Published:Updated:

'ஜி.கே'... கண்மணி!

'ஜி.கே'... கண்மணி!

'ஜி.கே'... கண்மணி!

'ஜி.கே'... கண்மணி!

Published:Updated:
'ஜி.கே'... கண்மணி!

மூவண்ணக்கொடி  உருவான வரலாறு!

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலையானது ஆகஸ்ட் 15, 1947. இந்த தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் இந்தியாவின் தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டது. ஆளும் அதிகாரத்தை இந்தியர்களிடம் விட்டுவிடப்போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளெமென்ட் அட்லீ அறிவித்தபோதும், வைசிராய் மவுன்ட்பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா ஆகிய இரு நாடுகளின் கொடிகளிலும் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான `யூனியன் ஜாக்' கொடியை ஒரு மூலையில் பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். கடுப்பாகிப்போன இரு நாட்டினரும் தங்களுக்கான தனித்துவ கொடியை வடிவமைக்க வேண்டும் என்று முழுமூச்சாக இறங்கினர். முக்கியமாக, `யூனியன் ஜாக் இருக்கவே கூடாது’ என்று முடிவெடுக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிங்காலி வெங்கையா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசியக்கொடி என்றும், புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட, நேதாஜி ஏற்றிய கொடிதான் நம் தேசியக்கொடி என்றும் ஆளாளுக்கு விவாதித்தனர்.

இந்நிலையில் ஸூரய்யா தயாப்ஜி, இப்போது நாம் உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசியக்கொடியை சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக வரைந்து தன் கணவர் பத்ருதீன் தயாப்ஜியிடம் கொடுக்க, அவர் இந்திய தேசியக்கொடியை உருவாக்கும் அட்ஹாக் கமிட்டியின் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்திடம் இதுபற்றி சொன்னார். அவருக்கும் பிடித்துவிட்டது. `நீங்களே காந்திஜியிடம் ஒப்புதல் பெற்று வாருங்கள்’ என்று அனுப்பினார். மாதிரி ஓவியத்தைக் கூர்ந்து கவனித்த காந்தி உடனடியாக மாதிரி கொடியினை தயார் செய்து காட்டுமாறு கூறினார். மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் நீள - அகலம் கொண்ட கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய் மனைவியிடம் பத்ருதீன் கொடுக்க, தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி மேலே காவி நிறமும், கீழே கரும்பச்சை நிறமும், நடுவில் வெள்ளை நிறமும் கொண்ட கொடியைத் தைத்தார். நடுவில் நீல நிற அசோக சக்கரத்தையும் வரைந்து கொடுத்தார். காந்திஜி ஒப்புதல் அளிக்க, பின்னர் இதுவே சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி என்று அட்ஹாக் கமிட்டியும் அறிவித்தது.

'ஜி.கே'... கண்மணி!

‘அடேங்கப்பா’ அனிமல்ஸ்!

மனித இனத்துக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் கொண்டவை சிம்பன்ஸி குரங்குகள்.

விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானது நீலத்திமிங்கலம் எழுப்பும் ஒருவித விசில் ஒலி, அதன் அளவு 188 டெசிபல்கள்.

ஓர் ஒட்டகத்தைவிடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப்பிடிக்க முடியும்.

நீர்யானையின் உதடுகளின் நீளம் மட்டுமே ஏறத்தாழ 2 அடி!

'ஜி.கே'... கண்மணி!

மியூசிக்... மியூசிக்...

புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்றவை துளைக்கருவிகள்

பறை, தவில், மிருதங்கம் போன்றவை தோல்கருவிகள்

ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை கனக்கருவிகள்.

'ஜி.கே'... கண்மணி!

‘எண்’ணோடு விளையாடு!

பிரமாண்டமான அரண்மனையில் மேல் தளத்துக்குச் செல்ல 100 படிகள் இருக்கின்றன. ஒவ்வொரு படியிலும் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப, கணக்கிட ஏதுவாக பொம்மைகள் வைக்கப்பட்டன. அதாவது ஒன்றாம் படியில் ஒரு பொம்மை, இரண்டாவது படியில் இரண்டு...என்று இப்படியே நூறாவது படியில் 100 பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இப்போது அந்த படிகளில் மொத்தம் எத்தனை பொம்மைகள் உள்ளன?

விடை : 5,050

n(n+1)/2 என்ற பார்முலா பயன்படுத்தி கணக்கிடவும்.(n=100).

‘ஃபுட்’ கொஸ்டின்!

உணவுப்பொருள் ஒன்றை செடியில் இருந்து பறித்ததும் வெளியே உள்ளவற்றை எல்லாம் உரித்துவிட்டு சமைப்போம். பின்னர் வெளியே இருப்பதை சாப்பிட்டுவிட்டு உள்ளேயிருப்பதை தூர எறிவோம். என்ன அது?

விடை: மக்காச்சோளம்.

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism