Published:Updated:

ஹேட்ரிக் சாம்பியன் ஜெனிதா!

ஹேட்ரிக் சாம்பியன் ஜெனிதா!

ஹேட்ரிக் சாம்பியன் ஜெனிதா!

ஹேட்ரிக் சாம்பியன் ஜெனிதா!

Published:Updated:

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டிகளில் வெற்றிகள் குவித்து வருகிற திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஜெனிதா பற்றி, அவள் விகடன் 18/11/2014 தேதியிட்ட இதழில், ‘கால்கள் இழந்தும் ஓடுகிறேன்! - நம்பிக்கை விதைக்கும் ஜெனிதா’ எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

ஹேட்ரிக் சாம்பியன் ஜெனிதா!

இந்நிலையில், கடந்த ஜூன் 27-ம் தேதி ஸ்லோவாகியா நாட்டில் உள்ள பிரட்டிஸ்வாலா நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில் (IPCA - World Individual Chess Championship) வென்று, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி ஹேட்ரிக் அடித்துள்ளார் ஜெனிதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘மூணு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன். 9 வயதில் செஸ் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சார் அப்பா. அதிலிருந்து 25 வருஷமா என் கால்களா இருந்தார் அப்பா. மூன்று முறை உலககோப்பை சாம்பியன், காமன்வெல்த் போட்டியில் வெண்கலம், உலக உடல் ஊனமுற்றோர், தனிநபர் போட்டியில் தங்கம்னு நிறைய ஜெயிச்சிருக்கேன். இதுக்காக நாங்க இழந்தது நிறைய.

அப்பாவோட பென்ஷன் புத்தகத்தை எல்லாம்கூட அடகு வெச்சு போட்டிக்குப் போய் வந்திருக்கேன். இந்த முறை திருச்சி சிவா எம்.பி.கிட்ட உதவி கேட்டோம். உடனே மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் பேசி, பயணச்செலவு, இதர செலவு
களை மத்திய அரசை ஏற்க வெச்சார். இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தரும் உதவினார்.

மூணு முறை சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுத்திருக்கேன். ஆனா, இதுவரை மத்திய, மாநில அரசுகள் சார்பில் பாராட்டோ, பரிசுத் தொகையோ அறிவிக்கல. அப்படி ஒரு பாராட்டு கிடைச்சா, இந்த போலியோ பெண்ணை தூக்கிச் சுமந்து சர்வதேச வெற்றி வரை கொண்டு போன எங்கப்பாவுக்கும், எனக்கும் ரொம்ப ஊக்கமா இருக்கும்'' என்று சொல்லும் ஜெனிதா,

``கிராண்ட் மாஸ்டர் போட்டியில் ஜெயிக்கணும். அதுதான் அடுத்த இலக்கு!’’ - என்கிறார் குரலில் உறுதி கூட்டியபடி!

சி.ஆனந்தகுமார்  படம்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism