Published:Updated:

மொபைல் டென்டிஸ்ட்!

மொபைல் டென்டிஸ்ட்!

மொபைல் டென்டிஸ்ட்!

மொபைல் டென்டிஸ்ட்!

Published:Updated:
மொபைல் டென்டிஸ்ட்!

‘‘உணவை அரைத்து செரிமானத்துக்கு உதவுவது, முக அழகு, பேச்சு, உடலின் நுழைவு வாயில் என, பற்களின் ஆரோக்கியம் மிகமுக்கியம். அதில் பிரச்னைகள் வருகிறபோது, மருத்துவமனைக்கு வர இயலாத வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்களுக்கு நான் வீட்டுக்கே சென்று பல் சிகிச்சை அளிக்கும் ‘மொபைல் டென்டிஸ்ட்’ ஆக இருப்பதில், நிறைவு எனக்கு!’’
 
- இமைகள் மூடித் திறந்து சொல்கிறார், டாக்டர் வித்யா சபரி.

முகப்பேரில் உள்ளது டாக்டர் வித்யா சபரி பல் சிகிச்சை மருத்துவமனை. முகப்பேர் மட்டுமல்லாமல் இப்போது செங்கல்பட்டு வரைக்கும் மொபைல் மருத்துவச் சேவை செய்து வருகிறார், வித்யா. ‘‘நான் படிப்பை முடித்து மெடிக்கல் பிராக்டீஸ் ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றன. ஐந்து வருடங்களுக்கு முன், வயதான அம்மா ஒருவர் தனக்குப் பல் சிகிச்சை பெற, மருத்துவமனைக்கு வர முடியாத உடல் சூழலில் இருந்தார். இதனால் சிகிச்சை தள்ளிப்போய்க்கொண்டே இருக்க, அவரின் பல் பிரச்னையே இன்னும் பல பிரச்னைகளை அவருக்கு கொடுக்க ஆரம்பித்தது. அப்போதுதான் அவர் குடும்பத்தினரிம், ‘சரி, நானே வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிக்கிறேன்!’ என்றேன். சிகிச்சையை முடித்தபோது, அந்தக் குடும்பம் தெரிவித்த நன்றியில், நான் நெகிழ்ந்துபோனேன். அதிலிருந்து, வயோதிகக் காரணங்கள், பார்வையற்ற, உடல் செயல்பாடு குன்றிய மாற்றுத்திறனாளிகள், மனநோயுற்றவர்கள் போன்ற மருத்துவமனைக்கு வர முடியாத சூழலில் இருப்பவர்களுக்கு வீட்டுக்கே சென்று மொபைல் மருத்துவச் சேவை செய்ய ஆரம்பித்தேன்!’’ எனும் வித்யாவுக்கு, இதற்கு உந்துதலாக அவர் அம்மாவும், உதவியாக கணவரும் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘என் அம்மா ஒரு நர்ஸ். அதனால்தான் இந்த மருத்துவ உலகை, தொழில் என்பதையும் தாண்டி சேவையாகப் பார்க்கும் மனம் எனக்குக் கிடைத்தது. நோயாளிகளுக்குக் கட்டணத்தை முன்னிறுத்தி என் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதில்லை. சமயங்களில் சிகிச்சையை முடித்துவிட்டு, பேஷன்ட்டுகளின் பொருளாதாரச் சூழலுக்கு கட்டணத்தைத் தளர்த்திக்கொள்வதும் உண்டு’’ என்கிறார் வித்யா.

ஆரம்பத்தில் முகப்பேரில் மட்டும் ஆரம்பித்த ‘மொபைல் டென்டிஸ்ட்’ சேவை, இப்போது செங்கல்பட்டு வரை விரிவடைந்திருக்கிறது. கிளினிக்கில் வழங்கப்படும் அதே சிகிச்சை, மொபைல் சேவையிலும் வழங்கப்படும். சென்று வர காரைப் பயன்படுத்துகிறார். மருத்துவமனையில் என்ன கட்டணம் பெறுகிறாரோ அதே கட்டணத்தைத்தான் பெறுகிறார். வெளியூர்களில் இருந்து வருபவர்களிடம் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார். ‘‘ ‘ஒரு டாக்டரா இருந்துட்டு, இதென்ன வீடு வீடா போறது..?’ என்றெல்லாம் எனக்கு அணை போடாமல், இதில் எனக்குப் பலமாக இருக்கிறார் என் கணவர்!’’ எனும் டாக்டர் வித்யா, தன் இந்தச் சேவைக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

துரைநாகராஜன்
படங்கள்: ச.சந்திரமெளலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism