதைக் கவனிக்கவும்.

• பிரீமியம் குறைவு என்பதால் மட்டும் ஒரு டேர்ம் பிளானை தேர்வு செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது. டேர்ம் பிளான் எடுக்கும் முன் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம், இறப்புகளுக்கு வழங்கிய இழப்பீடு (கிளெய்ம்) விகிதத்தைக் கவனிப்பது மிக முக்கியம்.

• ஏஜென்ட் மூலம் டேர்ம் பிளான் எடுத்திருக் கும்பட்சத்தில் ஏஜென்ட் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் கிளை விவரத்தை குடும்பத்தின ருக்கு சொல்லி வைப்பது நல்லது.

• ஆன்லைன் பாலிசி என்கிறபோது... பாலிசி தாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு இழப்பீடு கோரும்போது, பாலிசிதாரரின் குடும்பத்தினர், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சேவை மையத்தை தொடர்புகொள்ள வேண்டி வரும். அந்த வகையில் குடும்பத்தினருக்கு சேவை மையத்தின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைச் சொல்லி வைக்க வேண்டும்.

இனி, தயங்காமல் டிக் செய்யுங்கள் டேர்ம் பிளானை!

டேர்ம் இன்ஷூரன்ஸ்... பிரீமியம் எவ்வளவு?

30 வயதான பெண், 25 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு 30 ஆண்டுகள் பிரீமியம் கட்டும் விதமாக பாலிசி எடுத்திருந்தால் அதற்கான ஆண்டு பிரீமியம்.

பணம், உங்கள் பலம்!

ஒரு கேள்வி - ஒரு பதில்!

‘‘என் வயது 35. என் கணவர் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பிளான் எடுத்திருக்கிறார். குடும்பத் தலைவியான எனக்கு டேர்ம் பிளான் எடுக்க முடியுமா?’’

- சுகந்தி கண்ணன், சென்னை-15

‘‘உங்கள் கணவர் அளவுக்கு அதிகத் தொகைக்கு உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி தரமாட்டார்கள். உங்களுக்காக உங்கள் கணவர் பிரீமியம் கட்டுகிறார் என்பதன் அடிப்படையில், உங்களுக்கு 5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை டேர்ம் பிளான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கணவர் டேர்ம் பிளான் எடுக்காதபட்சத்தில் வருமானம் ஈட்டாத குடும்பத் தலைவிக்குத் தனியாக டேர்ம் பிளான் தரமாட்டார்கள்.”

சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism