Published:Updated:

"ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்..!"

"ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்..!"

"ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்..!"

"ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்..!"

Published:Updated:

மாடித்தோட்டம் குறித்த விழிப்பு உணர்வும், மாடித்தோட்டமிடும் ஆர்வமும் பெருகி வரும் இந்தச் சூழலில், பல வருடங்களுக்கு முன்பே தங்கள் வீட்டு மாடிகளைப் பசுமையாக்கி, இன்று அதில் முன்னோடிகளாக வீறுநடை போடும் வெற்றிப் பெண்கள் சிலரைச் சந்தித்தோம்!

"ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்..!"

‘‘36 வயதினிலே படத்துல வந்த அந்த ஜோதிகா வீட்டு மாடித்தோட்டம், நான் போட்டுக் கொடுத்ததுதான். படக்குழுவினர் எனக்கு அதுக்காக மூணு மாசம் அவகாசம் கொடுத் திருந்தாங்க. அவங்க கேட்ட செடிகளை நான் என் வீட்டிலேயே வளர்த்து, மூணு லாரிகளில் கொண்டு போய் செட் பண்ணிக் கொடுத்தேன். அசத்திட்டேன்ல!’’ என்று அன்லிமிட்டட் சந்தோஷத்துடன் ஆரம்பிக்கிறார், சென்னையைச் சேர்ந்த லட்சுமி.
 
‘‘கேரளாவில் எங்க அம்மா வீட்டில் செடி, கொடி, பூ, மாடுனு இயற்கையோடவே வளர்ந்துட்டேன். கல்யாணமாகி சென்னைக்கு வந்தா, இந்த கான்கிரீட் காடு கொடுமையா இருந்தது. செடிகள் இல்லாம என்னால இருக்க முடியல. அதான், மாடித்தோட்டம் போட்டேன். மண்ணில் செடிகள் வளர்த்ததுக்கும், மாடித்தோட்டத்துக்கும் வேறுபாடுகள் இருந்ததால, ஆரம்பத்தில் நிறைய தவறுகள் செய்து செடிகள், மண் எல்லாம் வீணாக்கினேன். ஆனா, இன்னிக்கு, ‘நீங்க தயார் செய்யும் மண் ரொம்ப நல்லா இருக்கு!’னு எல்லோரும் டிப்ஸ் கேட்கிறாங்க. அந்தளவுக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தெளிஞ்சுட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டுத் தோட்டம் போட்டா, இல்லத்தரசி களுக்குப் பொழுது போறதே தெரியாது. மேலும், உடற்பயிற்சிக்கு எல்லாம் தனியா நேரம் ஒதுக்கணும்னு அவசியம் இல்ல. செடிகளைப் பராமரிப்பதிலேயே உடலும், மனசும் ஆரோக்கியமா இருக்கும். நான் இதுவரை மாடித்தோட்டம் போட்டுக்கொடுத்த பலரும், இன்னிக்கு அதை வெற்றிகரமா செயல்படுத்திட்டு இருக்காங்க. இப்போ நான் ஏக்கர் கணக்கில் பயிர் செய்வோருக்கு தோட்டம் போட்டுக் கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கேன்!’’

‘‘என் பொண்ணு ஹாஸ்டல்ல இருந்தப்போ, வீட்டுல என்னோட தனிமையைப் போக்க செடிகள் வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ என் பொண்ணு, ‘உனக்கு நான் மகளா, இந்தச் செடிகள் எல்லாம் மகளா?!’னு செல்லமா கோவிச்சுக்குற அளவுக்கு, இதில் பெரும் பகுதி நேரம் செலவழிக்கிறேன்!’’

- மதுரையைச் சேர்ந்த முத்தரசி, தான் பணிக்குச் செல்லும் சூழலிலும், ஆர்வத்தோடு பராமரிக்கிறார் தன் மாடித்தோட்டத்தை. 

"ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்..!"

‘‘ஆரம்பத்தில் குரோட்டன்ஸ், மணி பிளான்ட், வண்ண வண்ண ரோஜாச் செடிகள்னு வளர்த்துட்டு இருந்தேன். தொடர்ந்து மருந்துச் செடிகளான ஓமவல்லி, துளசி, வல்லாரை, வெந்தயக்கீரைகள வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படியே பெருகிப் பெருகி, இப்போ மாடியிலும் கீழேயும் 100 தொட்டிகளுக்கு மேல இருக்கு. வெயில் காலம் என்பதால் இந்த சீஸன்ல செடிகளில் அவ்வளவா மலர்ச்சி இல்ல. ஆடி மாசம் வந்ததுக்கப்புறம், எல்லாத்தையும் புதுப்பிக்கணும். சாதாரணமா வளரும் செடிகள் தவிர்த்து நம்ம சீதோஷ்ண நிலைக்கு ஒட்டாத செடிகளை தனி கவனம் செலுத்தி சிரத்தையோட கஷ்டப்பட்டு வளர்க்கிறேன். சவுக்கு மரங்களும் என் தோட்டத்தில் உண்டு.

என்னதான் என் செடிகள் செழித்து, பூத்து, காய்ச்சாலும், தோட்டத்தில் பறவைகள் வந்து கூடு கட்டினாத்தான் எனக்கு மனதிருப்தியே வரும். இப்போகூட சின்னச் சின்னக் குருவிகள் எங்க வீட்டுல கூடு கட்டி வாழுது! கீச் கீச் கேட்குதா?!’’

மதுரை, அனுப்பானடியைச் சேர்ந்த அர்ச்சனா, தன் வீட்டு மாடித்தோட்டத்தில் காய்கறி அறுவடையில் கலக்கி வருவதோடு, இவரின் மாடித்தோட்டப் பயிற்சிக்காக பல மாடிகள் வெயிட்டிங் எனுமளவுக்கு இதில் நிபுணர் ஆகியிருக்கிறார்!

"ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்..!"

‘‘நான் மதுரை, கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் பிரிவில் பேராசிரியர். மாடித்தோட்டம், என்னோட இன்னொரு முகம். என் வீட்டில் மட்டுமில்லாம, இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடிகளைக் காய்கறிக் களஞ்சியம் ஆக்கியிருக்கேன். எங்க தோட்டத்தில் விவசாய முயற்சி எடுத்தப்போதான், மாடித்தோட்டம் பற்றி தெரிய வந்தது. செல்லோ சோலார் கம்பெனியில் பணிபுரியும் நம்பிராஜன் அதுக்கு வழிகாட்ட, பல்வேறு வொர்க்‌ஷாப், பத்திரிகை செய்திகள், இணையம்னு தேடி தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஒரே ஒரு விஷயம் சொல்றேன்... வீட்டிலேயே காய்கறிகள் வளர்த்துச் சாப்பிடணும்னு நீங்க முடிவெடுக்க! ரசாயனத்தில் முக்கின காய்கறிகள் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும். ஆனா, நாம வாங்கும் கீரைகள் எல்லாம் பல இடங்களில் சாக்கடைக் கழிவுகளில்தான் அறுவடை செய்யப்படுது. அந்தக் கீரையை சத்துனு வாங்கிச் சாப்பிடறதுக்கு, நாமே கீரை வளர்க்கலாமே?!

காய்கறிக் கீரைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதாவது, பீட்ரூட், கேரட், முள்ளங்கி இதெல்லாம் குளிர் பிரதேசங்கள்லதான் வளரும். நாம இதை மாடித் தோட்டத்துல பயிரிட்டா பீட்ரூட், கேரட், முள்ளங்கி கிடைக்குதோ இல்லையோ, அதோட இலைகள்தான் நான் சொன்ன காய்கறிக் கீரைகள். இதில் காய்களைவிட அதிக சத்துக்கள் இருக்கும். இப்படி பல பயன்கள் மாடித்தோட் டத்தில். என்ன உங்க வீட்டு மாடியில இடம் இருக்குதானே?!’’

“விருதுநகர் பொதுவாவே கொஞ்சம் வறட்சியான பகுதி என்பதால, வித்தியாசமான செடிகளை எல்லாம் வளர்க்க முடியாது. இருந்தாலும், அத்தியாவசியமான வீட்டுக் காய்கறிகளை வளர்க்கிறேன்!’’ என்று வெயிலோடு விளையாடி ஜெயித்துக் கொண்டிருக்கிறார், விருதுநகரைச் சேர்ந்த அர்ச்சனா ஸ்டாலின்.

"ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்..!"

‘‘அடுப்படி காய்கறிக் கழிவுகள்தான் என் உரம். விதைகளை கலப்படமில்லாம பார்த்து வாங்குறது, செடிகளைச் சுத்தி களை அகற்றுவது, எந்த ஒரு விதை, செடிக்கும் உடனே ரிசல்ட் எதிர்பார்க்காம பொறுமையோட  காத்திருப்பதுனு, மாடித்தோட்டத்தில் பல நுணுக்கங்கள் இருக்கு. வீட்டுத் தோட்டம் மட்டுமில்லாம, ‘பட்ஸ் டிரஸ்ட்’ என்ற எங்க டிரஸ்ட் மூலமா இதுவரை 120-க்கும் மேற்பட்ட மரங்களை விருது நகரைச் சுற்றி நட்டிருக்கோம். மேலும் 20 வீடுகளில் புங்கை, வேம்பு மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்புல உதவிட்டு வர்றோம்.

சீமைக்கருவேல மரங்களோட வேர் பூமியின் வெகு ஆழத்துக்குச் சென்று தண்ணீரை உறிஞ்சுறதால, அந்தப் பகுதிகளில் எல்லாம் நிலத்தடி நீர் வற்றிப்
போயிடுது. அதனால, இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25,000 சதுர அடி பரப்பளவுல  வெவ்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்களை வேரோட தகர்த்துட்டு வர்றோம். நிறைய பேர் இதே முயற்சில ஈடுபட்டிருந்தாலும், யாரும் வேரோட சரியா அதை நீக்குறது கிடையாது. அதனால, அந்த முயற்சிக்குப் பலனே இல்லாம போயிடும். இதை யாரும், அவங்களோட வசிப்பிடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் செய்யலாம். சுற்றுச் சூழலுக்கு உதவுவது என்ற பொதுநலனோட, உங்களோட நிலத்தடி நீரை நீங்க பாதுகாத்துக்கலாம் என்ற சுயநலமும் இதில் அடங்கியிருக்கு!’’

கே.அபிநயா, லோ.இந்து, சி.சந்திரசேகரன்
படங்கள்: தி.ஹரிஹரன், நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism