Published:Updated:

"மாடித்தோட்டம் கத்துக்க வாங்கோ!"

"மாடித்தோட்டம் கத்துக்க வாங்கோ!"

"மாடித்தோட்டம் கத்துக்க வாங்கோ!"

"மாடித்தோட்டம் கத்துக்க வாங்கோ!"

Published:Updated:

‘‘நான் கர்ப்பமா இருந்தப்போ ஹெல்த் கவுன் சலிங் போனேன். அங்கேதான் ஆர்கானிக் உணவோட முக்கியத்துவத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன். கர்ப்ப காலத்தில் இயற்கை விவசாய உணவுகளை சாப்பிட ஆரம்பிச்சப்போ, அதோட அருமையை என்னாலும் உணர முடிஞ்சது. தொடர்ந்து, `நாமளே ஏன் ஆர்கானிக் காய்கறிகள் விளைச்சல் செய்யக்கூடாது..?’னு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி போட்டதுதான் என்னோட மாடித்தோட்டம்!’’

- கோவையைச் சேர்ந்த கிருத்திகா, இப்போது விருப்பம் உள்ளவர்களுக்கு க்ரீன் ஹவுஸ் அமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறார் பரபரப்பாக.

"மாடித்தோட்டம் கத்துக்க வாங்கோ!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘மாடித்தோட்டம் போட, முறையான பயிற்சினு எல்லாம் எதுவும் எடுக்கல. பத்திரிகைகளில் படிக்கிற விஷயங்களோட என்னோட ஆர்வத்தையும் சேர்த்து முயற்சி எடுத்தேன். என் புகுந்த வீடு விவசாயக் குடும்பம் என்பதால, அவங்க சொல்லும் பாடங்களையும் கேட்டு தோட்டத்தை பராமரிச்சேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தவற்றை சரிசெய்துக்கிட்டேன். இப்போ மாடித்தோட்டம் போட மத்தவங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறதோட, தொழில்ரீதியா க்ரீன் ஹவுஸ் செட் செய்தும் கொடுக்கிறேன். எம்.பி.ஏ பட்டதாரியான எனக்கு, ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதைவிட, இது மனநிறைவா இருக்கு.

ஆர்வக்கோளாறில் செடிக்கு அதிகம் தண்ணீர் ஊற்றக்கூடாது. ஒவ்வொரு செடியின் நீர்த் தேவையையும் தெரிஞ்சுக்கிட்டு தண்ணீர் ஊற்றணும். வெயில் வரும் முன்பும், வெயில் மறைந்த பின்னரும்தான் தண்ணீர் ஊற்றணும்.

என் கணவரோட அலுவலக மாடியில்தான் நான் தோட்டம் போட்டிருக்கேன். இப்படி கிடைக்கும் இடத்தைப் பயன்படுத்திக்கலாம். நான் காய்கறித் தோட்டம் போட ஆரம்பிச்ச இந்த அஞ்சு வருஷமா, எங்க வீட்டுல யாரும் மருத்துவமனைக்குப் போகல. நோயில்லாத வாழ்வுதானே குறைவில்லாத செல்வம்?!” என்று பெருமையுடன் சொல்கிறார் கிருத்திகா.

வீட்டுத் தோட்டத்துக்கான இடம் தேர்வு செய் வது, விதை தேர்வு செய்வது, மண் தயாரிப்பது, நீர் மேலாண்மை போன்ற ஆலோசனை களை வழங்குவதுடன், வீட்டுத் தோட்டம் அமைப்பதில் எழும் பொதுவான சந்தேகங் களுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘வழிகாட்டும் ஒலி’ பகுதியில் ஜூலை 14 முதல் 20 வரை பேசவிருக்கிறார் கிருத்திகா. 044 - 66802912* என்ற எண்ணை டயல் செய்யுங்கள்... வீட்டை, நாட்டைப் பசுமையாக்குங்கள்!

கே.அபிநயா  படம்: த. ஶ்ரீநிவாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism