Published:Updated:

சிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா!

சிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா!

சிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா!

சிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா!

Published:Updated:
சிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்... பல ஊடகவியலாளர்களை உலகுக்குத் தந்துகொண்டிருக்கும் உன்னத திட்டம்! 2015-16 ஆண்டு பயிற்சிப் பயணத்தில் கலந்துகொள்ள பல கனவுகளோடு விண்ணப்பித்திருந்த 2,713 மாணவர்களில் இருந்து பலகட்ட பரீசீலனைக்குப் பிறகு 75 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 33 பேர் பெண்கள்! இவர்கள் அனைவரும் ஜூலை 24, 25, 26 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் உற்சாகமாக பங்கேற்றனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு, மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தினார்கள்.

டிடி (திவ்யதர்ஷினி)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா!

‘‘ஒருமுறை தவறேதும் நிகழ்ந்துவிட்டால், ‘போச்சு அவ்வளவுதான்’ என்று முடங்கக் கூடாது. ‘சரி ஓ.கே... ஆனா, அடுத்தமுறை இது நேராமப் பார்த்துக்கணும்’ என்று திருத்திக்கொள்ளுங்கள். தவறே செய்யாமல் எப்படி நம்மைத் திருத்திக்கொள்ள முடியும்? தோற்காமல் எப்படிக் கற்றுக்கொள்ள முடியும்?!’’

அனிருத்

சிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா!

‘‘சோஷியல் மீடியாவின் தாக் கத்தை, ‘கொலவெறி’ பாடலின் ஹிட்டில் இருந்து இப்போது வரை உணர்ந்து வருகிறேன். ஸ்காட்லாந்திலிருந்து 70 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய புகைப்படத்துடன் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். ‘நீங்க என்ன பாடுறீங்க, என்ன மியூசிக் என்றெல்லாம் எனக்குப் புரியல. ஆனா, பல ஆண்டுகளா வீல் சேரிலேயே முடங்கிக் கிடக்கும் எனக்கு உங்க இசை உற்சாகத்தை கொடுத்திருக்கு!’ என்றார். அதை பெரிய பாராட்டாக, விருதாக மதிக்கிறேன்!’’

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா!

‘‘உண்மையான உழைப்பைக் கொடுத்து, அதுக்காக நேர்மையான வெற்றி கிடைக்கும்போது... சந்தோஷமாகக் கொண்டாடலாம். யாரின் வாய்ப்பையும் தட்டிப் பறிக்காமல், யார் காலையும் வாரிவிடாமல், நான் எனக்குத் தெரிந்ததை, எனக்குப் பிடித்ததை மற்றவர்களுக்கும் பிடிக்கும் விதமாகச் செய்கிறேன். இதனால் எனக்குப் பணம், புகழ், மக்கள் மனதில் இடம் என்று ஒரு கிரெடிட் கிடைக்கும்போது, அந்த வேலையை என்னால் இன்னும் ஆத்மார்த்தமாகச் செய்ய முடிகிறது. இதே ஃபார்முலாவை நீங்களும் ஃபாலோ செய்தால், உங்களுக்கும் அந்த வெற்றி கிட்டும்!’’

கடந்த2014-15 ஆண்டு மாணவ பயிற்சியாளர் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் 28 மாணவர்களுக்கு முதல் வகுப்பு, சிறப்புத்தகுதி, மிகச் சிறப்பு தகுதி, தலைசிறந்த தகுதி என்ற பிரிவுகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதில் விருதுபெற்ற பெண்கள், தங்களின் மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்...!

க.தனலட்சுமி (தலைசிறந்த தகுதி)

‘‘என் அண்ணன் க.பிரபாகரன், இந்த திட்டத்தில் தலைசிறந்த மாணவனா தேர்ச்சிபெற்றான். அவனைப் பார்த்து வந்த ஆர்வத்தில்தான் நானும் என் பயணத்தை ஆரம்பிச்சேன். இந்தியாவிலேயே முதன் முதலா தனக்கு ஹெச்.ஐ.வி நோய் இருப்பதை பகிரங்கமா அறிவிச்ச கௌசல்யாவை, அவள் விகடன் கட்டுரைக்காக சந்தித்தது மறக்க முடியாதது. ‘பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’ என்ற மிகப் பெரிய அமைப்பைத் துவங்கி எச்.ஐ-வியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்திட்டு இருக்கார். அவர் முகத்தை, மனதை உலகத்திடம் பகிர்ந்ததில், ரொம்ப பெருமையா உணர்றேன்!’’

ச.ஹர்ஷினி (மிகச்சிறப்பு தகுதி)

‘‘ஜூனியர் விகடனுக்கு பண்ணின ஒவ்வொரு அசைன்மென்ட் அனுபவமுமே ரொம்ப சுவாரஸ்யமானது. திருத்தணியில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்து வளர்ந்த வீடு, முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்ததைப் பற்றி கட்டுரை எழுதினப்போ, சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியாம அங்கே போட்டோ எடுக்கிறது ரொம்ப சவாலா இருந்தது. ஆனா, அந்த கட்டுரை பிரசுரமான இரண்டே நாட் களில், அந்த வீட்டைச் சுத்தம் செய்து முறையா பராமரிக்க ஆரம்பிச்சுட்டாங்கனு தெரிஞ்சப்போ, பேனாவின் வீச்சை இன்னொரு முறை உணர்ந்தேன், உணர்த்தினேன்!’’

சிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா!

சு.கற்பகம் (முதல் வகுப்பு)

‘‘ஒருநாள் அசைன்மென்ட் முடிச்சு வீடு திரும்ப நடு இரவுகிட்ட ஆயிடுச்சு. டூ-வீலர்ல வந்துட்டு இருந்தப்போ, போலீஸ் மறித்து, சலிப்போட விசாரிக்க ஆரம்பிச்சாங்க. நான் விகடன் ஐ.டி கார்டை காட்டியதும், ‘மேடம்!’னு சட்டுனு அவங்க பேச்சோட தொனி மாறினதோட, ‘ஓ.கே.. கிளம்புங்க மேடம்!’னு அனுப்பி வெச்சது... பத்திரிகை மேலான மரியாதையை எனக்குள்ள அதிகப்படுத்தினதோட, பொறுப்பையும் உணர வெச்சது!’’

சு.சூர்யா கோமதி (முதல் வகுப்பு)

‘‘இந்தியா சார்பாக சர்வதேசப் போட்டிகளில் எல்லாம் விளையாடி வரும் மாற்றுத்திறனாளிகளை, `சுட்டி விகட’னுக்காக சந்திக்கப் போனேன். அப்போ அவங்க அடிப்படை வசதிகள்கூட இல்லாம கஷ்டப்படுவதை உணர முடிஞ்சது. அவங்க வெச்சிருந்த சர்வதேச மெடல்களையும்... ரெண்டே ரெண்டு ஷூக்களையும் பார்த்தப்போ, எனக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு. உடனே என் கையிலிருந்த 2,000 ரூபாயை கொடுத்துவிட்டு வந்தேன். கட்டுரை பிரசுரமானதும், பலரும் அவங்களைத் தொடர்புகொண்டு உதவி செய்தாங்க. அந்த மாணவர்களோட ஆசிரியர் என்னை அழைத்து நன்றி சொன்னார். வாழ்க்கையில் உருப்படியான ஒரு விஷயம் செய்த திருப்தி கிடைச்சது!’’

ர.ரஞ்சிதா (முதல் வகுப்பு)

‘‘என் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமம். அந்தக் கிராமத்துப் பொண்ணான எனக்கு, பல அதிகாரிகளையும் தொடர்புகொண்டு கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆரம்பத்தில் தயக்கம், கூச்சம் இருந்ததுதான். ஆனா, இந்தத் திட்டம் எனக்குக் கொடுத்த ‘எக்ஸ்போஷர்’ அதையெல்லாம் என்னிடமிருந்து படிப்படியா விலக வெச்சது. இப்போ பயிற்சியின் முடிவில் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து, நிமிர்ந்து நிக்கிற தன்னம்பிக்கையை நான் உணர்றேன்!’’

ந.ஆஷிகா 

படங்கள்: வீ.நாகமணி, ஆ.முத்துக்குமார், ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார், தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism