Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

"தொழில் கடன்... கஷ்டமில்லை!”

வழிகாட்டும் ஒலி!

"தொழில் கடன்... கஷ்டமில்லை!”

Published:Updated:

வீட்டிலிருக்கும் பெண்களும் தொழில்முனைவோர் ஆகலாம் என்ற நல்முயற்சிக்காக,

வழிகாட்டும் ஒலி!

அவர்களுக்குத் தொழில்கடன் வழங்குவது மட்டுமின்றி, அந்தப் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பது, தொழிலுக்கான பயிற்சி, தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த உதவி, சேமிப்புக்கு வழி என்று செயலாற்றி வருகிறது, சென்னையில் உள்ள ‘வரம் கேப்பிடல்’ நிறுவனம். அதன் மேனேஜிங் டைரக்டர் லதா பாண்டியராஜன், திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்டவர். வடஇந்தியாவில் சி.ஏ. முடித்தவர். அவரிடம் பேசியதில் இருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கடந்த 15 வருடங்களாகச் சிறுதொழில் கடன் வழங்கிவருகிறோம். முதலில் தமிழ்நாடு மகளிர் திட்டத்தின் கீழ் பல பெண்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்துள்ளோம். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக ‘வரம் கேப்பிடல்’ மூலமாக நாங்களே கடன் வழங்கி வருகிறோம். தொழில் தொடங்கும் முன்பு, ஒரு வார காலம் அந்தத் தொழில் ரீதியான பயிற்சி, வாங்கும் கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது, எப்படி சந்தைப்படுத்துவது என அனைத்து விஷயங்களையும் கற்றுத்தருகிறோம். தொழில் தொடங்கிய பின்பும், தொழில் ரீதியான அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பூ வியாபாரம், காய்கறி வியாபாரம், மீன் விற்பனை போன்ற சிறு தொழில் முதல் அழகு நிலையம், சணல் பை தயாரிப்பு, கேன்டீன், ஃபேஷன் நகை விற்பனை, மொத்த விலை கடையிலிருந்து பொருட்கள் வாங்கி சில்லறை வியாபாரம் செய்வது என இப்படி பல தொழில்களைப் பெண்கள் வெற்றிகரமாகச் செய்துவருகிறார்கள். 

வழிகாட்டும் ஒலி!

ஒரு பெண்ணுக்கு மட்டும் தனிநபர் கடனாக இல்லாமல், குறைந்தது 4 முதல் அதிகபட்சம் 10 பெண்களுக்கு சேர்த்து ‘ஜாயின் லையபிலிட்டி’ முறையில் கடன் வழங்கி வருகிறோம். குறைந்தபட்சம் 15,000 முதல் 25,000 வரை, ஒரு குழுவுக்கு எத்தனை நபர்களோ அதைப் பொறுத்து கடன்தொகை வழங்குகிறோம். முதலீடு, பெண்களின் தொழில் முயற்சிக்குத் தடையாக இருக்கக்கூடாது எனும் எங்களின் அக்கறையின் வெளிப்பாடே, இந்த முயற்சிக்கான அடிநாதம்!’’

- தன்மையாகச் சொல்லும் லதா, வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி தொழில் தொடங்குவது, உற்பத்தியாகும் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பது உள்ளிட்ட பயனுள்ள பல தகவல்களை ’வழிகாட்டும் ஒலி’ மூலம் பகிரவிருக்கிறார்.

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை 044 - 66802912*   என்ற எண்ணை அழையுங்கள்... தொழில்முனைவோராகும் வழிகளை அறியுங்கள்!

இந்துலேகா.சி  படம்: தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism