கொஸ்டீன் ஹவர் !

''எம்.பி.ஏ. மேற்படிப்பை வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள எங்கள் மகள் முனைப்பாக இருக்கிறாள். ஆனால், பத்திரிகைகளில் போலி யூனிவர்சிட்டிகளின் செய்திகளைப் படிக்கும்போது களேபரமாகிறது. தரமான ஃபாரின் பல்கலைக்கழகத்தைக் கண்டறிய வழிகள் இருக்கின்றனவா?'' என்று கேட் டிருக்கிறார் தாம்பரம் எஸ்.சதீஷ்குமார் அவருக்கு, விளக்கம் தருகிறார்... திருச்சியில் இயங்கும், மாணவர்களின் வெளிநாட்டு மேற் படிப்புகளுக்கு வழிகாட்டும் கன்சல் டன்ஸியான 'திருச்சி ப்ளஸ்’ இயக்குநர் சாவித்ரி சிவகுமார்.

''நீங்கள் அச்சப்படுவதைப் போல டுபாக்கூர் கல்வி நிறுவனங் கள் மேலை நாடுகளில் பரவலாக இருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால், சில எச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றினால், போலிகளைத் தவிர்த்து, முத்துக் களைப் பொறுக்க முடியும். சம்பந் தப்பட்ட கல்வி நிறுவனத்தின் இணைய தளத்தை அணுகினாலே, அவர்களின் சுயரூபத்தில் பெரு மளவு வெளிப்பட்டுவிடும். பொது வாக, தரமான கல்வி நிறுவனங் களில் கண்டிப்பு அதிகமிருக்கும். ஆனால் போலிகள், மாணவர்களின் தகுதி, கல்விக்கட்டணம் இன்னபிற விஷயங்களில் கொஞ்சம் தளர்வாகத்தான் இருப்பார்கள். சம்பந்தப்பட்ட நாட்டின் அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக தேடுவது பாதுகாப்பானது.

மேற்படி கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் படித்த, அல்லது படிக்கும் சீனியர் மாணவரின் பரிந்துரையை நாடலாம். அவர் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பது மிக அவசியம். ஏனெனில், பெரும்பாலான தரமற்ற வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் அகப்பட்டுக்கொள்ளும் மாணவர்கள், பிறகு அவர்கள் தரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, தங்கள் நாட்டில் இருந்து புதிய மாணவர்களை அந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்த்துவிடும் ஏஜென்ட்டுகளாகவும் மாறிவிடுகிறார்கள்.

இன்னொரு முக்கிய மோசடி... சர்வதேச டாப் கல்வி நிறுவனங்களின் கிளைகள் என்ற பெயரில், அருகிலுள்ள ஆசிய நாடுகளில் பெரும்பாலான போலிகள் முகாமிடுவது அதிகரித்து வருகிறது. உதாரணத்துக்கு, ஆஸ்திரேலியாவின் 'கர்டின் (Curtin)’ பல்கலைக்கழகத்தில் படிப்பது மதிப்புடையது என்பதால், போட்டி அதிகம். ஆனால், ஆஸ்திரேலியா சென்று படிப்பது செலவு பிடிப்பதாலும், இனப் பாகுபாடு பிரச்னைகள் அங்கே அதிகமிருப்ப தாலும், அந்தப் பல்கலைக்கழகத் தின் சிங்கப்பூர் கிளையில் படிக்க பெரும்பாலான இந்தியர்கள் விரும்புகிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு, 'கர்டின்’ போன்ற வெளிநாட்டிலிருக்கும் பிரபல பல்கலைக்கழகங்களின் பெயர், அடையாளம் போன்றவற்றில் நுணுக்கமான மாற்றங்களைச் செய்து, போலி பல்கலைக்கழங்கள் ஆரம்பித்து ஏமாற்றுவதும் அதிகரித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தில் இந்தியர்களின் பங்கு அதிகமாகத் தெரிந்தால், முன்னெச்சரிக்கை அதிகம் வேண்டும்.

உங்கள் நகரத்திலேயேகூட 'ஃபாரின் பல்கலைக்கழகத்தின் ஏஜென்ட்டுகள்’ எனக் கூறிக்கொண்டு, பகட்டான விளம்பரங்களுடன் சிலர் தற்காலிக அலுவலகம் திறந்திருப்பார்கள். வெளிநாட்டு மேற்படிப்புக்கு ஆர்வம் காட்டும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைக் குறிவைத்து இவர்களின் கேன்வாஸிங் அமையும். பல்கலைக்கழகம் குறிப்பிட்ட கல்விக் கட்டணத்தில் அதிரடித் தள்ளுபடி, படிப்புக் காலத்தில் பாதி குறைப்பு... போன்ற நடைமுறைக்குப் பொருந்தாத வாக்குறுதிகளை அள்ளி விடுவார்கள். இவர்களிடம் மிகமிக உஷாராக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு மேற்படிப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் நம்பிக்கையான நிறுவனங்களை அணுகலாம். இதிலும், தனிநபர்களைவிட நிறுவனங்களே பாதுகாப்பானது. மேற்படி ஆலோசனை நிறுவனங்கள் மாணவர், பெற்றோர் இரு தரப்புக்கும் கவுன்சிலிங்கை முதற்கட்டமாக மேற்கொள்ளும். அவர்கள் தெளிவு பெற்றதும், குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்ல எழுத வேண்டிய தேர்வுகள், படிப்பு விவரம், கல்விக்கடன் ஏற்பாடு, கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது, முன்னாள் மாணவர் அறிமுகம், விண்ணப்பித்தலுக்கான அத்தியாவசிய டாக்குமென்ட்டுகள் மற்றும் நடைமுறைகள், பணம் கட்டுவது, விசா ஏற்பாடுகள் இவை அனைத்துக்கும் உதவிகரமாக நின்று வழிநடத்தும்!’'