Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:
கேபிள் கலாட்டா!

‘‘சென்னையோட சாப்பாடு மேப் எங்கிட்ட!’’

லைஞர் டி.வி, ஜீ தமிழ் என்று ‘விஜே’ முகம் காட்டும் கிருத்திகா, கலகல சலசல பார்ட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஃப்ரெண்ட்ஸ்தான் என் உலகம். ப்ளஸ் டூ முடிச்சதும், ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் பிரியக் கூடாதுனு பிளான் பண்ணி, சென்னை, எஸ்.ஐ.இ.டி காலேஜ்ல ஒண்ணா சேர்ந்து பி.பி.ஏ படிச்சோம். அப்பவும்கூட, ஏதாவது படிச்சு வைக்கணுமேனு, மத்தியானம் தூங்கி எழுந்து நிம்மதியா போயிட்டு வர்ற ஈவினிங் காலேஜ்ல சேர்ந்தோம். சாப்பாடுன்னா போதும்... எந்த மலை, குகையும் ஏறிடுவேன். பார்த்தா அப்படித் தெரிய மாட்டேன். ஆனா, பானிபூரியில இருந்து பிரியாணி வரைக்கும் சென்னையில எது எது எங்கெங்கே டேஸ்ட்டியா கிடைக்கும்னு மேப் வெச்சிருக்கேன் பாஸ். இப்படியே போயிட்டிருந்த வாழ்க்கையில, மதுரையில ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குற வாய்ப்பு கிடைச்சது. அப்படியே மீடியா ஆர்வம் தொத்திக்க, இசையருவி, கேப்டன், இப்போ ஜீ தமிழ் நிகழ்ச்சிகள்னு ஏறி வந்திருக்கேன். சீரியல், சினிமா வாய்ப்புகளும் வருது!’’

கிருத்திகாவுக்கு ஒரு கிளிசரின் பாட்டில் பார்சல்!

கேபிள் கலாட்டா!

‘கனவு நிஜமாயிடுச்சுங்க!’’

‘‘என் கனவு நிஜமாயிடுச்சுங்க!’’

- உற்சாகத்தில் இருக்கிறார் ரக்‌ஷன். விஜய் டி.வி-யின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் ‘விஜே’. 

‘‘படிப்பில் விருப்பம் இல்லைன்னாலும், படிப்பில்லைன்னா மதிப்பைல்லைனு நம்புற மிடில் கிளாஸ் சென்னைப் பையன் நான். வேல்ஸ்ல பி.பி.ஏ படிச்சேன். ராஜ் மியூஸிக், கலைஞர் டி.வி, இசையருவி, ‘வெத்துவேட்டு’ படத்துல ஒரு ரோல்னு மீடியா பயணம். அப்புறம் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் அசிஸ்டன்ட் டைரக்டர் வாய்ப்பு. ‘சிரிச்சா போச்சு’ பார்ட்ல அப்பப்போ சின்னச் சின்ன ரோல்களில் தலைகாட்டினேன். இப்போ ‘கலக்கப்போவது யாரு’ `விஜே’. பெரிய ஷோனு ஆரம்பத்தில் பயம் இருந்ததுதான். ஆனா, நான் கொஞ்சம் தடுமாறினாலும் மகேஷ் அண்ணா, பாலாஜி அண்ணா, சேது அண்ணா எல்லாம் சமாளிச்சு என்னைக் காப்பாத்திடுவாங்க. பாக்கெட்ல கொஞ்சம் பணம் இருந்தா, ‘பிரியாணி சாப்பிடலாம்!’னுதான் தோணும். ஆனா, கொஞ்ச நாளா முடியல. யூ ஸி... நான் இப்போ விஜய் டி.வி ‘விஜே’. டயட், ஜிம்னு பிரியாணிக்கு டாடா சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு. கிடைச்ச வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கணும்; நிறையக் கத்துக்கணும்!’’

வாயுள்ள பிள்ளை!

கேபிள் கலாட்டா!

‘எனக்கு அவ்ளோ வயசாகலை!’

இந்தி டப்பிங் சீரியல்கள் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது கொரியன் நாட்டு டப்பிங் சீரியல்கள்தான் ஹாட்! அதிலும் இந்த யூத் பையன்கள், பெண்கள் பலரின் சாய்ஸ், புதுயுகம் சேனலில் ஒளிபரப்பாகும் ‘ஐரிஸ் (Iris)’ சீரியல்தான். சீரியல் ஹீரோயின் கிம் தா ஹி, பல பேரின் புரொஃபைல் பிக்சர் ஆகியிருக்கிறார். அவரைப் பற்றிக் கிடைத்த சில அரிய பெரிய தகவல்கள்...

இந்த தென்கொரியப் பெண்ணுக்கு வயது... 35. பார்க்க 16 வயதுப் பெண் போல இருப்பது, கொரிய பியூட்டிகளின் சீக்ரெட் போல. கொரிய நாட்டைப் பொறுத்தவரை மாடலிங், நடிப்பை எல்லாம் பள்ளிப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடுவார்கள். பள்ளிகளிலும் அதை ஊக்குவிப்பார்கள். ஆனால், கிம் கொஞ்சம் வித்தியாசம். ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடித்தவர். ஒருநாள் சாலையில் சென்றுகொண்டிருந்தவரை, ‘அட, நீங்கதான் எங்க விளம்பர மாடல்!’ என்று ஒரு நிறுவனம் அள்ளிக்கொண்டு போக, அப்படியே பல சீரியல்கள், பல விளம்பரங்கள். இப்போது தென் கொரியாவின் டாப் டி.வி நடிகைககளில் `கிம்’-க்கு முக்கிய இடம். சீரியல் நடிகையாக பல பெரிய விருதுகளைத் தட்டியிருக்கும் கிம், நல்ல பாடகியும்கூட! சில மியூசிக் வீடியோக்களும் ரிலீஸ் செய்திருக்கிறார். ஃபேஷன் டிசைனிங் பட்டதாரி என்பதால், தன் ஆடைகளை தானே வடிவமைத்துக்கொள்கிறார். கொஞ்சம் நாட்களாக கிசுகிசுக்களில் அடிபட்டு வரும் கிம், ‘எப்போ கல்யாணம்?’ என்றால், ‘அப்படி ஒண்ணும் எனக்கு வயசாகலையே!’ என்கிறார்!

கிம்... 30 ப்ளஸ் குயின்!

கேபிள் கலாட்டா!

சூப்பர் ஹீரோ காமிக் சீரிஸ்... நம்மூர்ல டோய்!

ஒரு வழியாக கலர்ஸ் டி.வி-யின் புதிய ஆங்கிலச் சேனலான `கலர்ஸ் இன்ஃபினிட்டி’யின் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் ஹிட் டி.வி சீரியல் ‘தி ஃபிளாஷ்’, கலர்ஸ் இன்ஃபினிட்டி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சூப்பர் ஹீரோ காமிக் சீரிஸின் நாயகன், ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேட்டர். அவருக்கு சாதாரண மனிதர்களைவிட அதிவேகமா செயல்படும் சக்தி கிடைக்கிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதுதான் ‘தி ஃபிளாஷ்’! க்ரெக் பெர்லண்டி, ஆண்ட்ரூ க்ரீஸ்பெர்க் மற்றும் ஜியோஃப் ஜான்ஸ் கதை, திரைக்கதையில் உருவாகியிருக்கும் இந்த சீரியல், ஒரு புது அனுபவம் தரும். சென்ற வருடம் அக்டோபர் முதல் தேதி அமெரிக்காவின் CW சேனலில் ஒளிபரப்பாக ஆரம்பித்து, இப்போது வரை டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அது கலர்ஸ் இன்ஃபினிட்டி சேனலிலும்... நமக்காக!

இப்படிப் புதுமையான விருந்தைதான் எதிர்பார்க்கிறோம்!

கேபிள் கலாட்டா!

360 டிகிரியில் டி.வி ஷோ!

ஸ்டார் ப்ளஸ் சேனல் தனது ‘டான்ஸ்+’ என்ற புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியின் ஒளிபரப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக யூடியூபின் ‘360’ என்ற ஆப்ஷன், இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இணையவாசிகளின் வீடியோ உலகமான யூடியூபில், ‘யூடியூப் 360’ என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது. ரியாலிட்டி நிகழ்ச்சிகள், ஏதேனும் சம்பவங்களை ஷூட் செய்யும்போது, பார்வையாளர்களை இன்னும் கவர்வதற்காக 360 டிகிரி கோணத்தில் ஷுட் செய்யும் முறையே, இந்த ‘யூடியூப் 360’. இதை முதல் முறையாக ‘டான்ஸ்+’ நிகழ்ச்சியில் பயன்படுத்தியுள்ளனர். நடனத்தின் அசைவுகளை இந்த 360 டிகிரி கோணம், இன்னும் சிறப்பாகக் காட்டும். மேலும் பார்வையாளர்கள் அரங்கத்தின் பிரமாண்டத்தை முழுமையாகக் கண்டு ரசிக்கவும் முடியும். ஆரம்பித்த சில நிமிடங்களிலே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது ‘டான்ஸ்+’. ‘வளர்ந்துவிட்ட டிஜிட்டல் உலகம், இப்போது வரும் வளைந்த டி.வி-க்கள், 3டி டி.வி-க்கள் என பெருகிவிட்ட தொழில்நுட்பங்களை எல்லாம் ஈடுகட்ட, இது எங்களின் மார்க்கெட்டிங் யுக்திகளில் ஒன்று!’ என்கிறார்கள், ஸ்டார் ப்ளஸ் நிறுவனத்தினர்!

அதானே!

360 டிகிரியில் ‘டான்ஸ்+’ நிகழ்ச்சியைக் காண சாம்பிள் வீடியோ லின்க்: https://www.youtube.com/watch?v=wfCfXe3JqIw

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

சேவை சிறக்கட்டும்!

“புதிய தலைமுறை டி.வி-யில் ஞாயிறுதோறும் மாலை 5.30 மணிக்கு ‘நம்மால் முடியும்’ என்ற நிகழ்ச்சியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர் ஆதாரங்களைத் தூர் வாருதல், சுத்தப்படுத்துதல் என சமூக ஆர்வலர்களுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு தூய்மைப்படுத்தும் பணியைப் பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதோடு, பாராட்டக்கூடியதாகவும் உள்ளது. மனிதவளத்தைக் கொண்டு நீர் வளத்தைப் பெருக்க,  பாதுகாக்க எடுக்கும் `புதியதலை’முறையின் முயற்சி மேலும் சிறக்க விரும்புவதோடு, மற்றவர்களும் இதை பின்பற்ற வேண்டுமென விரும்புகிறோம்’’ என்று சமூக அக்கறையுடன் சொல்கிறார் புதுச்சேரியில் இருந்து மகாலஷ்மி சுப்ரமணியன்.

எரிச்சலூட்டும் குறிப்புகள்!

“விஜய் டி.வி-யில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் `கனெக்‌ஷன் கனெக்‌ஷன்’ நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கிறது. ஆனால், சிலசமயம் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க தரும் குறிப்புகளும் அதன் சொலவடையும் அபத்தமாகவும், அருவருப்பாகவும் உள்ளன. இதுபோன்ற எரிச்சலூட்டும் குறிப்புகளைத் தவிர்த்து, நல்ல சொற்களை உபயோகித்து நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தலாமே?’’ என்று கோரிக்கை வைக்கிறார் மதுரையில் இருந்து என்.சாந்தினி

பிரமிக்க வைக்கும் பழமை!

“திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு `வசந்த்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `மண் பேசும் சரித்திரம்’ பகுதி மிக அருமையாக உள்ளது. சரித்திர குகைகள், கல்வெட்டுக்கள், புராதான சிலைகள் போன்றவற்றை தொடர்பான, இதுவரை யாருமே கண்டிராத பல அரிய காட்சிகளை, மிகவும் துணிவாக அந்த இடத்துக்கே சென்று அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றார்கள். பிரமிப்பூட்டும் இத்தகைய காட்சிகளை அனைவரும் காண வேண்டும்’’ என்று அழைப்பு விடுக்கிறார் சென்னை, பெரம்பூரில் இருந்து பி.கே.பிரேமிகா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism