Published:Updated:

``முதல் படி `பிளாக்கர்’... அடுத்த படி எழுத்தாளர்!’’

``முதல் படி `பிளாக்கர்’... அடுத்த படி எழுத்தாளர்!’’

``முதல் படி `பிளாக்கர்’... அடுத்த படி எழுத்தாளர்!’’

``முதல் படி `பிளாக்கர்’... அடுத்த படி எழுத்தாளர்!’’

Published:Updated:

`பெஸ்ட் அர்பன் சென்னை பிளாக்கர் அவார்டு' என்கிற விருதைப் பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கங்கா பரணி. இணைய உலகில் பிரபலமாக இருக்கும் பிளாக்கர் எனும் வலைப்பூ பக்கங்களில் பெண்களும் பரவலாக எழுதி வருகிறார்கள். இவர்களில் ஒருவராக இறங்கிக் கலக்கிக்கொண்டிருக்கும் கங்கா, குறும்பட இயக்குநர், நாவல் எழுத்தாளர் என்றும் அசத்திக்கொண்டிருப்பவர்! பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

``முதல் படி `பிளாக்கர்’... அடுத்த படி எழுத்தாளர்!’’

``ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை, மூணு வருடங்கள் ஜெயா டி.வி-யில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினப்போ, மீடியா, சினிமா மேல தீராத ஆசை வந்துருச்சு. ஆனா, வெள்ளித்திரையில் வேலை பார்க்க அனுமதி கிடைக்கல. ஆனாலும், குறும்படங்கள் மூலமா எனக்குள் இருந்த இயக்குநரை வெளிக்கொண்டு வந்தேன். பத்துக்கும் மேற்பட்ட தமிழ்க் குறும்படங்கள், அனிமேஷன் படங்கள் இயக்கியிருக்கேன். 2013-ல் ‘டைனி ஸ்டெப்’ என்ற என்னோட குறும்படம், ‘வீ கேர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ‘பெஸ்ட் ஃபிலிம்’ விருது வாங்கியது. அதே நிகழ்வில் ‘ஸ்பெஷல் மென்ஷன்’ என்ற பிரிவில் என்னோட `கேண்டில்ஸ்’ குறும்படமும் விருது வாங்கியது’’ என்ற இந்த 25 வயதுப் படைப்பாளி, தன் எழுத்துப் பயணம் பற்றிப் பேசினார்.
 
‘‘எழுத்து ஆர்வம், ‘scribbledbygb.blogspot.in’ என்ற பெயரில் என்னை ஒரு பிளாக் ஆரம்பிக்க வெச்சது. 3,000-க்கும் மேல ஃபாலோயர்ஸ் இருக்காங்க. ஒரு பிளாக்கரா நம்மை தரமா வெளிப்படுத்திட்டா, அடுத்த படி எழுத்தாளர்தான். இதுவரை இரண்டு ஆங்கிலப் புத்தகங்கள் எழுதியிருக்கேன். முதல் நாவல் `ஜஸ்ட் யூ, மீ அண்ட் அ சீக்ரெட்’ ஒரு  ரொமான்டிக் த்ரில்லர். ரெண்டாவது நாவல் `எ மினிட் டு டெத்’ ஒரு க்ரைம் த்ரில்லர். என் நாவல்களைத் திரைப்படமா எடுக்கக்கூடிய ஃபிலிம் ஸ்கிரிப்ட் ஆகத்தான் எழுதியிருக்கேன். அதுதான் என் விருப்பம்!’’ என்றவர்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கணவர் பெயர் ராஜன். நான் `பிளாக்’கில் எழுதின சிறுகதைகளில், என் காதலை ஒளிச்சு வெச்சு எழுதி, அவரைப் படிக்கச் சொன்னேன். அப்புறம்தான் அவருக்கு நான் அவரை லவ் பண்ணுவது புரிஞ்சது. கணவன்-மனைவியானோம். ஒரு கிரியேட்டரா நான் இயங்க, ரொம்ப உறுதுணையா இருப்பார். ஒரு பொண்ணு தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்கோட்டை நெருங்க... குடும்பத்தோட ஒத்துழைப்பு ரொம்ப அவசியம். அந்த வகையில் நான் பிளஸ்டு!’’ என்றவர் பள்ளியில் முதல் மொழியாக ஆங்கிலத்தையும், இரண்டாவது மொழியாக ஹிந்தியையும் கற்றதால், தமிழில் எழுத்து தகையவில்லை.

‘‘இப்போதான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். விரைவில் தமிழிலும் புத்தகங்கள் எழுதுவேன்.’’ - ப்ரெட்டி புன்னகை பூக்கிறார், கங்கா பரணி!

கே.அபிநயா  படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism