Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:
கேபிள் கலாட்டா!

கல்யாணமாம் கல்யாணம்!

ஶ்ரீதி ஜா... திங்கள் முதல் வெள்ளி வரை பாலிமரில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘இரு மலர்கள்’ டப்பிங் சீரியல் நாயகி. ஜீ டி.வி யில் இந்தியில் ‘கும்கும் பாக்யா’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் இது. சீரியலில் பெரிய கண்ணாடி போட்டு தைரியசாலியாக வரும் தி ஜா, பீகார் பெண். ‘தூம் மச்சாவோ தூம்’ என்ற டிஸ்னி சேனலின் காமெடி நிகழ்ச்சி மூலம் டி.வி-யில் என்ட்ரி பாஸ் வாங்கியவர். தொடர்ந்து ‘ஜியா ஜலே’, ‘ஜோதி’, ‘ராக்‌ஷாபந்த்’ என பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்தி சீரியல் நடிகர் விக்ராந்துடன் கிசுகிசுக்கப்பட்டபோது, ‘காதலிக்கவெல்லாம் எனக்கு நேரமில்லைப்பா. கிசுகிசுக்களில் என் பேரைக் கெடுத்துக்கவும் பிடிக்காது!’ என்றார். இப்போது அதே விக்ராந்துடன் மீடியா பார்க்க மீண்டும் கைகோத்து வருகிறார். விரைவில் திருமணம் எனவும் சொல்லப்படுகிறது!
அட்வான்ஸ் வாழ்த்துகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேபிள் கலாட்டா!

‘‘நான் வொர்கஹாலிக்!’’

லைஞர் டி.வி நிகழ்ச்சிகளில் அதிகம் தென்படும் சசிகலா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் திரைப்படத்தைப் பற்றி, அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையன்றே ‘மூவி ஸ்பெஷல்’ என சம்பந்தப்பட்ட படக்குழுவுடன் கலகலவென தொகுத்து வழங்குகிறார்.

‘‘கலைஞர் டி.வி மட்டுமில்ல, ஜீ டி.வி-யில ‘ஓம் காரம்’, கேப்டன் டி.வியில ரெண்டு குக்கரி ஷோனு, பறந்து பறந்து நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருக்கேன். ஃப்ரீலான்ஸ் வொர்கர். ஒரே சேனலில் கமிட் ஆகிறதைவிட, எல்லா சேனல்களிலும் எப்பவும், எந்த ஷோவும் பண்ணலாம், நெனச்சா லீவும் போட்டுக்கலாம் என்ற இந்த சுதந்திரம் எனக்குப் பிடிச்சிருக்கு. படிச்சது எம்.எஸ்ஸி., மைக்ரோபயாலஜி. மீடியா ஆர்வத்துல, சொந்த ஊரான சேலத்துல இருந்து சென்னைக்கு வந்துட்டேன். ஊர்ல இருக்கிற அம்மா, அப்பாதான் எனக்கு பெரிய மாரல் சப்போர்ட். பிடிச்ச வேலையைப் பார்க்கிறதால, மற்ற எல்லாத்தையும்விட வேலைக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். ஒரு ஷோ பண்ணணும்னா, ஊருக்கு அம்மாவைப் பார்க்கப் போறதைக்கூட கேன்சல் பண்ணிடுவேன். அந்தளவுக்கு சின்சியர்... வொர்கஹாலிக். சீரியல் சான்ஸ் வருது. இருந்தாலும், காம்பியரிங் மட்டும்தான் எனக்குத் தோதான களம்னு நினைக்கிறேன். அப்புறம், பிரியாணி ரொம்பப் பிடிக்கும். ஆனா, டயட்ல இருக்கிறதால நாக்கை ஆள வேண்டியிருக்கு!’’

என்ன ஒரு சோதனை?!

கேபிள் கலாட்டா!

`கலகல' கலக்கப்போவது யாரு - சீஸன் 5

விஜய் டி.வி-யில் மீண்டும் ஒளிபரப்பாகவிருக்கிறது, சேனலின் ரேட்டிங்கை எகிற வைத்த ‘கலக்கப்போவது யாரு - சீஸன் 5’. புது சீஸனில் ஈரோடு மகேஷ் இருக்கிறார் என ஸ்கூப் நியூஸ் கிடைக்க, அவரைத் தொடர்புகொண்டோம். ‘‘ஆமா, நான் இருக்கேன். ஆனா, தொகுப்பாளர் இல்ல... ஜட்ஜே நான்தான்!’’ என்று சர்ப்ரைஸ் கொடுத்த மகேஷ், நம்மை ‘ரொம்ப நல்லவய்ங்க’னு நினைத்து, இன்னும் சில ரகசியங்களையும் கொட்டினார்.

‘‘என்னோட சேர்த்து மொத்தம் அஞ்சு ஜட்ஜஸ்... நான், `மிமிக்ரி' சேது, பாலாஜி, பிரியங்கா, நந்தினி!’’

‘‘அப்போ புரமோ பேர்வழிகள்தான் நிகழ்ச்சியோட தூண்களா..?!’’

‘‘அட, நிகழ்ச்சியோட அரங்கம்தான் மிகப்பெரிய தூண். அந்த அளவுக்கு கலர்ஃபுல் விருந்தா பிரமாண்ட செட் போட்டிருக்கோம். மொத்தம் 40 போட்டியாளர்கள். நான் போட்டியாளரா கலந்துக்கிட்ட நிகழ்ச்சிக்கு, இப்போ நான் ஜட்ஜ். பெருமையும், சந்தோஷமும் தாங்கல. இனி, நீங்க ஒவ்வொரு ஞாயிறும் மதியம் சாப்பிட்டு முடிச்சவுடனே வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்கலாம். அப்புறம் இன்னொரு சீக்ரெட்... நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் போறது நம்ம சிவகார்த்திகேயன்! யார்கிட்டயும் சொல்லிடாதீங்க!’’
சொல்லிட்டா போச்சு!

கேபிள் கலாட்டா!

‘‘அதுதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்!’’

ன் மியூசிக்கில் அலப்பறை எதுவும் இல்லாம பக்கத்து வீட்டுப் பையன் லுக்ல வரும் கதிர்கிட்ட ஒரு சிட் சாட்!

‘‘எந்த ஊரு நீங்க?’’

‘‘சென்னையில இருக்கிறவங்க எல்லோரும் நிச்சயமா வெளியூர்ல இருந்து வந்தவங்கதான் என்ற உங்க அபார நம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஆனா, நான் இதே சென்னைப் பட்டினம்தான்.’’

‘‘மீடியா எப்படி..?’’

‘‘அம்மா டீச்சரா வேலை பார்க்கிற ஸ்கூல்லயே ஸ்டூடன்ட்டா படிச்ச பாவப்பட்ட பையன் நான். எல்லோரும் படிக்கிறாங்களேனு நானும் இன்ஜினீயரிங்ல போய் விழுந்து மாட்டிக்கிட்டேன். கஷ்டப்பட்டு ஒரு வழியா கோர்ஸை முடிச்சுட்டு, வேலையும் கிடைச்சு, ஜாயின் டேட்டுக்காக காத்துட்டு இருந்தப்போ, சன் மியூசிக் ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். செலக்டட்!’’

‘‘பி.இ... `விஜே’... டீச்சர் அம்மா திட்டலையா?’’

‘‘ஸ்கூல் படிக்கும்போதே கிளாஸ்ரூமைவிட பாட்டு, டான்ஸ்னு எப்பவும் மேடையிலயே கிடந்த குட்டிக் கலைஞன் நான். அதனால, ‘சரி போ!’னு விட்டுட்டாங்க!’’

‘‘கதிர் பெர்சனலா எப்படி?’’

‘‘நிறைய நிறைய ஃப்ரெண்ட்ஸ். எக்கச்சக்க சினிமா பார்ப்போம். என மனசுக்குத் தோணுறதைச் செய்வேன். நேர்மையா இருக்கணும்னு நினைப்பேன். ஏன்னா, அதுதானே பொண்ணுங் களுக்குப் பிடிக்கும்! இதை கொஞ்சம் ஹைலைட் பண்ணிச் சொல்லுங்க!’’

கேட்டுக்கிட்டீங்களா கேர்ள்ஸ்!

கேபிள் கலாட்டா!

ரசிகர் வீட்டுக் கதவை நடிகர் தட்டினால்..?!

மெரிக்காவின் ஃபாக்ஸ் நெட்வொர்க் சேனலின் பிரபல நிகழ்ச்சி, ‘நாக் நாக்’. இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாப் ஹாலிவுட் நடிகர், தன் ரசிகரின் குடும்பத்தை அவர் வீட்டுக்கே சர்ப்ரைஸாகச் சென்று நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதுடன், ஒரு பெரும்தொகையை அன்பளிப்பாகக் கொடுப்பார். நேரலையில் அந்தக் குடும்பத்தின் அளவில்லா சந்தோஷமும், திடீரென பணம் கைகளில் கொடுக்கப்படும்போது வெளிப்படும் ஆனந்த நெகிழ்ச்சியும் நிகழ்ச்சியை டாப் டிரெண்டுக்கு ஏற்றிவிட்டிருக்கிறது. சமீபத்தில், கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்காம், கலிஃபோர்னியாவில் உள்ள தன் ரசிகர் ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்ட, டேவிட்டைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்ணுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, அவருக்கு இன்னும் அதிர்ச்சி கொடுக்க அவர் கையில் 100,000 டாலர்களைக் கொடுக்க, மொத்தக் குடும்பத்தின் ஹார்ட் பீட் எகிறுவது மட்டுமல்ல... பார்க்கும் நமக்கும் அந்த எமோஷன்ஸ் கடத்தப்படுவது நிகழ்ச்சியின் ஹைலைட்!

விஜய்யோ அஜித்தோ `செக்'குடன் நம் வீட்டுக் கதவுகளைத் தட்டினால் எப்படி இருக்கும்?! சேனல் ஹெட்ஸ் நோட் பண்ணுங்கப்பா!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

`படித்ததில் பிடித்தது'...ஃபஸ்ட் கிளாஸ் நிகழ்ச்சி! 

``புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்து வரும் இந்த நாட்களில் சிலருக்கு எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. அவற்றைத் தீர்க்க, சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை மக்களுக்கு சேர்க்கும் நல்ல பணியை `பெப்பர்ஸ்’ தொலைக்காட்சி செய்து வருகிறது. சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் `படித்ததில் பிடித்தது’ என்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் தாங்கள் ரசித்துப் படித்த புத்தகத்தைப் பற்றி நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் உரையாடுகின்றனர். பல நல்ல புத்தகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பெப்பர்ஸ் டி.வி-க்கு நன்றியும், பாராட்டுகளும்!'' என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் சென்னை, கொளத்தூரில் இருந்து பிரேமா கார்த்திகேயன்.

கனிவான வேண்டுகோள்..!

``காஸ் மானியத்தை விட்டுக் கொடுக்கும்படி பிரதமர் வேண்டுவது போன்ற விளம்பரம் நெஞ்சை அள்ளுகிறது. ஏழைத் தாய்மார்கள் விறகொடித்து சமையல் செய்ய கஷ்டப் படுவதையும், அதனால் காற்று மண்டலம் மாசுபடுவதையும் அழகாக கூறுகிறார் மோடி. இதை பார்க்கும் அனைவருக்குமே தன் தாயின் நினைவு ஏற்படுவதை மறுக்க முடியாது. காஸ் மானியம் மட்டுமின்றி அனைத்து இலவசங்களையுமே தேவை இல்லாதோர் விட்டுக் கொடுத்தால், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வில் வெளிச்சம் வீசும். செய்வோமா நண்பர்களே!'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் சென்னை, மந்தைவெளியில் இருந்து ஆர்.சியாமளா.

ரிமோட் ரீட்டா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism