Published:Updated:

ஆடிக் கூழ் மகத்துவம்!

ஆடிக் கூழ் மகத்துவம்!

ஆடிக் கூழ் மகத்துவம்!

ஆடிக் கூழ் மகத்துவம்!

Published:Updated:

டி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் துவக்க மாதம். எனவே, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் என்று இந்த மாதத்தில் வரும் வைபவங்களுக்கு அதீத மகத்துவம் உண்டு. குறிப்பாக, அம்மனைப் போற்றும் அற்புத மாதம் இது!

ஆடிக் கூழ் மகத்துவம்!

தமிழகமெங்கும் விழாக்கோலம் காணும் அம்மன் கோயில்களில் பிரதான இடம் பிடிப்பது, கூழ் வார்க்கும் பிரார்த்தனை. இது, தெய்வ வழிபாடு என்பதோடு நின்றுவிடாமல் மருத்துவம், சூழலுக்கு உகந்த உணவுப் பழக்கம், அதிதி உபசாரம் சார்ந்த நம் முன்னோரின் பாரம்பர்யத்தை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டுகிறது. பசிப் பிணி போக்கி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற கோட்பாடே ‘கூழ் வார்த்தல்’ வழிபாட்டின் தாத்பர்யம். பொருள் படைத்தோருக்கே சாத்தியம் என்றில்லாமல், கடைக்கோடி பாமரரும் எளிதில் நிறைவேற்றி மகிழும் எளிய பிரார்த்தனை இது என்பது முதல் சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடி மாதம் துவங்கும் வேளையில், வடகிழக்குப் பருவக்காற்று பலமாக வீசத் துவங்கிவிடும். சட்டென்று தட்பவெப்பம் மாறுதலைச் சந்திக்கும். கோடைகாலத்தைச் சந்தித்த மனித உடம்பானது, உடனடியாக குளிர்ச்சியான சூழலை ஏற்க மறுக்கும். இதனால், அம்மை, காலரா போன்ற பெரிய வியாதிகள் எளிதில் பரவும். இந்தச் சூழலுக்கு உகந்த எளிய உணவு... கூழ். ஆக, சூழலுக்கு உகந்த உணவை ஏற்று, நோய்நொடியில் இருந்து காக்க, கூழ் உணவையே பிரசாதமாக ஏற்கும் வகையில் நம் முன்னோர் அம்மன் கூழ் வைபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

- ரா.வளன்  படங்கள்: அசோக் சரவணன், கு.கார்முகில்வண்ணன்

ஆடிக் கூழ் மகத்துவம்!

கூழ் எப்படிச் செய்வது?

ழக்கமாக செய்யப்படும் கேழ்வரகு கூழுடன், தயிர், சின்ன வெங்காயம் மற்றும் அரிசிக் கஞ்சியைச் சேர்க்க வேண்டும். அரிசிக் கஞ்சியைச் சேர்ப்பதற்கு முன் அதனுடன் அதிமதுரம், சீரகம், திப்பிலி, குன்னிவேர், உழிஞ்சை வேர் (மூலிகை மருந்துக் கடைகளில் கிடைக்கும்) முதலான பல்வேறு மூலிகைகளைத் துணியில் கட்டி வைத்துக்கொண்டு, அரிசிக் கஞ்சியில் அந்தத் துணியை போட்டு சில மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, அந்தத் துணியை எடுத்துவிட்டு, கஞ்சியைக் கூழுடன் கலந்ததும், அதில் வேப்பிலையைப் போட்டு அம்மன் முன் வைத்து பூஜை செய்து, அனைவருக்கும் விநியோகிக்கலாம். 

ஆடிக்கஞ்சிக்கு ‘மாரியம்மன் மருந்து’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. இன்றைய சூழலில் கூழ் சிலருக்குப் பிடிக்காது என்பதால், பொதுவாக சாமி பெயரைச் சொல்லி அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் கூழ் பிடிக்காதவர்கள்கூட பயம் கலந்த பக்தியுடன், இதை வாங்கி அருந்துகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism