Published:Updated:

கதிரவனின் கருவறை!

கதிரவனின் கருவறை!

கதிரவனின் கருவறை!

கதிரவனின் கருவறை!

Published:Updated:
கதிரவனின் கருவறை!

டிஸா மாநிலம், பூரி மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் இருக்கிறது கோனார்க் சூரியனார் கோயில். இதன் கம்பீரமும் நேர்த்தியும் அளப்பரியது. கலிங்கத்து கோயில் களின் வரிசையில் கடைசியாக 13ம் நூற்றாண் டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், ஸ்தாபித்த சில காலத்துக்குள்ளாகவே வழிபாடுகள் நின்று விட்டன. இருப்பினும் இன்றைக்கு தினமும் குறைந்தபட்சம் 15,000 பேராவது இதைக் காண வருகிறார்கள்!

சிற்பக் கவிதையான இந்தக் கோயிலைக் காண்பவர்கள் அனைவரும், தெய்வ சக்தியின் உந்துதல் இல்லாமல் சாதாரண மனிதனின் உளிகள் இதைச் செதுக்கியிருக்க முடியாது என்றே எண்ணுகிறார்கள். நோக்கும் இடமெல்லாம் செதுக்கு வேலைப்பாடுகளுடன் கூடிய இக்கோயிலில் வீற்றிருக்கிறார், சூரியனார். இங்குள்ள குளத்தில் நீராடி வழிபட்டால் சரும நோய்கள், பார்வைக் குறைபாடுகள், தொழுநோய் என்று பலவற்றிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கோயிலை, 12,000 சிற்பிகள் சேர்ந்து, 12 வருடங்கள் பாடுபட்டு கட்டியுள்ளனர். முடிக்கும் தறுவாயில் கோபுரத்தின் உச்சியில் சக்தி வாய்ந்த காந்த குவிமாடத்தை எவராலும் பொருத்த முடியவில்லை. மறுநாள் சூரியன் உதிப்பதற்குள் அந்த மாடம் பொருத்தப்படவில்லை என்றால் எல்லா சிற்பிகளின் தலைகளும் உருளும் என்று அரசன் கெடு வைத்துவிட்டான். தலைமை சிற்பியின் மகனான 12 வயதுச் சிறுவன், தன் தந்தையிடம்,

கதிரவனின் கருவறை!

கவலை வேண்டாம்' என்று கூறி, நடுநிசியில் அனைவரும் தூங்கும்போது மேலே சென்று பொருத்திவிட்டான். மறுநாள் காலை சூரியக் கதிர்கள் பட்டு குவிமாடம் ஜொலித்தது. ஆனால், அந்தச் சிறுவனை மட்டும் எங்கு தேடியும் காணவில்லையாம்.

கங்கா வம்சத்தைச் சேர்ந்த நரசிம்ஹ தேவரால் கட்டப்பட்ட இந்தக் கோயில், கலிங்கக் கட்டடக் கலையின் உச்சம். சூரியனும் அவர் இருக்கும் குதிரைகள் பூட்டிய மிகப் பெரிய கல் தேரும் கண்கொள்ளா பிரமாண்டம். இந்த தேர் 24 ராட்சத சக்கரங்கள், 7 குதிரைகளுடன் கூடியது. சூரியக் கதிர்கள் இங்கே குடிகொண்டுள்ள சூரியனாரின் சிலைமேல் விழும்படி கட்டப்பட்டுள்ளது.

1869ல், இப்போதிருக்கும் கோயிலின் பின்புறம் இருக்கும் கட்டடம் சரிந்து விழுந்துவிட்டது. அதுதான் பிரதான கோயில். இப்போது இருப்பது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான 'ஜக்மோகனா’ எனும் இடம். கோயில் வளாகத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள நவகிரகக் கோயிலில் பூஜை நடை பெறுகிறது. தென்மேற்குப் பகுதியில் சூரியனின் தேவியான சாயாவுக்கு கோயில் உள்ளது.

கல்லிலோர் காவியம், கோனார்க்!

ஜி.பிருந்தா

கதிரவனின் கருவறை!

'பெரியகோயில்’ பனிமயமாதா!

வேறுபாடு இல்லாமல் மாற்று மதத்தினரும் தரிசித்துச் சிறப்பிக்கும் தலம்... தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம்! அதன் பங்குத்தந்தை லெரின் டிரோஸ், மாதாவின் சிறப்புகளைப் பேசுகிறார்...

''கடந்த 1542ல் இப்பகுதிக்கு வந்த புனித பிரான்ஸிஸ் சவேரியார், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை போதித்து மக்களை உறுதிபடுத்தினார். இந்த ஆலயம் உருவாகியது. ஃபிலிப்பைன்ஸ், மணிலா தீவிலுள்ள கன்னியர்மடத்தில் இருந்த மாதா சொரூபத்தை சவேரியார் கேட்டார். அவர்கள் உடனே கொடுக்கவில்லை. சவேரியாரின் மறைவுக்குப் பிறகு 1555ல் அந்த சொரூபத்தை மணிலா மடத்தின் நிர்வாகம், கப்பல் மூலமாக அனுப்பி வைத்தது. இதோ இருக்கும் இந்த சொரூபம் இப்படித்தான் இங்கே வந்து சேர்ந்தது. இது ரொம்பவும் தத்ரூபமானது. மக்கள் மிகுந்த அன்புடன், அக்கறையுடன் பாதுகாக்கிறார்கள். ஒரு சமயம் ஆங்கிலேயருக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே தகராறு வந்தபோது இந்த மாதா சொரூபத்தை முயல்தீவுக்குள் கொண்டுபோய் பாதுகாப்பாக வைத்தார்கள் மக்கள்.

சுமார் 460 ஆண்டுகள் கடந்த இந்த ஆலயத்துக்கு, பெரிய அளவில் மக்கள் ஆதரவு இருப்பதால் 'பெரியகோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு புனித சவேரியார், புனித அந்தோணிசூசை, புனித அகஸ்டின்பெரைரா, புனித ஜோசப்வாசன் போன்ற நிறைய புனிதர்கள் வந்து சென்றிருக் கிறார்கள். ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, ஆகஸ்ட் 5ம் தேதி வரையிலும் சிறப்பாக நடைபெறும். விழாக்காலம் மட்டுமல்லாது எல்லா காலங்களிலும் சாதி, மதம் பாகுபாடின்றி மாற்று மதத்தவர்களும் மாதாவைக் காண வருகிறார்கள். இஸ்லாமிய பெண்கள் பர்தாவோடு வந்து மாதாவை தரிசிப்பதும், கடைசிநாள் விழா முழுவதுக்குமான மலர்களை இந்து ஒருவர் வழங்குவதுமே அதற்குச்சாட்சி.

இலங்கை, மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். விசேஷ நாட்களில் தங்கத்தேர் பவனி வரும். லட்சக்கணக்கில் மக்கள் மதபாகுபாடு பாராமல் கூடும் பெரிய விழாவாக இருப்பதால் பனிமயமாதாக் கோயில் விழா என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் விழா என்றே பெருமையாகப் பேசப்படுகிறது!'' என்றார் லெரின் டிரோஸ்.

எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்

கதிரவனின் கருவறை!

எப்போதும் அடியான்!

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆம், கண்ணியமிகு ரமலான் மாதம் கடந்துவிட்டது! 30 நாட்களும் உண்ணாமலும், பருகாமலும் வல்ல ரஹ்மானின் அருள்வேண்டி நாம் செய்த நோன்பு முற்றுப்பெற்றுவிட்டது!

அதிகாலை சஹர் நிய்யத்தில் நோன்பைத் தொடங்கிய அடியான், அதன்பின் சுபுஹ், லுஹர், அசர் என்று ஜமாத்தோடு தொழுவதும், மாலையில் பள்ளிவாசல்களில் நோன்புக்கஞ்சி வாங்கி வந்து தருவதும், இஃப்தாரைத் தொடர்ந்து மஹ்ரிப், இஷா, தராவிஹ் என்று தஹஜ்ஜத் வரை தொழுகையிலும், இறை வணக்கத்திலும் தன்னை முதன்மையாக்கியிருந்தான். தீமையான காரியங்களை விட்டு நீங்கி, நன்மையான காரியங்களில் தன் சிந்தையைச் செலுத்தியிருந்தான். நித்தமும் `அல்லாஹ் அல்லாஹ்’ என்று மொழிந்தவனாக இருந்தான். தன்னுடைய வருட வருமானத்தை கணக்கிட்டு ஷகாத் வழங்கினான். நோன்பாளிகளால் பள்ளிவாசல்களும் தொழுகையின்போது நிறைந்து காணப்பட்டன. ரமலான் அன்று காலையில் தொழுகைக்கு தக்பீர் கட்டி, தொழுகை முடித்து துஆ ஓதியபின் பள்ளிவாசல் வாயிலில் தன் செருப்பை அணிந்து சென்ற அந்த அடியான்... இல்லை அந்த மனிதன், இனிமேல் அடுத்த ரமலானுக்குத்தான் தன்னை அடியானாக கருதிக்கொள்வான். ஆம், ரமலான் சென்றுவிட்டது.

அல்லாஹ், ரமலானை நமக்குக் கொடுத்தது... நமது ஈமானியச் சுத்திகரிப்புக்கு மட்டுமின்றி, தொடர்ந்து வரும் காலங்களிலும் அடியானுக்கானச் சில படிப்பினைக்காகவும்தான். நோன்பின் மூலம் பசியைத் தெரிந்துகொண்டவர் அடுத்தவரின் பசியைப் போக்க வேண்டும். கூடுதலாக தான தர்மம் செய்ய வேண்டும். தவறுகளின் பக்கம் செல்லாமல் சத்திய வழியில் நடக்க வேண்டும். பொறுமையும் சகிப்புத்தன்மையும் கைகொண்டு விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். உண்ணாமலும், பருகாமலும் மட்டுமின்றி ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி நடந்தது போல், வரும் காலங்களிலும் மனக்கட்டுப்பாட்டை பேணி நடக்க வேண்டும். முக்கியமாக ஐவேளை தொழுகையையும் மேற்கொள்ளவேண்டும். இந்தப் படிப்பினைகளைத் தன் வாழ்நாளில் செயல்படுத்தினால் அவன் எந்நாளும் அல்லாஹ்வின் நேசமிகு அடியானாகத் திகழ்வான்!
வாருங்கள் இறைநேசராவோம்!

- எஸ்.ஆபித் அலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism