Published:Updated:

சம்மதம்!

சம்மதம்!

சம்மதம்!

சம்மதம்!

Published:Updated:

தோஷம் தீர்க்கும் ஸ்வாதி !

விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூவரசன்குப்பம், லட்சுமி நரசிம்மர் ஆலயம். ஹிரண்ய வதத்துக்குப் பிறகு, இங்கு சாந்த முகத்துடன் நரசிம்மர் தன் மடி மீது மகாலட்சுமியைத் தாங்கிக் காட்சி அளிப்பதால், இந்தத் திருத்தலம் 'தென் அஹோபிலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

சம்மதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹிரண்ய வதம் செய்த பிறகு, தமிழகத்தின் சோளிங்கர், நாமக்கல், பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோயில், சிங்கப்பெருமாள் கோயில், அந்திலி (திருக்கோயிலூர் அருகில் இருப்பது) போன்ற எட்டு இடங்களில் நரசிம்மன் காட்சி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் சிங்கிரிக் கோயில், பூவரசன்குப்பம், பரிக்கல் மூன்றும் ஒரே நேர்க்்கோட்டில் அமைந்திருப்பதால் ஒரே நாளில் தொடர்ந்து இத்தலங்களை தரிசித்தால் தோஷங்கள், கடன், குடும்பப் பிரச்னைகள் போன்றவை நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.

கி.பி. 5ம் நூற்றாண்டில், சைவம்  வைணவத்துக்கு இடையே கடும் போட்டிகள் நிலவியபோது, சமண மதம் செல்வாக்குடன் திகழ்ந்தது. வேத மதங்களை வீழ்த்த சமண மதத்தைச் சேர்ந்த பல்லவ மன்னன் ஒருவன், சைவ  வைணவக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினான். நாராயணனின் பக்தரான நரஹரி என்னும் முனிவர், மன்னனின் தவறுகளைத் தட்டிக் கேட்க, அவரைக்கழுவில் ஏற்றிக்கொல்லுமாறு உத்தரவிட்டான். மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகட்டும் என்று சாபம் கொடுத்துவிட்டார் அந்த முனிவர்.

சாப விமோசனம் பெற அம்முனிவரைத் தேடினான். ஒருநாள் பூவரச மரம் ஒன்றின் கீழ் உறங்கிய அவன் மீது ஓர் இலை விழ, அதில் லட்சுமி நரசிம்மர் தோற்றம் கண்டு அதிசயித்துப் போனான். அப்போது அவன் முன் தோன்றிய முனிவர்,

சம்மதம்!

குணமடைவாய்’ என்று சொன்னதோடு பூவரசமங்கலம் என்ற அந்த இடத்தில் லட்சுமி நரசிம்மருக்குக் கோயில் கட்டிப் புண்ணியம் தேடிக்கொள்ளுமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆலயத்தைக் கட்டி முடித்தான் அம்மன்னன்.

''தொடர்ந்து மூன்று ஸ்வாதி நட்சத்திரத்துக்கு இக்கோயிலை வழிபட்டால் தோஷங்கள் தீர்வதுடன் நினைத்தது நடக்கும்!'' என்கிறார், இத்தலத்தின் தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி.

ஜெ.முருகன் படங்கள்: தே.சிலம்பரசன்

ஏழையின் சிரிப்பில் சிறக்கும் நோன்பு..!

ம்ஜான் நோன்பின் அடிப்படை, அற்புதத் தத்துவங்களைச் சொல்கிறார், சென்னை ஜமா அத்துல் உலமா சபையின் தலைவர் ஜி.எம்.தர்வேஷ் ரஷாதி.

''ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற முகமது நபிகளின் வார்த்தைகளே, இஸ்லாம் நோன்பு எதற்காக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கான பதில். ஒவ்வொரு வருடமும் ரம்ஜானை ஒட்டி 30 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் நோன்பின் முக்கியக் காரணம், ஏழையின் பசியை உணர்வதுதான்.

சம்மதம்!

இந்த நோன்பு காலத்தைச் சலுகைக் காலம் எனச் சொல்கிறது இஸ்லாம். இந்த நேரத்தில் ஓர் ஏழைக்குச் செய்யும் உதவி, 700 பேருக்கு செய்த நன்மையாக இறைவனிடம் கணக்கில் வைத்துக்கொள்ளப்படுகிறது.  

பிறை நாளை அறிவிக்க அரசே இஸ்லாம் சமூகத்துக்கென ஒருவரை நியமித்திருக்கிறது. அவரை ஹாஜி என்று சொல்கிறோம். ஹாஜி என்பதற்கு நீதிபதி என்று பொருள். ஒவ்வொரு வருடமும் ரமலானில் பிறை பார்த்துத்தான் நோன்பு தொடங்குகிறோம். சில நேரங்களில் பிறை பார்வைக்குத் தெரியாத நிலையில், 100 கிலோ மீட்டருக்குள் பிறை தெரிவதாக யாரேனும் சொன்னால், அதை மேலே சொன்ன ஹாஜியிடம் மற்றொரு சாட்சியோடு கூறினால், அதை ஏற்று முறைப்படி ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்க ஆரம்பிப்போம்.

சூரியன் உதிப்பதும், மறை வதும் ஒரு நாளில் நோன்பை தொடங்குவதற்கு மற்றும் முடிப்பதற்கான நேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்நேரத்தில் எந்த ஓர் ஆகாரமும் இன்றி இருக்கவேண்டும் என்பது இஸ்லாம் வலியுறுத்துவது. அதாவது எச்சிலையும் சேர்த்து. தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பவர்கள் ஊசி வழியாக மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடாது.

சம்மதம்!

தொழுகை செய்வதற்கு முன்பாக குளித்து உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மசூதிக்கு சென்று தொழுகை செய்வதற்கு முன்பு முழங்கை, முகம், காதுப் பகுதியை தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். கையின் கட்டை விரலானது காது மடலில் பின்புறம் கீழிருந்து மேல் நோக்கியும், ஆள்காட்டி விரலானது காதின் உட்பகுதியில் பின் நோக்குமுறையிலும் காதுகளை சுத்தம் செய்ய வேண்டும். பிறகே, தொழுகையை மேற்கொள்ள வேண்டும். பொதுவாகவே தினமும் ஐந்து முறை தொழவேண்டும். இதுவே நோன்பு நாட்களில் தராவிஹ் எனப்படும் இரவுத் தொழுகையையும் கடைப்பிடிக்க வேண்டும்!''

வே.கிருஷ்ணவேணி

படம்: தி.குமரகுருபரன்

கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்!

த்தோலிக்க கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து, மாதாவுக்கு அடுத்தபடியாக புனிதர்களுக்கு (செயின்ட்) முக்கியத்துவம் தருகிறார்கள். பொதுவாக புனிதர்என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை மற்றவர்களது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினைவுகூரப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் தற்போது போப் ஆண்டவ ரால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இத் தகைய அறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதைக் குறிக்கும். பொதுவாக ஒருவருக்கு திருச்சபை புனிதர் பட்டம் வழங்கு முன் மூன்று படி நிலைகள் கையாளப்படுகின்றன. வணக்கத்துக்கு உரியவர் நிலை, முக்திப்பேறு பெற்றவர் அல்லது அருளாளர் நிலை, புனிதர் நிலை.

சம்மதம்!

புனித தோமையார், புனித சவேரியார் போன்றவர்கள் முக்கியமான புனிதர்களில் சிலர். அப்படி ஒருவர்தான், புனித யூதா ததேயு (ஷிணீவீஸீt யிuபீமீ (கிஜீஷீstறீமீ). சென்னை மாதவரத்தில் அசிசி நகர் என்ற இடத்தில் உள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில், சமீபத்தில் புனிதருக்கு விழா நடந்தேறியது.

இவர் கி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள், அதாவது, அப்போஸ்தலர்களுள் ஒருவர். உழவுத்தொழில் செய்துவந்திருக்கிறார். மேலும் இவர் சிறுவயது முதல் இயேசுவுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்.  

திருமறை பரப்பிய புனித யூதா ததேயுவின் அயராத உழைப்பால் விசுவாசம் வளர்ந்து  ஆன்மிகப் பணி பெருகியது. புதுமைகள் பல நிகழ்ந்தன. இதைக் கண்ட சில விரோதிகள், சதித்திட்டம் தீட்டினர். கிபி 67ம் ஆண்டு, லெபனானில் கோடரியால் வெட்டப்பட்டு ரத்த சாட்சியாய் மரித்தார்.

இன்றைக்கு கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கையிழந்தவர்களின் நம்பிக்கையாகவும், இயலாதவற்றை இயற்றுபவராகவும் இருக்கிறவர், புனித யூதா ததேயு என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்!

எம்.மரிய பெல்சின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism