Published:Updated:

நள்ளிரவு வானவில் - 17

நள்ளிரவு வானவில் - 17

சென்னை... போலீஸ் ஹெட்குவார்ட்டர்ஸ்.

காலை பதினோரு மணி. 'இன் கேமரா’ செல் என்று அழைக்கப்படும் அந்தச் சிறிய கான்ஃபரன்ஸ் ஹாலின் நீள்வட்ட மேஜைக்குப் பின்னால் போலீஸ் அதிகாரிகள் நிமிர்ந்த கோடுகளாய் உட்கார்ந்திருக்க,

டி.ஜி.பி. கோகுலகிருஷ்ணன் தனக்கு முன்பாக நீட்டிக்கொண்டிருந்த சிறிய மைக்கில் கவலையும் கோபமும் கலந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவு வானவில் - 17

'’ரிட்டையர்ட் ஜட்ஜின் ஒரே மகன் ஞானேஷ் கொலை செய்யப்பட்டு, அவனுடைய அஸ்தியை ஒரு மண்சட்டியில் போட்டு மீராவின் வீட்டு மொட்டை மாடியில் வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இன்னிக்கு வரைக்கும் நடந்த அதன் தொடர்பான சம்பவங்களைப் பார்க்கும்போது ஒரு பக்கம் மிரட்சியாகவும், இன்னொரு பக்கம் கொஞ்சம் பயமாகவும் இருக்கு. இது ஒரு சைபர் க்ரைம் பிராஞ்ச் சம்பந்தப்பட்ட ஹைலி சோஃபிஸ்டிகேட்டட் க்ரைம். போலீஸ் கமிஷனர் ராஜகணேஷ் இந்த வழக்கில் தானே நேரடியான இன்வெஸ்டிகேஷனில் இறங்கி, பல உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கார். இந்த உண்மைகளுக்குள்ளே உறைந்து போயிருக்கிற ஒரு முக்கியமான விஷயம்... 'மிட் நைட் ரெயின்போ’. அதை தமிழில் சொல்றதாயிருந்தா

நள்ளிரவு வானவில் - 17

நள்ளிரவு வானவில்'. இது ஒரு ப்ராஜெக்ட். டெல்லியில் இருக்கும் சாஃப்ட்வேர் கம்பெனியான 'ஃப்யூச்சர் மிராக்கிள்’ அங்கே

நள்ளிரவு வானவில் - 17

குரூப் ஹெட்'டாக பணியாற்றிய ஞானேஷ் மூலம் லான்ச் பண்ணியிருக்கு. ஞானேஷ் கொலை செய்யப்பட்டு, ஒரு மண்சட்டியில் அஸ்தியாக வந்ததற்குக் காரணமே இந்த

நள்ளிரவு வானவில் - 17

நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட்தான்னு மீராவும் அன்வரும் தங்களோட ஸ்டேட்மென்ட்டில் சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்லை, அவங்க சொல்லியிருக்கிற இன்னொரு விஷயம் நம்மை அதிர்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய் நிக்க வெச்சிருக்கு. அதைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி போன வருஷம் ஊட்டி மலைப் பாதையில் நடந்த ஒரு வேன் விபத்தைப் பற்றிய செய்தி அறிக்கையை இப்போ வீடியோ காட்சியாக பார்க்கப் போறோம்'  சொன்னவர், தன் முன்னே இருந்த ரிமோட் கன்ட்ரோலை எடுத்து எதிர் சுவரில் பதிக்கப்பட்டு இருந்த டி.வி. திரையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து டி.வி.டி. ஆப்ஷனைக் 'கிளிக்’ செய்தார்.

டி.வி. திரை உயிர் பிடித்து நியூஸ் ரீடர் பெண்மணியின் வாசிப்பைக் காட்டியது.

'’டெல்லி மென்பொருள் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் ஆறு இளம் பெண்கள், உதகை மலர்க்கண்காட்சியைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில், பர்லியாறு அருகே கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும்போது தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு நூறடி ஆழப் பள்ளத்தில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேனை ஓட்டிய டிரைவர் குமாரவேல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.'

செய்தி வாசிப்புக்கு பிறகு பள்ளத்தில் உருண்டு கிடந்த உருக்குலைந்த வேனும், சாலையோரமாக கிடத்தப்பட்டிருந்த ஆறு பெண்களின் ரத்தம் தோய்ந்த உடல்களும் போட்டோ பதிவுகளாக பார்வைக்குக் கிடைத்தன.

இப்போது டி.ஜி.பிக்கு இடது பக்க நாற்காலியில் உட்கார்ந்திருந்த கமிஷனர் ராஜகணேஷ் தனக்கு முன்பாக இருந்த மைக்கில் பேசினார்.

'இந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்றளவும் மீடியாக்களின் பார்வையிலும், நம்முடைய டிபார்ட்மென்ட்டின் பார்வையிலும் இது ஒரு விபத்தாகத்தான் கருதப்பட்டு வந்திருக்கு... ஆனால், ஞானேஷ் மட்டும் இதை ஒரு விபத்து என்று நம்பாமல் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொலைச் சம்பவமாகவே நினைத்து வந்திருக்கிறார். தான் நினைத்ததை போலீஸிலும், தான் வேலை செய்யும் ஐ.டி. கம்பெனியின் மேல் அதிகாரிகளிடமும் சொல்லியிருக்கார். ஆனால், அதற்குரிய ஆதாரங்களை அவரால காட்ட முடியாததால நடந்தது விபத்துதான்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு. 'நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட்டுக்கு உறுதுணையாய் இருந்த வினயா, இந்துவதனா, பிருந்தா, யாமினி, ஓமனா, ராகவி இந்த ஆறு பெண்களும் இறந்துட்ட அதிர்ச்சியில் சில நாட்கள் விரக்தியான மன நிலையில் இருந்த ஞானேஷ் அதுக்கப்புறம் மனசைத் தேத்திக்கிட்டு ப்ராஜெக்ட்டை வெற்றிகரமா முடிச்சிருக்கார்..!'

சி.பி.சி.ஐ.டி. டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவர் மைக் அருகே குனிந்து ராஜகணேஷைப் பார்த்தபடி அந்தக் கேள்வியைக் கேட்டார்...

நள்ளிரவு வானவில் - 17
நள்ளிரவு வானவில் - 17
நள்ளிரவு வானவில் - 17

நள்ளிரவு வானவில்’ என்கிற அந்த ப்ராஜெக்ட்டை முடக்குவதற்காகவோ அல்லது அதைக் கைப்பற்றுவதற்காகவோ ஞானேஷும், இந்த ஆறு பெண்களும் கொலை செய்யப்பட்டிருக்கலாம்னு நீங்க நினைக்கறீங்களா ஸார்..?'

'மே பி... என்னுடைய கெஸ் வொர்க்கும் அதுதான்.'

'அது எது மாதிரியான ப்ராஜெக்ட்..?'

'நாட் நோன்... பட் சம்திங் அப்நார்மல். நான் இப்படிச் சொல்லக் காரணம், ஞானேஷ் தன்னோட ஜர்னி ஷெட்யூலிலிருந்து மாறுபட்டு டெல்லியிலிருந்து ரெண்டு நாளைக்கு முன்னாடியே சென்னை வந்து அவரோட ஃப்ரெண்ட் மணிகண்டன் வீட்ல தங்கியிருந்து அடையார் 'ஸ்கை வ்யூ’ ஹோட்டலில் நடந்த ஒரு ஹைடெக் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணியிருக்கார். அங்கே யாரோ சிலரை சந்தித்துப் பேசியிருக்கார். அதுக்கப்புறம் நான் அந்த விஷயத்தை ஸ்மெல் பண்ணி அந்த ஹோட்டலுக்குப் போய் ஒரு இன்வெஸ்டிகேஷனை நடத்தினேன். பட், இன் த மீன்வைல்... ஞானேஷின் மரணத்துக்குக் காரணமான எதிரிகள் ஹோட்டல் மானேஜர் புவனேந்திரனுக்கு பணத்தைக் கொடுத்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த ஞானேஷ் சம்பந்தப்பட்ட பதிவுகளை டெலிட் பண்ணிட்டாங்க..!'

'ஸார்! நான் என்னோட அஸம்ஷனைச் சொல்லலாமா..?'

நள்ளிரவு வானவில் - 17
நள்ளிரவு வானவில் - 17

ப்ளீஸ்...''

'ஞானேஷ் உருவாக்கின அந்த ப்ராஜெக்ட்டுக்கு எதிரான நபர்கள் அவர் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே ஏன் இருக்கக் கூடாது?'

'அப்படியிருக்க வாய்ப்பில்லைங்கிறது அன்வரோட ஸ்டேட்மென்ட். அன்வர் அந்த கம்பெனியில் ஹெச்.ஆர்.ஓவாக இருப்பதால் அந்த ஸ்டேட்மென்ட்டை நம்ப வேண்டியிருக்கு... அதுவுமில்லாமே ஞானேஷ், அன்வர்கிட்டே 'ஊட்டியில் நடந்தது விபத்து கிடையாது. யாரோ திட்டம் போட்டு 'நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட் உருவாக காரணமாயிருந்த ஆறு பெண்களையும் தீர்த்து கட்டியிருக்காங்க'னு சொல்லியிருக்கார். 'யார் அந்த யாரோ’னு அன்வர் கேட்டதுக்கு ஞானேஷ் பதிலும் சொல்லியிருக்கார்...'

'என்ன பதில்..?'

கமிஷனர் ராஜகணேஷ் டி.ஜி.பி. கோகுலகிருஷ்ணனிடம் திரும்பி தயக்கமான குரலில் கேட்டார்... '

நள்ளிரவு வானவில் - 17

ஸார்! அது யார்னு சொல்லிடலாமா?'

'அதை அனௌன்ஸ் பண்ணத்தானே, இந்த 'இன் கேமரா’ செல் மீட்டிங்கை கூட்டியிருக்கோம்... பேரைச் சொல்லிடுங்க... அதுக்கப்புறம் அது எவ்வளவு தூரம் உண்மை என்கிற விஷயத்தை டிஸ்கஸ் பண்ணிடுவோம்.' ராஜகணேஷ் மைக்கை சரியாக நிமிர்த்தி வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

'ஃப்யூச்சர் மிராக்கிள் என்கிற பெயரில் சென்னையிலும் பெங்களூரிலும் இயங்கி வருகிற ஐ.டி. கம்பெனியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அந்தக் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் யோகானந்த் தொழில் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வெரி பவர்ஃபுல் பர்சன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 'உத்யோக் ரத்னா’ விருதையும்  சென்ற வருஷம் பத்ம விருதையும் பிரசிடென்ட் கையால் வாங்கியவர். மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரை முன்கூட்டியே அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் எப்போது வேண்டு மானாலும் நேரடியாக சென்று பார்க்கக் கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் ரூபேஷ். கம்பெனியின் எக்ஸிக்யூடிவ் மானேஜிங் டைரக்டர் இந்த ரூபேஷ்தான். அப்பாவும் மகனும், மாசத்துல பத்து நாளாவது வெளிநாட்லதான் இருப்பாங்க. பெரும்பாலும் ஹாங்காங். நம்ம நாட்டில் இருக்கிற ஐ.டி. கம்பெனிகள் எந்த ஒரு ப்ராஜக்ட்டை தயாரிக்க முயற்சி பண்ணினாலும் அது பற்றிய விவரங்கள் அந்த விநாடியே அப்பாவுக்கும் மகனுக்கும் போயிடுமாம். அது ஒரு சாதாரண ப்ராஜெக்ட்டா... இல்லை, அசாதாரணமான ஒண்ணான்னு உடனடியா தரம் பிரிச்சு, அது நமக்கு தேவையா இல்லையான்னு முடிவு பண்ணிடுவாங்களாம். ப்ராஜக்ட் அசாதாரணமானதுன்னு தெரியவந்தா அதை எந்த வழியிலாவது தங்களோட கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்துடுவாங்களாம். இந்த 'நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட்டும் அவங்க பார்வையில் படப்போய்தான் இவ்வளவு அசம்பாவிதங்கள்.'

நள்ளிரவு வானவில் - 17

கமிஷனர் ராஜகணேஷ் பேச்சை சற்றே நிறுத்த ஒரு போலீஸ் அதிகாரி கேட்டார்....

'இப்ப நீங்க சொன்னதெல்லாம் அந்த அன்வர் கொடுத்த ஸ்டேட்மென்ட்தானே..?'

'ஆமா...'

'அது ஏன் ஒரு பொய்யான ஸ்டேட்மென்ட்டா இருக்கக் கூடாது... நான் இப்படி சொல்றதுக்குக் காரணம், யோகானந்த் சாதாரண நபர் கிடையாது. கிட்டத்தட்ட அவர் ஒரு கேபினட் மந்திரியின் அந்தஸ்தில் இருப்பவர்.'

'அவர் யாரா இருந்தா நமக்கென்ன..? தப்பு பண்ணினவங்க யாராயிருந்தாலும் சட்டத்துக்கு முன்னாடி ஒரு நாய்க்குட்டிதான்! யோகானந்த் தங்கமா இல்லை தகரமானு உரசிப் பார்க்கத்தான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே நான் பெங்களூரு கிளம்பறேன். இந்த 'நள்ளிரவு வானவில்’ மேட்டர் ஒரு விபரீதமான விஷயம். ஏற்கெனவே ஏழு பேர் இறந்து போயிருக்காங்க... இதை இன்வெஸ்டிகேட் பண்ணப் போகிற என்னுடைய உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது. ஆனா, உண்மையான குற்றவாளிகளோடு பெங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்புவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.'

ராஜகணேஷ் பேசிவிட்டு உட்கார்ந்தார். அந்த கான்ஃப்ரன்ஸ் அறையில் கனத்த நிசப்தம் நிலவியது.

பெங்களூரு.

அந்த ஹோட்டலின் ரூஃப் கார்டன் ரெஸ்டாரன்ட்டின் அரையிருட்டான மூலையோர மேஜைக்கு சாய்ந்தபடி உயிரை விட்டிருந்த யோகானந்தைப் பார்த்து உறைந்து போன ரிதன்யாவும் ரூபேஷும் சகஜமான நிலைமைக்குத் திரும்ப அரை நிமிஷ அவகாசம் தேவைப்பட்டது.

ரூபேஷ், அப்பாவை நெருங்கி அவருடைய தோளைப் பற்றி மெள்ள உலுக்கினான். அவருடைய உதட்டோரம் வழிந்துகொண்டிருந்த ரத்தம் சில துளிகளாய் காற்றில் சிதறியது. அவர் நாசியருகே கை வைத்து சுவாசத்தை சரிபார்த்தவன், முகம் இருண்டு போனவனாய் ரிதன்யாவிடம் திரும்பினான்.

'அப்பா உயிரோடு இல்லை!'

'எப்படி..?'

'ஸீம்ஸ் டு பி மர்டர்... யாரோ இங்கே வந்திருக்காங்க...'  சொன்ன ரூபேஷ் ரெஸ்டாரன்ட்டின் இன்னொரு மூலையில் மதுபாட்டில்கள் அணிவகுத்திருந்த கண்ணாடி அலமாரியை பாலீஷ் துணியால் துடைத்துக்கொண்டிருந்த அந்த சீருடை பணியாளை தன் தொண்டை தெறிக்கக் கூப்பிட்டான்.

'பேரர்...'

அரண்டு போய் திரும்பிய அவன் வேக வேகமாய் ஓடி வந்தான். ரூபேஷின் ஆவேசத்தைப் பார்த்து பயந்து போனவனாய் சற்றுத் தள்ளியே நின்றான்.

'ஸ... ஸ... ஸார்..!'

'நீ இங்கே எவ்வளவு நேரமா இருக்கே?'

கன்னடம் கலந்த தமிழில் 'அரை மணி நேரமா ஸார்...' என்றான்.

யோகானந்தைச் சுட்டிக்காட்டியபடி கேட்டான் ரூபேஷ்... 'இவரைத் தவிர இந்த ரெஸ்டாரன்ட்ல வேற யார் யாரெல்லாம் இருந்தாங்க..?'

'யாருமே இல்ல ஸார்... இவர் மட்டும்தான் அரை மணி நேரமா இருக்கார். என்கிட்ட ஷிவாஸ் ரீகல் விஸ்கி கேட்டார். கொடுத்தேன். ஏன் ஸார்... என்னாச்சு?'

'நடுவுல உன்னைக் கூப்பிட்டாரா?'

'இல்ல ஸார். நான்தான் ஒருதடவை வந்து

நள்ளிரவு வானவில் - 17

ஏதாவது வேணுமா ஸார்'னு கேட்டேன். அவர் சைகையாலேயே ஒண்ணும் வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டார். என்னாச்சு ஸார்... அவருக்கு? லிக்கர் அதிகமா கன்ஸ்யூம் பண்ணி ஏதாவது பிரச்னையா..?'

'ஒண்ணுமில்லை... நீ போ!'  ரூபேஷ் பேரரை அனுப்பிவிட்டு, ரிதன்யாவிடம் திரும்பினான்.

'இப்ப என்ன பண்றது..?'

'முறைப்படி போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட வேண்டியதுதான். ஆனா, அதுக்கு முன்னாடி ஹோட்டலுக்கு வெளியே எனக்காக காத்திட்டிருக்கிற திவாகருக்கும், பூங்கொடிக்கும் விஷயத்தை சொல்லிடறது நல்லது. ஏன்னா, அவங்க எதிர்பார்க்கிற 'நள்ளிரவு வானவில்’ விஷயம் இப்போதைக்கு உடனடியா கிடைக்கக்கூடிய வாய்ப்பு இல்லைன்னு அவங்களுக்குத் தெரிய வேண்டாமா..?'

'சரி, போன் பண்ணு.'

'என்கிட்டே செல்போன் இல்லை... உன் னோட செல்போனை வாங்கி நான் அவங்களை கான்டாக்ட் பண்ணவும் முடியாது. காரணம், அவங்க செல்போன் நம்பர் எனக்குத் தெரியாது. எனக்கு அவங்க ஒரு மணி நேர அவகாசம் கொடுத்திருக்காங்க. அதுக்குள்ளே நான் ஹோட்டலை விட்டு வெளியே வந்துடணும்..!'

'சரி, நீ வெளியே போய் அவங்களைப்

பார்த்து விஷயத்தைச் சொல்லு... ஒரு வாரம் பத்து நாள் அவகாசம் கேளு. அப்பாவோட மரணம் பற்றின எல்லா போலீஸ் ஃபார்மாலிடீஸும் முடிஞ்ச பின்னாடி நாம மறுபடியும் மீட் பண்ணி 'நள்ளிரவு வானவில்’ சம்பந்தமா பேசுவோம்.'

'இட்ஸ் ஓ.கே... நான் பேசிப் பார்க்கிறேன். நீ இதே இடத்துல இரு. நான் போய்ட்டு வந்ததும் போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிடலாம். அதுவரைக்கும் விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.'

ரிதன்யா சொல்லிவிட்டு வேக நடை போட்டு ரூஃப் கார்டனை விட்டு வெளியே வந்தாள். யோகானந்தின் திடீர் மரணம் அவளுடைய மனதை அடித்து துவைத்து காயப் போட்டிருந்தது. ஹோட்டலுக்கு வெளியே காரில் காத்துக்கொண்டிருக்கும் திவாகரும், பூங்கொடியும் யோகானந்தின் மரணத்தை எந்த அளவுக்கு சீரியஸாய் எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லையே?

லிஃப்ட்டில் இறங்கி வரவேற்பறைக்கு வந்தபோது அந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் சிநேகமாய் சிரித்து ஆங்கிலத்தில் கேட்டாள்...

'மேடம்..! மிஸ்டர் யோகானந்தைப் பார்த்து பேசிவிட்டீர்களா..?'

'இன்னமும் இல்லை. வெளியே காரில் ஒரு முக்கியமான ஃபைல் இருக்கிறது. அதை எடுப்பதற்காக இப்போது போகிறேன். மறுபடியும் பத்து நிமிஷத்தில் வருவேன்..!'

'மோஸ்ட் வெல்கம் மேடம்!'  அவள் அழகாய் தலையை சாய்த்து சிரிக்க, ரிதன்யா மெஷின்தனமாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தாள்.,

நூறு மீட்டர் தொலைவில் சாலையோர மரத்தடியில் திவாகரும் பூங்கொடியும்

வந்த கார் நின்றிருக்க, ரிதன்யா எகிறும் இதயத் துடிப்போடு காரை நோக்கி நடந்தாள்.

தொடரும்...

ராஜேஷ்குமார்  ஓவியங்கள்: அரஸ்