Published:Updated:

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

Published:Updated:

மது பாரம்பர்ய உணவுகளின் முக்கியத் துவத்தை உணர்த்தும் விதமாகவும், சிறுதானிய உணவுகளை ஊக்குவிக்கவும் பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஜூன் 27 அன்று 'நல்உணவு சிறுதானிய விருந்து’ விழாவை நடத்தின. டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் கிராம போஜன், சக்தி மசாலா நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் அர்ஜுன் ஆர்கானிக், மொபிடெக், மயூரா ஃபுட் புராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தோள் கொடுத்தன. நிகழ்ச்சியில் பல மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள, அரங்கம் மற்றும் கண்காட்சி திடல் நிரம்பி வழிந்தன!

டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் மாணவியர் நலன் டீன் அபிதா சபாபதி பேசும்போது....

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!
பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

அந்நியர்கள் வந்த பிறகுதான் நமது நிலத்தடி நீர் பாழாகிப்போச்சு. ஆனா அவன், நம்ம ஊர் குடிநீரில்தான் கெடுதல் இருக்குனு சொல்றான். அதனால்தான், அவன் இங்கு தயாரிக்கும் குளிர்பானங்கள் நச்சுத்தன்மையுடன்  இருக்காம். அதை எல்லாம் நாம் நல்லா கேட்டுட்டு, அப்புறம் மறந்துட்டு, அவன் விற்கும் குளிர்பானங்களையே  தொடர்ந்து வாங்குறோம்.

இதுமாதிரிதான் ஃபாஸ்ட் புட் மோகமும்... அந்த உணவு நம் உடலில் வேகமா வேலை செய்யாது. அது நம் உடலில் சென்றதும் உடனே ஜீரணமாகாது. மெதுவா கொடிய நோய்களை உண்டுபண்ணும். இதுபோல அந்நிய மோகம் வந்துதான் நமது பாரம்பர்ய உணவை மறந்தோம். இப்ப நமது பாரம்பர்ய உணவுகள் பற்றின ஒரு விழிப்பு உணர்வு எல்லாரிடமும் வந்திருக்கு. ஆனா, மக்கள் இதில் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருந்தாதான், நாம ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். மறுபடியும் வேறு ஒரு அந்நிய மோகத்தில் திசை மாறக்கூடாது'' என்று கூறினார்.

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

நிகழ்ச்சியில், 'உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதை வலியுறுத்திப் பேசிய சித்த மருத்துவர் டாக்டர் தெ.வேலாயுதம், ''இன்று சமைக்கத் தெரியும் என்று சொல்வதை கேவலமாகவும், சமைக்

கத் தெரியாது என்பதை டிரெண்டாகவும் நினைக்கிறார்கள். உயிர்வாழத் தேவையான அடிப்படை விஷயத்தை தெரிந்துகொள்வதிலும், 'தெரியும்’ என்று சொல்வதிலும் என்ன தயக்கம்?'' என்று உரிமையோடு கேட்டவர், உடல் மற்றும் உணவு பற்றி விளக்கமாகப் பேசினார்.

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சத்துகள் உள்ளன என தகவல்கள் கொடுத்த மூத்த ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, ''சிறுதானிய உணவுகளைக் குறைந்த அளவில் இருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். ஒரே சிறுதானியத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வதை விட, எல்லா சிறுதானியங்களும் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்!'' என்று முக்கியமான அறிவுரையைச் சொன்னார்.

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

 நிகழ்ச்சியில் 'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற தலைப்பில் பேசிய மண்புழு விஞ்ஞானி முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், வீட்டிலேயே எளிமையாக மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கக் கற்றுக்கொடுத்தார். சிறப்புரை வழங்கிய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர், கு.செல்லமுத்து, ''அடுத்த தலைமுறைக்கு சொத்து, நிலம், பட்டுச்சேலையைச் சேர்த்துவைத்துப் போக வேணாம். இதை எல்லாத்தையும்விட அவசியமான... விஷமில்லாத காத்து, தண்ணி, நிலத்தை விட்டுப் போவோம்?'' என்பதை வலியுறுத்தினார்.

தொடர்ந்து, சமையல் கலை நிபுணர்கள் ரேவதி சண்முகம் மற்றும் 'மெனு ராணி’ செல்லம் இருவரும் சிறுதானிய உணவுகளைச் சமைத்துக் காட்டினர்.

'லாபம் கொடுக்கும் சிறுதானியங்கள்’ என்ற தலைப்பில் பேசிய முனைவர் நிர்மலகுமாரி,

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!
பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

பிளாக் ஃபாரஸ்ட் கேக்  உண்ணும் குழந்தைகளிடம் கறுப்பான கேழ்வரகு தோசை சாப்பிட நாம் எடுத்துச் சொன்னால் உண்ண மாட்டார்களா?!'' என்றதும் அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

'புத்தர் கலைக்குழு’ மகிழினி மணிமாறனின் கிராமிய கலைநிகழ்ச்சியுடன் விருந்து நடைபெற, நிறைவுற்றது விழா!

சில குழப்பம்... ஒரு வருத்தம்!

'நல்உணவு சிறுதானிய விருந்து’ விழாவில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறுதானிய உணவு விழாவில்மதிய உணவு விருந்துக்கு 150 ரூபாயும், இரவு உணவுக்கு 300 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிறைய பேர் சிறுதானிய உணவுக்கு முக்கியத்துவம் அளித்து பதிவுசெய்திருந்தனர். ஆனால், உணவு ஏற்பாட் டாளரால் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல், ஒத்துழைக்கத் தவறிவிட்டார். இதனால் பலருக்கு மதிய உணவு கிடைக்காமல் போய்விட்டது. சிலருக்கு குறைந்தளவே உணவு வழங்கப்பட்டது. இவர்களுக்கெல்லாம் கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டது. என்றாலும், உரிய நேரத்தில் உணவளிக்க முடியாமல் போனது பெரிய தவறு என்பதை உணர்ந்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டோம். உணவு தயாரிப்பாளர் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இதற்கு பொறுப்பேற்று நாங்களும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இதேபோன்று இரவு விருந்தில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதற்காகவும் வருந்துகிறோம்.

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

இனிவரும் காலங்களில் விகடன் மீது அன்பு கொண்டு வரும் வாசகர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயல்பட உறுதியேற்கிறோம்!

 "இயற்கை உணவுக்கு மாறுகிறோம்!"

பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!

நம்மிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் ராமஜெயம் தம்பதி, ''நாங்க இயற்கை உணவுக்கு மாறிக்கிட்டு இருக்கோம். எங்களைப் போன்றோருக்கு இதுபோன்ற நிகழ்ச்சி ரொம்ப பயனுள்ளதாஇருக்கு. மாடித் தோட்டம் போடுவதில் இருந்த சந்தேகங்களையும் தெளிவுபடுத்திட்டீங்க. சிறுதானியப் பொருட்காட்சியில், சிறுதானியத்தில் எத்தனை வகைகள்னு பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனோம்!'' என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரின்குரலாக எதிரொலித்துச் சென்றனர்.

அவரைக்காய் இருக்க கேரட் எதற்கு..?

சித்த மருத்துவர் வேலாயுதம் சொன்ன முக்கியமான சில விஷயங்கள் இங்கே...

• சமையல் வேலைகளிலேயே எல்லா ஆசனங்களும் இருக்கின்றன. கீழே அமர்ந்து, காலை நீட்டிக்கொண்டு அரிவாள் மனையில் காய்களை அரிவது ஒரு வகையான ஆசனம். அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் அரைப்பது ஒரு வகையான ஆசனம். நின்றுகொண்டு சமைப்பது உடலுக்கு ஏற்றதல்ல. குனிந்து, நிமிர்ந்து சமைப்பதே உடலுக்கு நல்லது.

• பீட்டா கரோட்டின் நம்முடைய அவரைக்காயிலே உள்ளது. அதை விட்டுவிட்டு கேரட்டை தேடி ஓட வேண்டியதில்லை. அவரைக்காயில் பீட்டாகரோட்டீனோடு, நார்ச்சத்தும் இருப்பதால், சிறுகுடலில் உள்உறிஞ்சுதல் மூலம் நுண்சத்துக்களைப் பிரித்து உடலுக்கு வழங்குவது எளிதாகிறது.

வைட்டமின்  ஏ பப்பாளியிலே அதிகளவில் இருக்கிறது. எனவே, மெழுகு பூசப்பட்ட ஆப்பிளை வாங்க வேண்டிய அவசியமில்லை.கொய்யாவில் இல்லாத சத்துக்களே இல்லை. ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச நுண்ணூட்டச் சத்துக்கள் ஆராய்ச்சி நிலையம், 'உலகிலேயே அதிக சத்துக்கள் கொண்டது கொய்யாப்பழம்’ என்று சொல்லியுள்ளது.

• பாலை நேரடியாக அருந்துவது தவறு. அதை தயிர், மோராக்கி சாப்பிடுவதே நல்லது. மோர், உடலின் குடல் பகுதியில் 'பாஸிட்டிவ் ப்ளோரா’ என்கிற உடலுக்கு நன்மை புரிகிற பாக்டீரியாவை உருவாக்குகிறது. இதேபோன்று இளநீர், பதநீர் இவையெல்லாம் நன்மை பயக்கக்கூடியவை. அதனால், ரசாயன குளிர்பானங்களைத் தவிர்த்து இவற்றைப் பருகலாம்.

• கடைகளில் விற்கப்படுகிற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், பெண்களுக்காக விற்கப்படுகிற பெரும்பாலான முன்னணி ஊட்டச்சத்து பவுடர்களில் இருப்பது, கடலைப் பிண்ணாக்குத்தான். இதோடு சாப்பிட உகந்த விதத்தில் வேதிப்பொருட்களையும் கலக்கிறார்கள். கால்சியம் சத்துக்காக மாட்டின் எலும்பை அரைத்தும் கலக்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

• இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்ற மாத்திரை ஆன்ட்டி கொலஸ்ட்ரால் மாத்திரைகள்தான். இவைதான் கொடிய பக்கவிளைவுகளையும் உண்டாக்கக்கூடியவை.

கே.அபிநயா, ச.சந்திரமெளலி 

படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தி.ஹரிஹரன், ரா.வருண்பிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism