Published:Updated:

இனி, பட்டு நெய்யலாம் ஈஸியாக!

இனி, பட்டு நெய்யலாம் ஈஸியாக!

இனி, பட்டு நெய்யலாம் ஈஸியாக!

இனி, பட்டு நெய்யலாம் ஈஸியாக!

Published:Updated:

கைத்தறி பட்டுதான், பெரும்பாலான பெண்களின் திருமண சாய்ஸ். இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு பளபளக்கும் நம்மில் பலரும், அது எப்படி உருவாகிறது... இந்த பளபளப்புக்காக அந்த நெசவாளர்கள் செய்யும் அர்ப்பணிப்பான வேலைகள்... என்று எதையும் அறிந்திருக்க மாட்டோம்தானே!

இனி, பட்டு நெய்யலாம் ஈஸியாக!

பட்டுக் கைத்தறியைப் பொறுத்தவரையில் அனுபவம் வாய்ந்த சிறந்த நெசவாளர்கள் மட்டுமே நெய்ய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட பணியாளர்களும், கடின உழைப்பும் இணையும்போதே ஒரு பட்டுத் கைத்தறியை இயக்க முடியும். ஒரு நெசவாளி, தரையில் அமர்ந்தவாறு கால்கள் மூலம் 25 கிலோவுக்கும் அதிகமான எடையுடைய மர பெடல்களை தொடர்ந்து இயக்கிக்கொண்டும், கைகள் மூலம் ஷட்டில்களை இயக்கிக்கொண்டும் தான் பட்டுப்புடவையை உருவாக்க முடியும். அதிக டிசைன் மற்றும் வேலைப்பாடுகளுடன் கூடிய புடவை என்றால், எடையானது 50 கிலோவுக்கும் கூடுதலாகிவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி 15 - 20 ஆண்டுகள் தொடர்ந்து உழைக்கும் நெசவாளருக்கு உடல் ரீதியான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக அடுத்த  தலைமுறையானது, நெசவுத் தொழிலை விட்டு விலகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வேலைப் பளுவைக் குறைக்கும் வகையில், நுமாடிக் மற்றும் ஜக்கார்ட் அட்டை என்கிற புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி உள்ளது, சென்னையின் பட்டு நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம்.கே.வி.

இதைப் பற்றி பெருமையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்ட இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கே.சிவகுமார், ``நுமாடிக் அமைப்பு என்பது, அதிகமான பளு செலுத்தி இயக்க வேண்டிய கைத்தறியை, காற்றழுத்தத்தின் மூலமாக எளிதாக இயக்க வைக்கிறது. பட்டுப்புடவைகளில் வரும் பல்வேறு வடிவமைப்புகள், ஜக்கார்ட் அட்டைகள் மூலமாகவே பெறப்படுகின்றன. ஒரு புடவையை நெய்ய, நூற்றுக்கணக்கான அட்டைகள் தேவை. இவற்றைத் தயாரிப்பது மட்டுமல்ல, பாதுகாப்பதும் மிகக்கடினம். இதற்காகவே சிறிய சிப் போன்ற அமைப்பில் பல்வேறு வடிவமைப்புகளை பதிவு செய்யும் எலெக்ட்ரானிக் ஜக்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மூவாயிரத்துக்கும் அதிகமான புடவைகளுக்கு வடிவமைப்பு செய்யமுடியும்.

பொதுவாக, தறி வேலைகளில் பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களின் உடல் நிலையை கருத்தில்கொண்டே, இவை உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் நேரம், மனித உழைப்பு மட்டுமின்றி, பட்டுப்புடவைகளின் விலையும் 15 முதல் 20 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது!” என்று சொன்னார் சிவகுமார்!

கட்டுரை, படங்கள்: அ.பார்த்திபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism