Published:Updated:

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

Published:Updated:

பயறு சூப்... பனை பணியாரம்!

நுங்கு பணியாரம்

தேவையானவை: உளுத்தம் பருப்பு - ஒரு கப், பச்சரிசி - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய நுங்கு - அரை கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டித் தூள் - அரை கப், நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகள் கைமணம்

செய்முறை: உளுத்தம்பருப்பை பச்சரிசியுடன் சேர்த்து ஊறவைத்து விழுதாக அரைக்கவும். மாவை போண்டா போடும் பதத்தில் வைத்துக் கொண்டு அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) கருப்பட்டித் தூள், நறுக்கிய நுங்கு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பணியார சட்டியின் குழிகளில் நெய் அல்லது எண்ணெய் தடவி மாவை ஊற்றி, இருபுறமும் நன்கு சிவந்ததும் எடுக்கவும்.

- மகாலக்ஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி

பச்சைப் பயறு - பனீர் சூப்

தேவையானவை: துருவிய பனீர் - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், தக்காளி - 2, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - அரை கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு

வாசகிகள் கைமணம்

செய்முறை: முளைகட்டிய பச்சைப் பயறை மிக்ஸியில் போட்டு, அரை கப் துருவிய பனீர் சேர்த்து மையாக அரைக்கவும். தக்காளியை தோலுரித்து விதை நீக்கி சாறு எடுக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெயை சூடாக்கி, மீதமுள்ள பனீரை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். பிறகு, அதே வாணலியில் மீதமுள்ள வெண்ணெயை சூடாக்கி சோம்பு சேர்த்து, பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி உப்பு, தக்காளிச் சாறு சேர்க்கவும். பிறகு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் பச்சைப் பயறு - பனீர் கலவையைச் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கி, வதக்கி வைத்திருக்கும் பனீரை சேர்த்துப் பரிமாறவும்.

- விஜயலக்ஷ்மி, மதுரை

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism