Published:Updated:

சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!

சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!

சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!

சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!

Published:Updated:
சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!
சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!

' நீ ரொம்ப ஹோம்லி... உனக்குப் புடவைதான் சரிவரும்’, நீ ரொம்ப மாடர்ன்... உனக்குப் புடவை கொஞ்சமும் செட் ஆகாது’,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!

உனக்கு தென்னிந்திய முகம்... உனக்கு நார்த் டிரெஸ் செட் ஆகாது’... அப்படி இப்படின்னு யாராச்சும் உங்களைக் குறை சொன்னா நம்பிடாதீங்க... இப்போ இருக்கும் மேக்கப் உபகரணங்களை வெச்சு, ஒருவரின் தோற்றம் எப்படி இருக்கோ அதற்கு நேர்மாறா அவங்களை மாற்ற முடியும்!''

சொல்ல வந்ததை தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்கிறார் சென்னை விகாஷினி பியூட்டி சலூனின் உரிமையாளர் லட்சுமி மனோகரன்.

'மெட்ராஸ்’ திரைப்பட  புகழ், நடிகை ரித்விகாவை எடுத்துக்கலாம், இவங்களை பாத்த உடனே எல்லாரும் ரொம்ப ஹோம்லி, அப்படியே சவுத் இண்டியன் முகவெட்டு’னு சொல்லிடுவாங்க. ஆனா, இவங்களை சவுத் இண்டியன் லுக் மட்டுமில்லாமல் நார்த் இண்டியன் லுக்கிலும் காட்டலாம்' எனும் லஷ்மி, சவுத் இண்டியன் ஸ்டைல் மற்றும் நார்த் இண்டியன் ஸ்டைல் இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட எதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என விளக்குகிறார்.

சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!

சவுத் இண்டியன் ஸ்டைல்

'சவுத் இண்டியன் ஸ்டைல்னா முதல்ல புடவையைத்தான் தேர்ந்தெடுக்கணும். அதுவும் கட்டாயம் காஞ்சிபுரம் பட்டுப் புடவைதான் பெஸ்ட் சாய்ஸ். இதுல அரக்கு நிறம், பாட்டில் க்ரீன் எனப்படும் பச்சை நிறம், மெரூன், சிவப்பு, தங்க நிறம், ராமர் ப்ளூ, மயில் கழுத்துக் கலர்... இதெல்லாம் ஒரு பெண்ணை சவுத் ஸ்டைலில் சட்டென மாத்திடும்.

• உயரம் குறைவா இருக்கவங்களுக்கு சிறிய பார்டர் வைத்த புடவையும். உயரமா இருக்கவங்களுக்கு அகலமான பார்டர் வைத்த புடவையையும் செலக்ட் செய்யணும்.

• நகைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, தென்னிந்தியானு சொன்னாலே தங்க நகைகள்தான். அதிலும் கெம்ப் ஜுவல்லரி எனப்படும் தஞ்சாவூர் நகைகள் மிகமிகப் பொருத்தமா இருக்கும். அதேபோல், நகைகளில் கழுத்தை ஒட்டிப்போடும் நெக்லஸ், ஆரம்... கம்மல்களில் ஜிமிக்கிதான் பெஸ்ட் சாய்ஸ். மாட்டலுடன் போட்டால் டிபிக்கல் தென்னிந்தியப் பெண்ணாவே மாறிடுவீங்க.

• சவுத் ஸ்டைல் புடவைக்கு ஃப்ரீ ஹேர் ஸ்டைல் பொருந் தாது. நீளமான பின்னல்... இல்லைன்னா, கொண்டை போடலாம். கடைசியா அடர்த்தியான மல்லிகைப் பூவை வெச்சா, தென்னிந்திய பொண்ணு ரெடி.

சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!

முகத்துக்கு: லைட் மேக்கப் போதுமானது.

பொட்டு: மெரூன் அல்லது சிவப்பு நிற வட்ட பொட்டு உங் களை பாதி சவுத் இண்டியனா மாத்திடும்.

கண்களுக்கு: சவுத் இண்டியன் ஸ்டைலுக்கு பெரும்பாலும் லைட் பிரவுன், லைட் பிங்க், தங்க நிறம் ஐ ஷேடோ பயன்படுத்தவும். பெரிய கண்களுக்கு  மேல் இமைகளில் மட்டும் ஐ ஷேடோ போட்டு, மேல் இமைகளின் விளிம்பு மற்றும் கண்களுக்கு  அடியிலும் ஐ லைனர் போடலாம். பெரும் பாலும் மிதமான கலர்கள் பயன்படுத்துவது நல்லது.

சிறிய கண்களுக்கு மேல் இமைகளில் மட்டும் இல்லாமல், கண்ணின் கீழேயும் சிறு கோடு போல சற்று பரவலாக ஐ ஷேடோ போட்டு, அதன் பின் ஐ லைனர் போடலாம்.

மூக்கு: சப்பையான மூக்கு எனில் மூக்கின் நடுவே லைட் நிற காம்பேக்ட் பவுடரும், மூக்கின் இரண்டு வெளிப் பகுதியிலும் டார்க் நிற காம் பேக்ட் பவுடரும் அப்ளை செய்தால், மூக்கு எடுப்பாக இருக்கும்.

உதடு: கண்களை ஹைலைட் செய்யும்போது, உதடுகளை சற்று டல்லாக காட்டலாம். இதற்கு பிளம் ஷேட் லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்தலாம். இது நமது இயற்கையான சரும நிறத்துடன் அப்படியே அழகாக ஒத்துப்போகும்.

சவுத் vs நார்த்... மேக்கப் மேஜிக்!

நார்த் இண்டியன் ஸ்டைல்

இப்போதைய டிரெண்ட் மாடல் ரித்விகா போட்டிருக்கும் சோளி டைப் டிரெஸ் அல்லது லெஹெங்காதான். புடவையே கட்டினாலும் ஹெவியாக எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ்தான் வட இந்தியர்களின் ஸ்டைல்.

• நகைகள்னு பாத்தா அதிக வெள்ளைக் கற்கள் பதித்த நகைகள், குறிப்பா ஆன்டிக் குந்தன் நகைகள், டல் ஃபினிஷ்  ஜுவல்லரி... இப்படி ஹெவியான நகைகளைத் தேர்வு செய்யணும்.

• ஹேர் ஸ்டைலைப் பொறுத்தவரை  ரெட்ரோ ஸ்டைலில் மேலே தூக்கி போடப்படும் கொண்டை அல்லது இப் போதைய ஹாட் டிரெண்டான ரோல்ஸ் செய்துகொள்ளலாம்.

முகத்துக்கு: ஹெவி மேக்கப், கன்னங்களில் பிளஷர், முடிந்தால் நல்லா ஷிம்மராகும் பிளஷர் யூஸ் செய்யலாம்.

பொட்டு: நீட்டு அல்லது வட்ட வடிவ பொட்டு, நன்கு கிளிட்டராகும், பளிச் நிற பொட்டுக்கள் நார்த் ஸ்டைலுக்கு ஏற்றது.

கண்களுக்கு: ஸ்மோக்கி ஐ மேக்கப்தான் இப்போதைய டிரெண்ட், மற்றபடி உங்கள் டிரெஸ்ஸின் நிறத்தைப் பொறுத்து கிரே, வயலெட், பிளாக்,  பிங்க், இதோட கோல்ட் அல்லது சில்வர் கிளிட்டர்ஸ் போன்ற ஐ ஷேடோக்களை யூஸ் செய்யலாம்.

மூக்கு: சவுத் ஸ்டைலில் சொன்னது போலவே சப்பையான மூக்குக்கு மேக்கப் போடவேண்டும். ஷிம்மர் பவுடரை மூக்கின் மேல் நடுப்பகுதி மட்டுமல்லாமல், நெற்றி மற்றும் தாடையிலும் லைட் ஆக அப்ளை செய்தால், முகம் முழுவதும் பிரைட் ஆக இருக்கும்.

உதடு: லிப்ஸ்டிக்கைப் பொறுத்தவரை டிரெஸ்ஸுக்கு பொருத்தமான, ஆனால் நல்ல பளிச் நிறங்கள் பெஸ்ட் சாய்ஸ். அதுவும் கிளாஸி எஃபெக்ட் இருப்பது சிறந்தது.

இந்துலேகா.சி
படங்கள்: ஜெ.தான்யராஜு, மாடல்: ரித்விகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism