Published:Updated:

பணம், உங்கள் பலம்!

வயதுக்கேற்ற முதலீடு!

பணம், உங்கள் பலம்!

வயதுக்கேற்ற முதலீடு!

Published:Updated:

டந்த இதழில் எந்தத் தேவைக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பார்த்தோம். இந்த இதழில் வயதுக்கு ஏற்றபடி எப்படி முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பணம், உங்கள் பலம்!

இளம்பெண் ஒருவர் பங்குச் சந்தையில் அதிகமாக முதலீடு செய்து அதிக லாபம் பார்க்கிறார் என்பதால் வயதான பெண் ஒருவர் அதைப் பின்பற்றுவது அவ்வளவு நல்லதல்ல. காரணம், முதலீட்டில் உள்ள ரிஸ்க். இளம்பெண் என்கிறபோது அவருக்குப் பங்குச் சந்தை முதலீடு மூலம் இழப்பு ஏற்பட்டாலும், அவரின் இளம் வயதுக்கு பொறுமையாக இருந்து அடுத்து வரும் ஆண்டுகளில் லாபம் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனோதிடமும் இளம் பெண்ணுக்கு இருக்கும். வயதான பெண்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குச் சந்தை முதலீட்டு ஃபார்முலா..!

பொதுவாக, ஒருவரின் மொத்த முதலீட்டில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு என சர்வதேச அளவில் ஒரு ஃபார்முலா இருக்கிறது. முதலீடு செய்பவரின் வயதை 100-ல் இருந்து கழித்தால் கிடைக்கும் எண்ணை சதவிகிதமாக பாவித்து, அவரின் மொத்த முதலீட்டில் அந்த சதவிகித தொகையை பங்குச் சந்தை யில் முதலீடு செய்தால் ரிஸ்க் குறைக்கப்படும்.

உதாரணத்துக்கு ஒருவரின் வயது 25 என்றால் அவரின் மொத்த முதலீட்டில் பங்குச் சந்தையில் 75%-ஐ மேற்கொள்ளலாம். அதாவது, 100-25=75. மீதியை தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட் / கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் எனப் பிரித்து முதலீடு செய்யலாம் (எந்த வயதுப் பிரிவினர் எந்த சொத்துப் பிரிவில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அட்டவணையில் விரிவாகத் தந்துள்ளோம்). இந்த ஃபார்முலா கண்டிப்பாக இத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. 5 முதல் 15% வரை முன் பின் இருக்கலாம்.

பணம், உங்கள் பலம்!

இங்கே பங்குச் சந்தை முதலீடு என்பதில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களும் அடங்கும். இவை இரண்டிலும் கலந்து முதலீடு செய்யலாம். இதேபோல் ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் கலந்து முதலீடு செய்யலாம்.

வயதுக்கு ஏற்ற முதலீடு என்கிறபோதும் சில விதிவிலக்குகள் உள்ளன. பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்தவர் என்றால் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்துக்கொள்ளலாம். அடுத்து, பெண் பிள்ளைகளுக்கு அதிக  தங்க நகைகளை போட விரும்புபவர்கள் தங்கத்துக்கான முதலீட்டை அதிகரித்துக்கொள்வதில் தப்பில்லை. நம் சமூகத்தில் வீடு என்பது அந்தஸ்தாகப் பார்க்கப்படுகிறது. சொந்த வீடு இருப்பவர்கள், மேற்கொண்டு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதே நேரத்தில், தேவைக்கு அதிகமாக பணம் இருக்கும்போது மனையில் முதலீடு செய்து வைப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள முதலீட்டு பார்முலாவை 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப முதலீட்டை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது.

சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism