Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:

‘‘நான் செம வாயாடி!’’

க்‌ஷத்ரா ... துறுதுறு குறுகுறு ’விஜே’! விஜய் டி.வி `ஜோடி நம்பர் ஒன்’ல கலக்கிவிட்டு, இப்போது சன் டி.வி சிறப்பு நிகழ்ச்சிகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.

‘‘நான் வாயாடிங்கிறது மட்டும் ஊருக்கே தெரியும். தெரியாத சில விஷயங்களையும் ஷேர் பண்ண விரும்புறேன். அப்பாவுக்கு துபாயில் வேலை. அதனால அங்க படிச்சிட்டு, அப்புறம் செட்டிநாடு வித்யாஷ்ரம்ல அட்மிஷன். என்னோட ஸ்கூல் சீனியர்ஸ் விஸ்காம் படிச்சப்போ, அவங்களோட குறும்படங்களில் என்னை நடிக்க வெச்சாங்க. அப்படி மீடியாவில் வலது காலை எடுத்து வெச்சு, இப்போ சன் டி.வி வரைக்கும் வந்தாச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேபிள் கலாட்டா!

எங்கம்மா மாதிரியே எனக்கும் டிரெஸ்ஸிங்கில் பயங்கர இன்ட்ரஸ்ட்.  அதேபோல செம ஷாப்பிங் மேனியா எனக்கு! ஒரு பெட்டிக் கடையிலகூட 10,000 ரூபாய்க்கு பில் போட்டுடுவேன். அப்புறம்... பயங்கரமா சாப்பிடுவேன். உலகத்துலேயே பிடிச்ச விஷயம் சாப்பாடுதான். அதுக்கு ஏற்ற வொர்க் அவுட் செஞ்சிடுவேன். முதல்ல பூசணிக்காய் மாதிரி செம குண்டா இருந்தேன். ஜிம்மில் டிரெயினர் கொடுத்த பயிற்சியை சின்சியரா ஃபாலோ பண்ணி ஒருவழியா `ஸ்லிம்மி’ ஆயிட்டேன்!’’

‘‘நடிகர் விக்ரம் உங்களோட ஜிம் ஃப்ரெண்டா..?!’’

‘‘அஃப்கோர்ஸ்! ரெண்டு பேருக்கும் ஒரே டிரெயினர்தான். விக்ரம் பொண்ணு பேரு அஷு. என்னை என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நஷுன்னு கூப்பிட, எனக்கு முன்னாடி என் பேர் அவருக்கு ஃப்ரெண்ட் ஆயிருச்சு. அவரும் அப்படித்தான் என்னைக் கூப்பிடுவாரு!’’

‘‘வி.ஜே நக்‌ஷத்ராவோட எதிர்காலக் கனவு..?’’

‘‘வி.ஜே நக்‌ஷத்ராவுக்கு எதிர்காலக் கனவெல்லாம் பெருசா இல்ல. ஆனா, நக்‌ஷத்ராவுக்கு ஒரு பெரிய குறிக்கோள் இருக்கு. இப்போ ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சிட்டு இருக்கேன். பெரிய பிஸினஸ் உமனா வரணும்!’’

‘‘நக்‌ஷத்ராவை எப்படி இம்ப்ரஸ் பண்ணலாம்?’’

‘‘நான் அசந்து போய் ‘வாயடைச்சு’ நிக்கிற மாதிரி ஏதாவது பண்ணணும்!’’

சத்தியமா அது முடியாது!

‘‘ஃப்ரெண்ட்ஸ்தான் என் உலகம்!’’

ராஜ் டி.வி ‘தூம் ஷோ’ நிகழ்ச்சியில் 80-க்கும் அதிகமான எபிசோடுகளைக் கடந்து வந்திருக்கிறார் ராஜீவ்! காலேஜ் பட்டர்ஃப்ளைகளைக் கலாய்க்கும் கலாட்டா பார்ட்டி!

‘‘துபாயில் எம்.பி.ஏ படிச்சுட்டு, லாஜிஸ்டிக் மேனேஜரா வேலை பார்த்தேன். அப்புறம் சென்னையில கேபின் க்ரூவா ஏர்போர்ட்ல வேலை. திடீர்னு மீடியா கிறுக்குப் பிடிக்க, சன் டி.வி ருமேஷ் மூலமா ராஜ் டி.வி ஆடிஷன் தகவல் கிடைச்சு கலந்துக்கிட்டேன். இப்போ அவள் விகடன் இன்டர்வியூ வரை வந்துட்டேன். படிச்ச படிப்பு, பார்த்திட்டிருந்த வேலையை எல்லாம் உதறிட்டு வந்தப்போவும், எங்க போனாலும் நான் ஜெயிப்பேன்னு ஆசீர்வாதம் பண்ணின அம்மாவோட நம்பிக்கையை காப்பாத்தினது பெரிய நிம்மதி, சந்தோஷம்.

கேபிள் கலாட்டா!

கார்ல லாங் டிரைவ் போகப் பிடிக்கும். ரேஸில் கலந்துக்குவேன். எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்கூட ஜாலியா இருக்குறதுக்காகவே இந்தப் பிறவி எடுத்திருக்கேனோனு அப்பப்போ தோணும். அவங்கதான் என்னோட உலகம். சினிமா கனவு ஒரு பக்கம்... துரத்திட்டே இருக்கேன்!’’

பிராப்திரஸ்து!

‘‘கிசுகிசு என் சாய்ஸ்!’’

ப்ரீத்தி... வேந்தர் டி.வி-யின் ‘வேந்தரின் விருந்தினர்’, ‘மூவி ஸ்பெஷல்’, மற்றும் ‘ஸ்டார்ஸ் டே அவுட்’ என வீக் எண்ட் நிகழ்ச்சிகளின் நாயகி!

‘‘கார்ப்பரேட் செகரட்டரிஷிப் படிச்சுட்டு, இப்போ ஏ.சி.எஸ் பண்ணிட்டு இருக்கேன். கூட்டுக் குடும்பத்தின் செல்ல மகள். யாராச்சும் என் பக்கம் திரும்பினா, ரெண்டு அண்ணன்களும் டிஷ்யூம் டிஷ்யூம்! நான் ஆடிட்டர் ஆவதை எதிர்பார்த்திட்டிருந்த வீட்டுல ‘விஜே...’னு போய் அனுமதி கேட்டப்போ, நண்டு சிண்டுல ஆரம்பிச்சி அவ்ளோ பேரும் செம பரேடு! சில குடும்பச் சிக்கல்களைக் கடந்து, ஒருவழியா பச்சைக்கொடி காட்ட வெச்சுட்டேன். இப்போ சினிமா பிரபலங்களோட நான் ஷோ பண்றதைப் பார்த்துட்டு வீட்டுல ஹேப்பி அண்ணாச்சி!

கேபிள் கலாட்டா!

சினிமா கிசுகிசு படிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். பத்திரிகைகள் பொழுதுபோக்கு. அவள் விகடன் ‘அனுபவம் பேசுகிறது’, ‘குட்டீஸ் குறும்பு’ ரெண்டும் என் ஃபேவரைட். மேக்கப் போடத் தெரியாத அப்பாவிப் பொண்ணு நான். என்னோட ஸ்டைலிஸ்ட் மற்றும் தோழி ஜீவிதா புண்ணியத்துல ஏதோ ஓட்டிட்டு இருக்கேன். பல சினிமா மக்களை பார்த்துப் பேசியாச்சு. எனக்கு ஜோதிகா ரொம்பப் பிடிக்கும். அவங்களை ஒரு பேட்டி எடுக்கணும். அதான் இப்போதைக்கு என்னோட குட்டி ஆசை!’’

ஷார்க்... ஷாக்!

கேபிள் கலாட்டா!

‘வருடத்தில் ஒரு முறை மட்டுமே...’ என்ற புரமோ பார்த்ததுமே, டிஸ்கவரி சேனல் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் அது ‘ஷார்க் வீக் ஷோ’ பற்றி என்று! சுறாக்களின் இனப்பெருக்க வாரத்தை ‘சுறாக்களின் வார’மாகக் கொண்டாடுவது டிஸ்கவரியின் வழக்கம். பொதுவாக, ஜூலை மாதம் 15 தேதிக்குப் பிறகு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை, இந்த வருடம் ஜூலை 5-ம் தேதியே ஆரம்பித்து முடித்துவிட்டார்கள் சேனல் நிர்வாகத்தினர். வொய் பாஸ்?! போட்டி சேனல்கள் பலவும், இதே சுறாக்களை அடிப்படையாக வைத்து நிகழ்ச்சிகளை அறிவித்ததுதான் இதற்குக் காரணமாம். நிகழ்ச்சியைத் தவறவிட்டவர்கள்... நோ கவலை ப்ளீஸ். டிஸ்கவரியின் அதிகாரபூர்வ யூடியூப் சேனனில், https://www.youtube.com/watch?v=HjlmIREzkm0 என்ற லிங்கில் கிளிக்குங்கள்.

சுறா... சூப்பர்றா!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

நல்ல ஐடியா!

’’ஜெயா டி.வி-யில் ‘ஆரோக்கிய உணவு’ நிகழ்ச்சியில் சமையல் செய்யும் முறை சுலபமாக இருக்கிறது. எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு சமைக்கிறார்கள். அத்துடன் சிறிய கதையும் சொல்கிறார்கள். சமையல் நிகழ்ச்சி பார்க்க விருப்பம் இல்லாதவர்கள்கூட கதையின்மூலம் சமையலை பார்க்க விரும்புவார்கள்... இது நல்ல ஐடியா!’’ என்று பாராட்டுகிறார் கும்பகோணத்தில் இருந்து ஜி.விஜயலட்சுமி.

இதுவா வீரச்செயல்..?

’’சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘தில் தில் தில்’ என்ற நிகழ்ச்சியில் ‘வீரச்செயல்’ என்ற  பெயரில் கடந்த வாரம் அருவருக்கத்தக்க ஒரு செயலை அரங்கேற்றினர். ஒரு பெண் நீளமான பெட்டியொன்றில் படுக்க, அவரது உடலில் 2000-க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகளைக் கொட்டுகிறார்கள்! ஐந்து நிமிடத்துக்கும் மேலாக அவரது உடலில் அந்தக் கரப்பான் பூச்சிகள் ஊறுகின்றன. இதுவா வீரச்செயல்? இதைப் பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படுவதற்குப் பதில் அருவருப்புதான் ஏற்படும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை சேனல்கள் ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது’’ என்று ஆலோசனை கூறுகிறார் சேலத்தில் இருந்து எஸ்.ராஜம்.

மணியான மங்கையர் நிகழ்ச்சி!

’’சமீபத்தில் பொதிகை டி.வி-யில் ‘மங்கையர் மருத்துவம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில், குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு, குழந்தை பெற்றுக்கொள்வதற்குரிய வழிமுறை களைத் தெளிவாகக் கூறினார் டாக்டர் லோக நாயகி. மாதவிடாய் பிரச்னைகள் தீர அரிய ஆலோசனைகளையும் கூறினார். பெண்களுக்குப் பயனளிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பிற சேனல்களும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் கிருஷ்ணகிரியில் இருந்து வி.கலைச்செல்வி.

ரிமோட் ரீட்டா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism