Published:Updated:

பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ!

பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ!

பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ!

பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ!

Published:Updated:

ன் வீட்டில் தோட்டம் வைத்திருப் பதுடன், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் வைக்க நினைப்பவர்களுக்கும், வைத்திருப்பவர்களுக்கும் ஆலோசனைகள் சொல்லும் வகையில், ‘தோட்டம்’ என்ற தன் வலைப்பூவில், பல்வேறு தகவல்கள் பகிர்ந்து வருகிறார், கோவையைச் சேர்ந்த சிவா!

பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ!

‘‘திருநெல்வேலிதான் என் சொந்த ஊர். தோட்டத்து வீட்டில் வளர்ந்த எனக்கு, தோட்டம்னா கொள்ளை ஆசை. படிப்பு, வேலைனு டவுனுக்கு வந்துட்டாலும், தோட்டத்தை நான் விடல, தோட்டம் என்னை விடல!’’ என்று சிரிக்கும் சிவா, கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனமொன்றில் மென்பொருள் அலுவலர். தன் வீட்டைச் சுற்றி 1,000 சதுர அடியில் தோட்டம் வைத்திருக்கும் இவர், வீட்டின் மொட்டை மாடியிலும் மாடித் தோட்டம் அமைத்து தன் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரை வகைகள் அனைத்தையும் தானே விளைவித்துக்கொள்கிறார், தேவைக்கு மிஞ்சியவற்றை உறவினர்களுக்கும் கொடுக்கிறார். விதை வாங்கியதில் ஆரம்பித்து, பந்தல் அமைத்தது, உரமிட்டது, பூ பூத்தது, காய் காய்த்தது என தன் செடிகளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் படமெடுத்து பதிவிட்டும், அந்த அனுபவங்களை வழிகாட்டலாகவும் எழுதி வரும் இவரின் ‘தோட்டம்’ வலைப்பூவுக்கு, சிறப்பான வரவேற்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ!

‘‘கோவையில் வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பான ஒரு செமினாரில் கலந்துக்கிட்டேன். அதில் அடிப்படை விஷயங்களை கத்துக்கிட்டு, வீட்டில் செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். நான் நட்ட செடி மெள்ளமெள்ள வளர்ந்து வருவதைப் பார்க்கும்போது, ஒரு உயிரை நானே உருவாக்குவது போன்ற சந்தோஷத்தையும் பெருமையையும் தரும். ஏற்கெனவே ஒரு பிளாக் எழுதி வந்த நான், பின் என் தோட்டத்துக்காகவே ‘தோட்டம்’ என்ற பிளாக் ஆரம்பிச்சேன். இதில் வீட்டுத் தோட்டத்துக்கான அடிப்படை விஷயங்கள், தவிர்க்க ண்டிய தவறுகள், எங்கெல்லாம் விதைகள் வாங்கலாம் என்பது பற்றி... கண்காட்சி, செமினார், வொர்க் ஷாப்னு நான் வீட்டுத்தோட்டம் தொடர்பா சென்று வரும் இடங்களில் கிடைத்த தகவல்களை எழுதினேன். என் தோட்டச் செடிகளோட புகைப்படங்களைப் பதிவேற்றினேன்.

`பிளாக்'கை ஆரம்பிச்ச சில நாட்களிலேயே எதிர்பார்த்ததுக்கும் மேல வரவேற்பு கிடைச்சது. அதில் பலர் தங்களோட வீட்டுத் தோட்டத்துக்கு ஆலோசனைகள் கேட்க, பலர் தங்களோட தோட்ட அனுபவங்களை வழிகாட்டலா கொடுக்கனு... அது பசுமையான சங்கமமாச்சு. ‘10 வகை கீரை வளர்க்குறீங்களா..?’னு ஆச்சர்யமா கேட்கிறவங்ககிட்ட, ‘உங்க வீட்டுலயும் இது சாத்தியம்தான்... என்னைப் போல தினமும் ஒரு மணி நேரம் தோட்டத்துக்கு செலவழிச்சா!’னு நான் சொன்னதை நம்பி, பலரும் வீட்டுத்தோட்டம் அமைக்க முன் வர்றாங்க. டபுள் சந்தோஷம் எனக்கு!’’

- தன் வீட்டு மொட்டை மாடியில் புதிதாக இதழ் விரித்திருக்கும் பூவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார் சிவா!

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism