Published:Updated:

வாசகிகள் கைமணம்

வாசகிகள் கைமணம்

வாசகிகள் கைமணம்

வாசகிகள் கைமணம்

Published:Updated:

தூள் கிளப்பும் சுவையில் துவையல்... பர்ஃபி!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200

வாசகிகள் கைமணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பறங்கிப்பருப்பு பர்ஃபி

தேவையானவை: உலர்த்தி, தோல் நீக்கிய பறங்கிப்பருப்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், வறுத்த ரவை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு டம்ளர், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், பாதாம் எசன்ஸ் அல்லது விருப்பமான எசன்ஸ் - சிறிதளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பறங்கிப்பருப்பை நெய் விட்டு வறுக்கவும். அதனுடன் முந்திரி, வறுத்த ரவை இரண்டையும் சேர்த்து கொஞ்சம் பாலில் ஊறப்போடவும் (அரை மணி நேரம் ஊறினால் போதும்). இவை அனைத்தையும் தேங்காய் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதனுடன் சர்க்கரை, மீதமுள்ள பால் ஆகியவற்றைச் சேர்த்து அடிகனமான பாத்திரத்தில் வைத்துக் கிளறவும். நெய்யைக் காய்ச்சி ஊற்றி மேலும் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம் எசன்ஸை விட்டுக் கிளறி இறக்கி, நெய்தடவிய தட்டில் கொட்டி பரப்பி, ஆறியபின் வில்லைகள் போடவும்.

- அனுராதா மணிவண்ணன், கோவை

வாசகிகள் கைமணம்

மல்டி வெஜிடபிள் துவையல்

தேவையானவை: சுரைக்காய்த் துருவல், கேரட் துருவல், சௌசௌ (பெங்களூர் கத்திரிக்காய்) துருவல், கோஸ் துருவல் - தலா ஒரு கப், தக்காளிக்காய், வெங்காயம் - தலா 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்), கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, தேங்காய்த்  துருவல் - ஒரு கரண்டி,  கடுகு, உளுத்தம்பருப்பு  - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, புளி - கோலிகுண்டு அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். மறுபடி வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், தக்காளிக்காயை வதக்கி... காய்கறி துருவல்கள், இஞ்சி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். தேங்காய்த் துருவலை கடைசியில் சேர்த்து வதக்கவும். வறுத்து வைத்திருக்கும் கலவை, புளி, உப்பு, வதக்கிய காய்கறி கலவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி, தோசை, இட்லிக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

- ஜி.கிருஷ்ணவேணி, சாலிகிராமம்

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism