Published:Updated:

ஸ்குவாஷ் வெட்ஸ் கிரிக்கெட்!

ஸ்குவாஷ் வெட்ஸ் கிரிக்கெட்!

ஸ்குவாஷ் வெட்ஸ் கிரிக்கெட்!

ஸ்குவாஷ் வெட்ஸ் கிரிக்கெட்!

Published:Updated:

ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் - கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திருமணம்... மீடியாவுக்கு சமீபத்திய ஸ்வீட் ட்ரீட்!

ஸ்குவாஷ் வெட்ஸ் கிரிக்கெட்!

பயிற்சியாளர் பாசு ஷங்கரிடம் தீபிகா உடற் பயிற்சிக்குச் செல்ல, தினேஷ் கார்த்திக்கின் உடற்பயிற்சியாளரும் அவரே! அங்கு மலர்ந்தது இருவருக்குமான நட்பு. `தீபிகா - தினேஷ் காதல்’ என இரண்டு வருடங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அதேவேகத்தில் இருவருக்கும் திருமணம் என்ற செய்தியும் வெளியானது. எனினும் இருவரும் விளையாட்டுத் துறையில் மிகவும் பிஸியாக இருந்துவந்த நிலையில், அப்போதைக்கு நிச்சயம் மட்டும் செய்துகொண்டு, `2015-ல் திருமணம்’ என அறிவித்தனர். அதன்படி கோலாகலமாக இரு வீட்டார் முறைப்படியும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு சென்னையின் பிரபல தேவாலயத்தில், வெள்ளை கவுனில் தேவதை போல் தீபிகா காட்சியளிக்க, கோட் சூட் சகிதமாக தினேஷ் கார்த்திக். ‘அந்த கவுன் அமெரிக்காவில் இருந்து பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றன செய்திகள். பாரம்பர்ய கிறிஸ்தவ முறைப்படி முடிந்தது திருமணம். இதனையடுத்து ஆகஸ்ட் 20-ம் தேதி தெலுங்கு நாயுடு முறைப்படியும் திருமணம். மஞ்சள் நிறப் பட்டுப் புடவையில், அழகான நகைகள், அதைவிட அழகான புன்னகை என வசீகரித்தார் 23 வயது தீபிகா.

புதுப்பெண்ணும், புதுமாப்பிள்ளையும் இப்போது விளையாட்டு உலகின் வாழ்த்துக்களை வாங்கிக்கொள்வதில் செமபிஸி!

ஷாலினி நியூட்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism