Published:Updated:

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

Published:Updated:
காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

விதவிதமான வீட்டு அலங்கார மாதிரிகள், கன்டெய்னர் லாரி மாடல் வீடு, புதுமையான வீடியோ கேம்கள், மனதை அள்ளும் புகைப்படங்கள் என்று தங்களின் கைவண்ணத்தை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர் சென்னை ‘ஐ-காட்’ டிசைன் மற்றும் மீடியா கல்லூரி மாணவ - மாணவிகள். இன்டீரியர் டிசைன், அனிமேஷன் கேம் டிசைன், போட்டோகிராஃபி என்று தங்கள்

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துறைகளில் தாங்கள் உருவாக்கிய படைப்புகள் பற்றி அந்த இளம் எனர்ஜிகள் பேசும்போது... கனவுகள் சிறகடிக்கின்றன!

‘‘மழைத்துளி சொட்டி கீழே விழும்போது அவ்வளவு அழகா இருக்கும். ஆனா, அதுக்கு நிலையான உருவம் கிடையாது. கூம்பு வடிவா, பெரிய திவலையா, ஊசிக்கோடா... இப்படி பல வடிவில இருக்கிற அந்த மழைத்துளிகளைத்தான் என்னோட படைப்புக்கு கருவா எடுத்துக்கிட்டேன். அந்த துளிகளை எல்லாம் வரைஞ்சு, மழைத்துளிகள் மாதிரியே கூம்பு கண்ணாடிகள் செஞ்சு, நடுவுல மஞ்சள் விளக்குகள் பொருத்தி, வீட்டின் மேலே நடுப்பகுதியில் மாட்டினா... மழைத்துளிகள் விழற மாதிரியே இருக்கும்; கண்ணாடி உள்ளேயும் நீர் இருக்குற மாதிரி இருக்கும்!’’

- தன் படைப்பை கண்கள் படபடக்க விளக்குகிறார், ஷாலினி.

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!
காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

‘‘இன்டீரியர்னாலே மாடர்ன்தான்னு அவசியமில்ல. எங்க வீட்டு திரி விளக்கு, அகல் விளக்குதான் என்னோட டிசைன். திரி இல்லாம, எண்ணெய் இல்லாம ‘லெட் லைட்’ பயன்படுத்தி அதே பழைய விளக்குகள் வடிவத்துல கொண்டுவந்திருக்கேன். நமக்கு தேவைப்பட்ட வடிவத்துல இந்த விளக்குகளை மாத்திக்கலாம். என்னோட எதிர்கால இன்டீரியர் டிசைன்கள் எல்லாமே, பாரம்பர்யத்தைச் சார்ந்துதான் இருக்கும்!’’

- உறுதியான குரலில் சொல்கிறார், திவ்யா.

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

‘‘நாம பயன்படுத்தித் தூக்கிப் போடுற பிளாஸ்டிக் பாட்டில்கள் எல்லாம் இயற்கையை ரொம்ப பாதிக்குது. `இதுக்கு விழிப்பு உணர்வு பிரசாரம் பண்றதைவிட, அதையே விளையாட்டா மாத்திட்டா!' என்ற ஐடியாவில் கண்டுபிடிச்ச கேம் டிசைன் இது. பிளே ஸ்டேஷன்ல காசு போட்டு அல்லது ரீ-சார்ஜ் செய்த டோக்கன் போட்டு/கார்டு ஸ்வைப் பண்ணி விளையாடுற மாதிரி, நாங்க கண்டுபிடிச்சிருக்கிற இந்த கேம்ஸ் விளையாட போட வேண்டியது... பிளாஸ்டிக் கழிவான வாட்டர் பாட்டில்கள். ஆரம்பநிலையில் இருக்கும் எங்க கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் அசத்தும் பாருங்க!’’ என்கின்றனர், இயற்கை விழிப்பு உணர்வை விளையாட்டில் கொண்டு வந்திருக்கும் ஆஷிஸ் சிங்ஹாவும், விக்னேஷும்.

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

‘‘ஒரு கன்டெய்னர் லாரியில் வீட்டின் அமைப்பைக் கொண்டு வந்திருக்கேன். இதுல ரெண்டு அடுக்குகள் இருக்கு. கீழே 12 பேர் தங்கலாம். மேலே உள்ள சமையலறையில் 30 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். வருங்காலத்தில் இந்த மாதிரியான மொபைல் வீட்டின் அமைப்புகள் கண்டிப்பா வரும்!’’ என்று கணிக்கிறார், தீப்ஷிகா.

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

‘‘மாடித்தோட்டம், சூரிய மின்சார வசதியுடன் கூடிய வீட்டின் அமைப்புனு என்னோட இன்டீரியர் டிசைன் எல்லாமே வௌவால் மற்றும் பறவைகளின் சிறகுகள் செயல்படும் அமைப்பில் உருவாக்கினது. இயற்கை சீற்ற காலங்களில், வீட்டின் இரு புறங்களையும் பறவை சிறகுகளைப்போல மடக்கிப் பாதுகாத்துக்கலாம்!’’ என்று சொன்ன அர்வா கிடாபி,

‘‘புத்தக வாசிப்பை ஊக்குவிக்க பழைய பேப்பர்களை வைத்து நான் செய்த ‘பேப்பர் டிசைன்’ வீடு இது. இதைப் பெரிய அளவில் செய்து, பொது இடங்கள், மால்களில் பார்வைக்கு வைக்கலாம்!’’ என்றார் பெருமையோடு.

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

‘‘குழந்தைத் தொழிலாளர்களின் ஒருநாள் வாழ்க்கையை, என்னோட 24 புகைப்படங்களில் பதிவு செய்திருக்கேன். உழைப்பு, மகிழ்ச்சி, நேர்மை, ஒழுக்கம், சேமிப்புனு அவங்களை வெளிப்படுத்துற இந்தப் படங்களுக்கு, நிறைய பாராட்டுகள்!’’

- சந்தோஷம், போட்டோகிராஃபி மாணவர் வினய்க்கு.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த பிரமாண்ட விழாவில், இந்த இன்டீரியர் டிசைன் கண்டுபிடிப்புகள், கேம் கண்டுபிடிப்பு, போட்டோகிராஃபிக்கு விருதுகள் வழங்கப்பட, ஸ்டூடன்ட்ஸ் ஸோ ஹேப்பி!

கு.முத்துராஜா  படங்கள்: பா.அருண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism