Published:Updated:

வாசகிகள் கைமணம்

வாழை - பலா அல்வா... வாவ்... என்ன ருசி!ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

வாசகிகள் கைமணம்

வாழை - பலா அல்வா... வாவ்... என்ன ருசி!ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

Published:Updated:
வாசகிகள் கைமணம்

வாழை - பலா அல்வா

தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, கொட்டை நீக்கிய பலாப்பழம் - ஒரு கப், பொடித்த வெல்லம் - கால் கப், நெய் - 2 டீஸ்பூன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை: பலாப்பழத்தை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். உரித்த வாழைப்பழத்தை  அதனுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நெய் ஊற்றி சூடாக்கி, அரைத்து வைத்துள்ள பழக்கலவை, பொடித்த வெல்லம் சேர்த்து கெட்டியாக கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும். தேவையெனில் மேலும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துத் தயாரிக்கலாம்.

- கீர்த்தி, பெங்களூரு

வாசகிகள் கைமணம்

சாமை அதிரசம்

தேவையானவை: சாமை அரிசி - அரை கிலோ, வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சாமை அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் நிழல் உலர்த்தலாக உலர்த்தி, மெஷினில் அல்லது மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

கடாயில் வெல்லத்தைப் போட்டு சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, பின்னர் மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகு மிட்டாய் போன்று தளுக்கு பதம் வந்தவுடன் நெய், சாமை அரிசி மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி எடுக்கவும் (மாவு தளர்வாக இருக்க வேண்டும். ஆறியதும் கெட்டியாக, தட்டும் பதத்துக்கு வந்துவிடும்). கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை உருண்டைகளாக எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தட்டி, எண்ணெயில் போட்டு பொரிக்கவும். அதிரசத்தை வெளியில் எடுத்ததும், அதை நன்கு அழுத்தி எண்ணெயை எடுத்துவிட்டு, சேமித்து வைக்கவும்.

- கீதா, சென்னை-44

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism