Published:Updated:

‘ஈகோ கிச்சன்’... 1,050 ரூபாய் முதலீடு... 350 ரூபாய் லாபம்!

‘ஈகோ கிச்சன்’... 1,050 ரூபாய் முதலீடு... 350 ரூபாய் லாபம்!

‘ஈகோ கிச்சன்’... 1,050 ரூபாய் முதலீடு... 350 ரூபாய் லாபம்!

‘ஈகோ கிச்சன்’... 1,050 ரூபாய் முதலீடு... 350 ரூபாய் லாபம்!

Published:Updated:

பெண்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள ‘ஈகோ கிச்சன்’, மிகப்பெரிய சமையல் நெட்வொர்க். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் எட்டாயிரம் பேருக்கு உணவு தயாராகும் இந்த சமையல்கூடம் தொழில்ரீதியாக மட்டுமல்லாமல், பெண்களுக்கான வேலைவாய்ப்பை உண்டாக்கிக் கொடுக்கும் அக்கறையுடனும், அதைச் சென்றடையும் நேர்த்தியான திட்டமிடல்களுடனும் செயல்பட்டு வருவதால், முக்கியத்துவம் பெறுகிறது!

‘ஈகோ கிச்சன்’... 1,050 ரூபாய் முதலீடு... 350 ரூபாய் லாபம்!

‘ஈகோ கிச்சன்' (ECO - Enhancing Community Opportunities) நிறுவனத்தின் மேனேஜர் ‘ஈகோ’ சேதுலட்சுமி, அந்த ஆலமரம் பற்றிப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பொருளாதார வசதியில்லாத பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுதான், எங்கள் முக்கிய குறிக்கோள். சுமார் 18,000 சதுர அடி இடத்தில் விரிந்துள்ள இந்த சமையல் கூடத்தில், ஒரே சமயத்தில் ஒருவேளைக்கு 30,000 பேருக்கு உணவு தயார் செய்ய முடியும்... குறைந்த விலையில்! காய்கறி, மளிகை விற்கும் விலையில் குறைந்த விலை எப்படி சாத்தியம் என்று கேட்கலாம். அதற்கான வழியை எங்கள் டைரக்டர், மேனேஜிங் டிரஸ்டி, ஒய்.ஆர்.ஜி கேர் ஃபவுண்டர் சுனித்தி சாலமன் சொல்ல, அவர் கைகாட்டிய `பயோமாஸ் பிரிக்கெட்ஸ்' (Biomass briquettes) எனும் எரிபொருளைப் பயன்படுத்தி எங்கள் நிறுவனத்தின் புராஜெக்ட் மேனேஜர் கணேஷ் தன் முயற்சியால் இதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்’’ என்றவர், அது என்ன பயோமாஸ் பிரிக்கெட்ஸ் என்பதை விளக்கினார்.

‘‘பயோமாஸ் பிரிக்கெட்ஸ் என்பது, சமையலுக்கான எரிபொருள். மரத்தின் வேஸ்ட், ஜூட் வேஸ்ட், வேர்க்கடலை தோல், மாங்கொட்டை என கழிவுப் பொருட்களை மெஷின் மூலம் கம்ப்ரஸ் செய்து புட்டு் போல கொடுக்கப்படும் இந்த எரிபொருள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது, விலை குறைவானது. இதைத்தான் நாங்கள் சமையலுக்கு 90 சதவிகிதம் பயன்படுத்துகிறோம். அதனால்தான் எங்களால் குறைந்த விலையில் உணவைக் கொடுக்க முடிகிறது’’ என்றவர், இதன் மூலம் பெண்கள் எப்படித் தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுகிறார்கள் என்பதைச் சொன்னார்.

‘‘எங்களிடம் ஒரு மதியச் சாப்பாட்டின் விலை, 30 ரூபாய். இதைப் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் வாங்கி, தங்களுக்கு சௌகரிய மான ஏரியாவில், அதிகமாக எவ்வளவு விலை வைக்க முடியுமோ அவ்வளவு வைத்து விற்றுக்கொள்ளலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 35 மீல்ஸ் கொடுப்பது என்பது எங்களுடைய நிர்ணயம். ஒரு மீல்ஸுக்கு 10 ரூபாய் விலை வைத்து விற்றாலும், மூன்று மணி நேரத்தில் அவர்களால் 350 ரூபாய் சம்பாதிக்க முடியும். காலையில் குழந்தை, கணவரை அனுப்பிய பிறகு, வீட்டில் இருக்கும் அந்த மூன்று மணி நேரத்தில் இந்த உழைப்பைக் கையில் எடுத்தால், தங்களின் மாத வருவாயை அவர்கள் தாராளமாகப் பெருக்கிக்கொள்ள முடியும்.

‘ஈகோ கிச்சன்’... 1,050 ரூபாய் முதலீடு... 350 ரூபாய் லாபம்!

பொதுவாக, எந்தத் தொழிலிலும் முதலீடு தான் பிரச்னையாக இருக்கும். ஆனால், இங்கே பெரிய முதலீடு எல்லாம் கிடையாது. அடுத்த நாள் மீல்ஸுக்கான தொகையை, முதல் நாள் கொடுத்து புக் செய்ய வேண்டும்... அவ்வளவு தான். மயிலாப்பூர், மந்தைவெளி, ஜெமினி, சைதாப்பேட்டை என சென்னையின் பல இடங்களில் வறுமை நிலையில் உள்ள பெண்களைத் தேர்வு செய்து, இலவசப் பயிற்சி கொடுத்து, சாப் பாடு விற்பதற்கான ரோட்டோர கடைகளையும் இலவசமாக அமைத்துக் கொடுத்திருக்கிறோம். ‘கியாஸ்க்' (kiosk) என்று அழைக்கப்படும் அந்தக் கடையை, சைக்கிள் ரிக்‌ஷா போல டிசைன் செய்து கொடுத்திருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், பொருளாதார ஏணிக்காக எங்களை அணுகிய சில ஆண்களுக்கும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்!’’ எனும் சேதுலட்சுமி, இந்த உணவு விற்பனைப் பெண்களுக்குப் பதிவு செய்தல், பயிற்சி, பணி அமர்த்துதல் என மூன்று வார இலவசப் பயிற்சி அளிக்கப்படுவதையும் குறிப்பிட்டார்.

இறுதியாக, ‘‘1,050 ரூபாய் முதலீடும், மூன்று மணி நேரம் உழைப்பும் இருந்தால் போதும்... தினம் 350 ரூபாய் சம்பாதிக்கலாம். தன்னம்பிக் கையுடன் அடி எடுத்து வையுங்கள். அது உங்களை வெற்றியாளராக மாற்றும்!’’

என்ற சேதுலட்சுமி, `வாழ்த்துகள்' சொல்லி முடித்தார்.

‘ஈகோ கிச்சன்’... 1,050 ரூபாய் முதலீடு... 350 ரூபாய் லாபம்!

``குடும்பத்துக்கு உதவ முடியுது!''

‘ஈகோ கிச்சனி’ல் மூன்று பிரிவுகள் செயல்படுகின்றன. கதிர்தான், கதிர், அவுட் ஆஃப் தி பாக்ஸ். இதில் ‘கதிர்தான்’ எனும் பிரிவு, உதவ முன்வரும் கரங்கள் மூலம் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் பணியைச் செய்கிறது. ‘கதிர்’ எனும் பிரிவு, வறுமையில் இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ எனும் பிரிவு, கான்ஃபரன்ஸ், மீட்டிங், தீம் வெடிங் என ஆர்டரின் பேரில் வெளியிடங்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறது. இதன் கீழ், இவர்களுக்கு 15 கார்ப்பரேட் கிளையன்ட்டுகள் இருக்கிறார்கள் என்பதுடன், அந்த விற்பனை வேலையிலும் பெண்களுக்கு ரூபாய் 8,000 வரையிலான சம்பளத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்கள்.

இந்த அமைப்பு மூலம் பயன்பெற்று வருபவர் களில் ஒருவரான ராஜேஸ்வரி, ‘`2012-ல ரோட்டோரமா இருக்கிற `கியாஸ்க்' பார்த்துதான் ஈகோ கிச்சனைத் தொடர்புகொண்டேன். எனக்கு விற்பனை சம்பந்தமான பயிற்சியைக் கொடுத்தாங்க. எனக்கு மீல்ஸ் விற்பதைவிட கிலோ கணக்கில் எடுத்து விற்பனை செய்யுற வெரைட்டி ரைஸ் விற்பனை பிடித்திருந்தது. அதனால கிண்டி எஸ்டேட் பக்கத்துல நான் தினமும் மதியம் விற்பனை செய்றேன். பொதுவா பிரிஞ்சி கிலோ 204 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 184 ரூபாய்க்கும் எடுத்து விற்பனை செய்கிறேன். எப்படியும் ஒரு நாளைக்கு 350 ரூபாய்க்கும் மேல என்னால இதுல லாபம் பார்க்க முடியுது. இப்போ என்னால் இரண்டு குழந்தைகளையும் படிக்க வைக்க முடியுது. தனியார் கம்பெனிக்கு வேலைக்குப் போற என்னுடைய கணவருக்கும் என்னால உதவியா இருக்க முடியுது'' என்றார் புன்னகையுடன்!

வே.கிருஷ்ணவேணி  படங்கள்: கே.கார்த்திகேயன், வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism