Published:Updated:

கலெக்டர் கனவை வென்ற கார் டிரைவர் மகள்!

கலெக்டர் கனவை வென்ற கார் டிரைவர் மகள்!

கலெக்டர் கனவை வென்ற கார் டிரைவர் மகள்!

கலெக்டர் கனவை வென்ற கார் டிரைவர் மகள்!

Published:Updated:

மீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த பலரும் சாதித்துள்ளனர். அகில இந்திய அளவில் 152-வது இடம் பெற்றிருக்கும், தமிழ்வழிக் கல்வி மூலமாக கல்வி பயின்ற வான்மதி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கார் டிரைவரின் மகள்! தற்போது ஈரோடு மாவட்டம் நசியனூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், உதவி கிளை மேலாளராக பணியாற்றிவரும் வான்மதியை, பிஸியான இடைவேளையில் சந்தித்தோம்!

கலெக்டர் கனவை வென்ற கார் டிரைவர் மகள்!

‘‘என்னையும் எங்கக்காவையும் அப்பாவும், அம்மாவும் படிப்போட அவசியத்தை உணர்ந்து படிக்க வெச்சாங்க. சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். பள்ளி நிகழ்ச்சிக்கு ஒருமுறை சிறப்பு விருந்தினரா வந்திருந்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் சார்தான், கலெக்டர் கனவை எனக்குத் தந்தாரு. இளநிலை முடிச்சிட்டு, முதுநிலைப் படிப்பை பகுதி நேரமா படிச்சிட்டே, சென்னை, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்து படிச்சேன். 2011-ம் ஆண்டு முதன்முறையா ஐ.ஏ.எஸ் தேர்வுல கலந்துகிட்டு, நேர்முகத்தேர்வு வரைக்கும் போனேன். 2012-ம் ஆண்டு, முதன்மைத்தேர்வு வரையும், 2013-ம் ஆண்டு, மீண்டும் நேர்முகத்தேர்வு வரையும் போனேன். இடையில் வங்கித்தேர்வு எழுதி தேர்ச்சியடைய, நம்பியூர்ல இருக்கும் ஐ.ஓ.பி வங்கியில உதவி மேலாளர் பணி கிடைச்சது. பின்னர் அகாடமி போக முடியாததால வேலை பார்த்துட்டு, வீட்டிலேயே படிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்று முறை நூலிழையில் கைவிட்ட கலெக்டர் கனவை, இந்த முறை நிறைவேற்றியே ஆகணும்கிற முனைப்போடு 2014-ம் ஆண்டு தேர்வு எழுதி, இப்போ ஜெயிச்சிருக்கேன். இந்த கார் டிரைவர் பொண்ணு கலெக்டர் ஆனதில் பலரோட உதவியும் ஊக்கமும் இருக்கு!

நேர்முகத்தேர்வில், `ஒரு பெண்ணுக்கான முன்னேற்றம் எப்போது கிடைக்கும்?’னு கேட்க, `ஒரு பெண் அவளோட முழுத்திறமையையும் சுதந்திரமா வெளிப்படுத்தும்போதுதான்!'னு சொன்னேன். அந்த சுதந்திரம் எங்க வீட்டில் எனக்குக் கிடைச்சது. கேட்கப்பட்ட 25 கேள்விகள்ல, 6 கேள்விகள் பெண்களின் முன்னேற்றம் சார்ந்ததாவே இருந்தது. ‘பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்க, எத்தகைய கருவியை தேர்ந்தெடுப்பீர்கள்?’'னு கேட்க, ‘கல்வி!'னு சொன்னேன். நான் என்னோட தேர்வுப் பாடமா தமிழை எடுத்திருந்தேன். அரசுப் பள்ளியில தமிழ் வழியில் படிச்சேன். எங்கே படிக்கிறோம் என்பது முக்கியமில்ல, எவ்வளவு உறுதியோட, உழைப்போட படிக்கிறோம் என்பதுதான் வெற்றிக்கான பாதை!’’கம்பீரமாகச் சொல்கிறார், வான்மதி!

நம்ம ஊர் கலெக்டரம்மா!

கு.ஆனந்தராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism