Published:Updated:

'ஜி.கே'... கண்மணி!

'ஜி.கே'... கண்மணி!

'ஜி.கே'... கண்மணி!

'ஜி.கே'... கண்மணி!

Published:Updated:

குட்டிக் கதை!

தீரனுக்கு சொர்க்கம்/நரகம் குறித்து பல சந்தேகங்கள். `உண்மையிலேயே அவை  இருக்கின்றனவா? உண்மையென்றால், எங்கே இருக்கின்றன? எப்படிப் போவது?' என்று நாளுக்கு நாள் அவனுக்கு சந்தேகம் வலுத்துக்கொண்டே வந்தது.

ஒருநாள் தன் ஊருக்கு துறவி ஒருவர் வருவதை அறிந்துகொண்டவன், தன்னுடைய கேள்விக்கு விடை அவரிடம்தான் கிடைக்கும் என்று அவரைக் காணச் சென்றான். அவர் அப்போது தியானத்தில் ஆழந்திருந்தார். இரண்டு முறை அழைத்தும் துறவியிடமிருந்து பதில் இல்லை. மூன்றாவது முறை சத்தமாக அழைத்தான். ம்ஹூம்... எந்த பதிலும் இல்லை. தீரனுக்கு கோபம் தலைக்கேறியது. ``இத்தனை முறை அழைக்கிறேன்... திரும்பிக்கூட பார்க்காமல் உட்கார்ந்திருக்கிறாயா'' என்றபடி, அருகில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கித் துறவியின் மேல் போடச் சென்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஜி.கே'... கண்மணி!

சட்டென்று சுதாரித்த துறவி, `‘நரகத்தில் இருந்தாலே இப்படித்தான்’' என்று முணுமுணுத்தார். இதைக் கேட்ட தீரன் திடுக்கிட்டு சற்றே பின்வாங்கி, ``தேவையில்லாமல் கோபப்பட்டுவிட்டேனோ? நீண்ட காலமாக இருந்த என் சந்தேகம் தீரப்போகிறது என்று ஆசையுடன் வந்தேன். நீங்கள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தது கோபத்தை வரவைத்துவிட்டது. மன்னித்துவிடுங்கள்'' என்று கெஞ்ச...

``இதோ, இப்போது சொர்க்கத்துக்கு வந்துவிட்டாய். சொர்க்கம், நரகம் இரண்டுமே நம் மனங்களில்தான் இருக்கின்றன'' என்று சொல்லிக்கொண்டே துறவி நகர, தீரனும் தெளிவு பெற்றவனாய், `இனி எப்போதும் முன்கோபம் கொள்வதில்லை' என்று முடிவெடுத்தான்.

'ஜி.கே'... கண்மணி!

ந.ஆஷிகா,ஜெ.பாரதி  ஓவியம்: சேகர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism